Tuesday, April 28, 2009

தனி ஈழம் வேண்டி வாக்கெடுப்பு

கடையடைப்பு(டாஸ்மாக் தவிர்த்து), திடீர் உண்ணாவிரதம் என்று எதையாவது செய்து மக்களை திசை திருப்புவதில் கை தேர்ந்தவர் கலைஞர். அவரின் கலைத்திரமையய் பாராட்டித்தான் அவருக்கு கலைஞர் பட்டம் கொடுக்கப்பட்டதாயின், அந்த பட்டத்திற்க்கான உச்சகட்ட நாடகத்திறமையயை கருணாநிதி வெளிப்படுத்திவிட்டார். அதையும் நம்பி ஒரு நிமிடம் நாமும் ஏமாந்து போய்விட்டோம்தான், இலங்கை விமானங்கள் குண்டு வீசும்வரை.

நேற்றுவரை இலங்கையின் இறையாணமைக்குட்பட்டுத்தான் தமிழர்களுக்கு சுயாட்ச்சி வழங்க வேண்டும் என்று கூறிவந்த செயலலிதா இன்று, தனித்தமிழீழம் அமைத்து தருவேன் என்று கூறி மக்களிடம் ஒரு சுனாமியை ஏற்படுத்திவிட்டார். இவரும் ஒரு (திரைக்)கலைஞர்தான் என்பது இவரின் கடந்த காலத்தை புரட்டுபவர்களுக்கு தெரியும்.

தீர்க்கமான சிந்தனையுள்ள தமிழர் நலனில் அக்கரை கொண்ட தலைவரை இன்னும் இந்த தமிழகம் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படியொரு தலைவன் கிடைக்கும்வரை இன்றைய சமகால அரசியலில் நம்மால் முடிந்த, அல்லது நம்முடைய சிந்தை தெளிவை இந்த தேர்தலில் நாம் தெரிவிக்க வேண்டும்.

செயலலிதாவையம் கருணாநிதியையும் தவிர இன்றைய நிலையில் மத்தியில் ஆட்சி செலுத்துவதற்க்கு வேறு யாரும் இல்லை என்பது நிதர்சனம். அதனால் இவர்களுக்கு ஓட்டுப்போடுவதால் ஏற்ப்படப்போகும் நன்மை தீமைகளை பற்றி ஒரு சிறிய ஆய்வு செய்வோம்.

கருணாநிதி கூட்டணிக்கு ஓட்டுபோடுவதால் காங்கிரஸ் ஆட்சி அமையும் பட்சத்தில்,

1. கடந்த ஐந்துவருடம் கூடி நிறைவேற்றாத சேது சமுத்திரத்திட்டம் நிறைவேறப்போவதில்லை.
2. தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு மந்திரியாகி 75 பைசாவிற்க்கு தொலைதூர அழைப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பார்.
3. சட்ட சபை கலைக்கப்படாது என்ற உறுதியால், மணற் கொள்ளை, மின்சார நிறுத்தம், விலைவாசி உயர்வு போன்றவற்றிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவித தீர்வும் ஏற்படப் போவதில்லை.
4. இலங்கையில் உள்ள தமிழர்கள் மேலும் கொல்லப்பட்டு அங்கு தமிழ் இனம் இருந்ததிற்க்கு எந்த அடையாளமும் இல்லாமல் அழிக்கப் படும்.
5. தமிழ், தமிழர் உரிமை, சுயமரியாதை, சோனியா, இறையாண்மை, காவிரி, முல்லைப்பெரியார் போன்ற வார்த்தைகளை யாரவது பயன்படுத்தினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிறையில் இருக்க நேரிடும்.
6. தங்கபாலு தொல்லியல் துறை மந்திரியாகி தமிழரின் வரலாற்றை அழித்துவிட்டு அன்னை சோனியாவின் பெயரை அனைத்து கல்வெட்டிலும் இடம்பெறச்செய்வார்.
7. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கப் போவதில்லை.
8. அழகிரி கலால் மற்றும் சுங்கவரித்துறை மந்திரியாகி அவற்றை முறையாக கையாழ்வார், மேலும் கூடுதலாக உள்துறை மந்திரியாக பொறுப்பேற்று சட்டம் ஒழுங்கை நிலை குலையச் செய்வார்.

