Friday, November 30, 2007

யோகி


லியொ டால்ச்டாய், ஆர்.கே. நாராயணன் மாதிரியெல்லாம் சும்மா எழுதி பிச்சு போடனும்னு நெனச்சு எழுத ஆரமிச்சா.... எங்க இந்த பாழாப்போன உலகம் புக்கர், ஆச்கார்னு அவாடெல்லாம் கொடுத்து நம்மல அவமானப் படுதிருமோன்னு மனசு பதரி, இந்த மாதிரி கப்பிதனமா எழுதி உங்கள மட்டும் கச்டப் படுத்த்லாம்னு முடிவு பண்ணிட்டேன். படிச்சிட்டு உங்க மன குமுரல இங்கேயெ கொட்டிட்டு போயிடுங்க...

இந்த கதையில் வரும் கதாபத்திரங்களுக்கு சில உண்மையான பாத்திரங்களின்(திரு. சாமிநாத வாத்தியார், திரு பொன்ராஜ் சார், திருமதி தங்கமணி அம்மா) பெயர்களை பயன்படுத்தியிருக்கிறேன். இது கதையைய் உயிரோட்டமுடன் சொல்லமுடியும் என்ற நம்பிக்கையிலும் அவர்களிடம் நான் எடுத்துக்கொண்ட உரிமையிலும், அன்பிலும் இதை செய்திருக்கிறேன். மத்தபடி எல்லா சினிமாவுல வர்ர உங்களுக்கு மனப்பாடமான "புண்படுத்தனும்கர நோக்கமில்லைங்ர" வரியயும் சேத்து படிங்க....


யோகின்னா ஏதோ கர்ம யொகி, ஞான யோகிய பத்தின கதைன்னு நெனச்சு உங்க கற்பனை குதிரைய தட்டி விட்றாதிங்க... அதை அங்கேயே கடிவாளம் போட்டு நிறுத்துங்க....

யோக்கியன் கிருஷ்ண மூர்த்திய பத்தின கதை இது... யார் இந்த யோகி...

ஒரு நாளைக்கு நாலு வேளை சாப்பிட்டு அஞ்சு வேளை தூங்கர போறுப்புள்ள புளியம்பட்டி மைனரு தான் நம்ம கதாநாயகன்....

புளியம்பட்டி பொட்டல் காடா இருந்த்தப்பவே நம்ம யொகியொட தாத்தாவெல்லம் திரு.வி.க திடல் அரச மரத்தடில சொம்பு வெச்சு உக்காந்து தீர்ப்பு சொன்ன நாட்டமைன்னா, யொகிய பத்தின பின்மைதானம் அதான் பேக்கிரவுண்டு, விளங்கியிருக்கும்னு நெனக்கிறேன்....

காட்டு பள்ளிக்கூடத்தில ரெண்டாம்பு படிக்க(?)ம்போது வந்து சேந்த கரடி கணேசன், போலிஸ் குமார், குரங்கு பெடல் மூர்த்தின்னு மூணு ஞானிகள்தான் யோகியொட இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு உருதுணையா இருந்த நண்பர்கள்னா அது மிகையாகது!




காலச்சக்கரம் சுத்தி சுத்தி ஓஞ்சு போயி பஞ்சரானப்பதான் கதையோட காலகட்டத்தில இங்க நிக்கிறோம்.

"டேய்.. இன்னுமா தூங்கரே.. சன் டிவில நியூசே போட்டாச்சு...... சரி சாய்ந்திரம் பாக்கலாம்" ம்னு சொல்லிட்டே எட்டேகால் பாயிண்டு பாயிண்டு பிடிக்க அவசர அவசரமா ஓடினான் கணேசன். வெலையில் இருப்பது கணபதி டெக்ஸ்டூலில்(இப்ப இல்லை) மெக்கானிக்காக.பஸ்டாண்டுக்கு பக்கத்தில மைனர் வீடுங்கரதால தெனமும் சைக்கில் நிருத்திர ஸ்டேண்டு மைனர் வீடுதான் கணேசனுக்கு. புளியம்பட்டிக்கு வந்த முதல் காலெஜ்(?) அந்த கண்ணப்பர் ஐ.டி.ஐ ல முதல் பேட்ச்ல எம்.ல்.ஏ ரெகமண்டேசன்ல மோட்டார் மெக்கானிக் டிகிரில்ல சேந்தான் கணேசன். அவன் ஏதோ என்ரன்சுல கட் ஆப் கோரஞ்சு போயி இந்த முடிவு பண்ணிட்டான்னு தப்பா நெனைக்காதிங்க...