செயலலிதா கூட்டணிக்கு வாக்களித்தால்,

1. மத்தியில் காங்கிரசுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பிருந்தால், காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து 10 மந்திரிப்பதவிகளை வாங்கிக் கொள்வார்.
2. அடுத்த நிமிடமே தமிழ்நாடு சட்டப் பேரவை கலைக்கப்படும்.
3. முன்னாள் மந்திரிகளின் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்படும்.
4. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட போடா சட்டம் கொண்டுவரப்படும். அதில் விடுதலைபுலிகள், தனித் தமிழ் ஈழம் பற்றி பேசுபவர்கள் உள்ளே தள்ளப்படுவார்கள்.
5. சேது சமுத்திரத்திட்டத்திற்க்கு மூடு விழா செய்யப்படும். அந்த இடத்தில் இராமர் கோவில் ஒன்று கட்டப்படும்.

இரண்டு கெட்டதில் எந்த கெட்டதை தேர்ந்தெடுப்பதுதான் இந்த தேர்தல் என்றாலும், தனித் தமிழ் ஈழத்தை தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்க்கான தேர்தலாக நாம் ஏன் இந்த தேர்தலை பார்க்கக் கூடாது. கருணாநிதிக்கு ஓட்டு போடுவதை விட செயலலிதாவுக்கு ஓட்டுப் போடுவதில் இந்த நிலைப்பாட்டையாவது நாம் உலகிற்க்கு சொல்லலாம். ஏனென்றால் அந்த அம்மையார் தான் தனித் தமிழீழம் அமைத்துத் தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். நாம் ஓட்டுப் போடுவதால் அம்மையார் சொன்னதை செய்யப்போவதில்லை என்றாலும், நம்முடை நிலைப்பட்டை தெரிவிக்க இந்த ஒரு சந்தர்பத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படியொரு தீர்ப்பை நாம் சொல்லும் போது, தமிழகத் தமிழரின் துயர்கள் களையப்படாவிடிலும் நம்முடைய, ஆறு கோடி தமிழரின் விருப்பை, எண்ணத்தை வெளிப்படுத்திக்கொள்ள இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

2 comments:

  1. Absoultely!!! correct idea!! we will vote to AMMA!!!!

    ReplyDelete
  2. ஈழத்தமிழன் கடந்த கால நினைவுகளை மீட்டி அசைபோடுவற்குரிய காலம் இதுவல்ல.
    அந்தநிலையில் எந்தவொரு உண்மையான தமிழனுக்கும் சிந்திக்க நேரமுமில்லை.
    குற்றுயிரும் குறையுயிருமாக இருக்கும் எம்மவருக்கு பழைய சரித்திரங்கள் தேவையில்லை.
    தற்போதைய நிலையில் யார் குத்தினாலும் அரிசியானால் போதுமென்ற மனப்பான்மையே ஒவ்வொரு ஈழத்தமிழனின் நிலைப்பாடு ஆகும்.
    நாங்கள் ஜெயலலிதாவின் ஈழத்தமிழருக்கான எதிர்நடவடிக்கைகள் எல்லாம் தெரிந்தவர்கள் தான்.
    இருப்பினும் இன்றைய காலகட்டத்திற்கு எமக்கு ஆதரவுக்குரல்தான் அதிக பட்சமாக தேவைப்படுகின்றது . முக்கியமானதும் கூட.
    48 மணித்தியாலத்தில் நல்ல செய்தி வரும் என்பவர்களும்,பொம்மை மன்மோகனுக்கு தந்தி அடிப்போம் என்று சொல்பவர்களும் எமக்கு தேவையில்லை.

    எமக்கு இந்திய உள் அரசியல் தேவையில்லாத விடயம். அது நாகரீகமுமில்லை. ஆனால் அவர்கள் ஈழத்தமிழர்களை வைத்து தேர்தல் விஞ்நாபனம் செய்யும் போது இந்தியராணுவத்தால் பாதிக்கப்பட்ட எம்மவர்கள் என்ன புளகாங்கிதம் கொள்ளமுடியுமா?

    ஜெ சொல்லிவிட்டு செய்பவர்.கருணா சொல்லாமல் செய்பவர். கொள்கை ஒன்று. செய்முறை வேறு. எம்மைப்பொறுத்தவரை அவ்வளவுதான்.
    இம்முறை ஜே சொல்லியிருக்கின்றார். பொறுத்திருந்து பார்ப்போம்.

    வேதனையில் விளிம்பில் இருக்கும் எம்மவரை ஏமாற்றும் காலம் போய்விட்டது என்பதை நினைவில் வைத்திருந்தால்…

    ReplyDelete