எட்டாவது பெயிலானப்பவே பள்ளிக்கூடம் பொகமாட்டேன்னு சொன்னவனை, இல்லடா மகனே "நீ பத்தாவது வரைக்குமாவது படிச்சு நம்ம பரம்பரைலெயே நீதான் ரொம்ப படிச்சவன்னு பட்டம் வாங்கனும்" னு தாய்க்குலம் ஆணையிட அத தட்டாம மீண்டும் எட்டாம்ப்பு படிக்க போனான். இதுக்கு பின்னாடி சாமிநாத வாத்தியாரின் அளவற்ற அன்போ, அப்பாவின் பங்கு பிசினஸ் முதலீடான இரண்டு மாடோ, அவனின் இந்த முடிவுக்கு காரணம் சத்தியமாக இல்லை.

எல்லையற்ற தடைகளையயெல்லாம் தாண்டி பத்தவது வர்ரதுக்குள்ள பள்ளிக்கூடத்து தென்னங்கன்னுகளெல்லாம் தேங்கா போட ஆரம்பிச்சுருசு.
ஒய்ஸ் எச் எம் பொன்ராஜ் வாத்தியார், வேதியல் மாற்றம் பண்ணும் டீச்சர் எல்லாம் எவ்வளவு முயற்சி பண்ணியும் வெளி நாட்டு சதியினால் கணேசன் பெயிலாக்கப்பட்டான் பத்தாவதிலே. அப்புரம் அவனோட ஐன்ஸ்டின் மூலைய பாத்து எம்.எல்.ஏ ஏகாம்பரம் ஐடிஐ க்கு ரெகமண்டேசன் லெட்டர் கொடுத்து கண்ணப்பர் ஐடிஐ ன் புகழுக்கு மேலும் ஒரு இரகு சேர்த்தார்.

கரடி கணேசனின் காரணப்பெயரின் காரணம் யாருமே நெனச்சு பாக்க முடியத அளவுக்கு கரடி விடுவதால்.

உ.ம்:

ஸ்கூலுக்கு ரெண்டு நாள் கட் அடிச்சிட்டு சத்தியமங்கலம் நிர்மலாவில் சகிலாவின் பாலியல் கல்வி படம் பார்த்துவிட்டு அங்குள்ள பாட்டிவீட்டிலும் அதையே பள்ளியின் பாட திட்டம் என்று சொல்லி இரண்டு நாள் அங்கேயே தங்கிவிட்டு திரும்பி வந்தான்.

பர்ஸ்ட் பிரியெட் தமிழ் தங்கமணி அம்மா என்றதால் லேட்டா வந்த கணேசனுக்கு சொல்லவே வேண்டியதில்லை. இவன் சொல்றதெல்லாம் உண்மைனு நம்பும் அவுங்களோட அப்பாவி மனச என்னன்னு சொல்ரது.

ரெண்டு நாள் ஏன் வரலைன்னு கேட்டதுக்கு, பள்ளிக்கூடம்விட்டு வீட்டுக்குப் போகும்போது கார்ல ரெண்டுபேர் வந்து "உங்க பாட்டிக்கு ஒடம்பு செரியில்லாம சீரியஸ்ஸா ஆஸ்பத்திரியில இருக்குது" ன்னு சொல்லி கார்ல கடத்திட்டு போயிட்டாங்க. அப்புரம் அவுங்க ஒரு எடத்துல நின்னு டீ குடிக்கும்போது அவுங்களுக்கு தெரியாம கார்ல இருந்து எரங்கி அவங்கள கல்லால் அடிச்சிட்டு எரங்காட்டு பாளையம் வழியா தப்பிச்சி ஒடிவந்த்துட்டேன்னான். வகுப்புல இருந்தவனுங்கெல்லாம் கண்ணுல தண்ணிவர்ர அளவுக்கு உள்ளுக்குள்ள சிரிச்சிட்டு இருந்தானுங்க. தமிழம்மா இதை கேட்டு உருகி அதை அப்படியே எச் எம் கிட்ட சொல்லி அடுத்த நாள் காலைல ப்ரெயர்ல அவனோட வீரத்த பாரட்டி பத்திரமெல்லாம் கொடுத்தாங்கன்னா பாத்துகோங்களேன் அவனோட கரடிய.

( அலம்பல் தொடரும்.....)

பாகம் 2 படிக்க இங்க அழுத்துங்க..