Saturday, January 12, 2008

யோகி பாகம் 4

முந்தைய பாகம் படிக்க இங்கே அழுத்தவும்

யோகி : இது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க குமார் கையை ஒரு கிள்ளி அவன் கத்துனதுல தெரிஞ்சிட்டேன். இருந்தாலும் என்னால இத நம்ப முடியல. சரி பக்கத்துல போயி பேசித்தான் பாக்கலாம்னு நெனச்சு அந்தப்பக்கம நகர எத்தனித்தேன். அது வரைக்கும் அமைதிய இருந்த குமார் இப்போ ரொம்ப அமைதியா இருந்தான்.

என்னடா ஆச்சுன்னு கேட்டா...

"டே.. இப்ப எதாவது நடந்துச்சா?" அப்படின்னு கேட்டான்.

நான் ஜெர்க்காகி.. ஒருவேலை நம்ம பையன் எல்லாத்தயும் கவனுச்சுட்டான் போல இருக்குன்னு "இஇஇல்லடா..ஒன்னும் நடக்கல.. ஏன்?" அப்படின்னு டரியலாகி கேட்டேன்.

இல்லடா..."எனக்கு வானத்துல பறந்துட்டு வந்த மாதிரி ஒரு பீலிங்..." அப்படின்னான்..

எங்களுக்கு ஒன்னும் புரியாம அவனையெ பாத்திட்டு இருந்தோம்.

மல்லிகா என்ன பார்த்து சிரிச்சிட்டு போனாடா.......

ஆகா... மறுபடியுமாடா....

இல்லடா இது உண்மையான காதல்டா.... அப்படின்னான்...

இது அவனுக்கு பதிமூனாவது உண்மையான காதல்.

"ச்சே.." அப்படின்னு எல்லார்க்கும் பலூன்ல காத்த எடுத்து விட்ட மாதிரியாகி அப்படியே நகர ஆரம்பிச்சோம்.

குமார் மட்டும் அங்க இருந்து நகர முடியாம, வேற வழி இல்லாம எங்களுக்கு பின்னாடி வர ஆரம்பிச்சான்.

குமார்-ம் கஜினியும் ஒன்னுன்னு சொல்லலாம். ஒவ்வொரு தோல்வியிலயும் துவண்டுவிடாம அடுத்த அட்டெம்ட் பண்ற மனச கடவுள் அவனுக்கு கொடுத்திருக்கார். போனவாரம் தான் அவன் எதிர்த்த வீட்டுக்கு அடிக்கடி வர்ர அந்த வீட்டு பொண்ணோட பிரண்ட்டுக்கு கஸ்டப்பட்டு காதல் கடிதம் கம்போஸ் பண்ணி கணேசனோட தம்பிக்கு ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்து தூது விட்டான். ரெண்டு நாள் கழிச்சு ஒரு பதில் கடிதம் வந்துச்சு " அண்ணா... இந்த லெட்டர் தப்பா எனக்கு வந்துடுச்சு... ரமேஸ்மாதிரியே நீங்களும் நல்லா எழுதரீங்க.. ஆனா இது அண்ணிக்கு சேர வேண்டியது." அப்படின்னு.

அன்னைக்கு நடந்த தாபா சங்கமத்துல அஞ்சு பீர் குடிச்சிட்டு, அமைதிய இருக்கிற மாதிரி நடிச்சிட்டு இருந்த அடுத்த வீதி ரமேஸ்-ங்கர குள்ள நரிய திட்டிட்டு அந்த பொண்ணயும் சேர்த்து வாந்தியெடுத்தான்.

அடுத்தவங்க மேல இரக்கப்படுரவுனுக்கு அடிக்கடி காதல் வர்ரதுல ஒன்னும் தப்பில்லயே.. அத மனசுல மறைச்சி வெச்சி கள்ளக்காதல் பண்றதுதான் தப்புன்னு தத்துவம் வேற பேசினான்.

அடுத்த நாள்,

எப்பவும் போல யோகி வீட்டு திண்ணைல சட்டசபை கூட்டம் நடந்திட்டு இருந்த போது

ஏதோ போன் வந்து உள்ளே போனான் யோகி.

வெளியே வரும்போது தலைல கைய வெச்சிட்டு வந்தான். என்னட ஆச்சுன்னு கேட்டான் கணேசன்,

"செமஸ்டர் லீவுங்கர சந்தோசத்துல (இங்க அகிலாவ பாக்கனும்கர ஆர்வத்துல) அவசரமா காலேஜ்ல இருந்து கெளம்பி வந்ததுல ப்ராக்டிகல் பரிச்சை எப்ப அப்படிங்கரத கவனிக்காம வந்துட்டேன். இன்னைக்கு அது முடிஞ்சு போச்சு. அந்த லெக்ட்சரர் என்ன தேடுனாருன்னு என் ப்ரண்டு போன் பண்ணான் ".

எதுலயும் குற்றம் கண்டு பிடிக்கர நம்ம குற்றமில்லாத கணேசன் " என்னடா செமஸ்டர் லீவுல வந்துருக்கரன்னே. இப்ப போயி எக்சாம் அது இதுன்னு சொதப்பரயேடா " அப்படின்ன்னான்.

யோகி: பொதுவா தியரி எக்சாம் முடிஞ்சு கொஞ்ச நாளுக்கப்பரந்தான் ப்ராக்ட்டிகல் எக்சாம் வப்பாங்க. அதெல்லாம் காலேஜ்ல படிக்கரவுங்களுக்குதான் தெரியும். ஸ்கூல்ல படிக்கரவுங்களுக்கெல்லாம் தெரியாதுன்னா கணேசனை மண்ணை கவ்வ வைத்தான்.

அதை விடு.. ஆனா நீ மொதல் வருசத்துலயே அரியர் வெச்சு முழு மனுசனாகிட்டயே காதல் மன்னா...

சரி விடு... ஒரு பேப்பர் தானென்னு சொன்னான் குமார்.

யோகி மனதுக்குள் : ஒரு பேப்பர்னாலும் அது அகிலாவுக்கு தெரிஞ்சா.... அப்படின்னு ஏதோ நெனச்சான்...

இதைபத்தியெல்லாம் கவலை படாமல், "இன்னைக்கு செகண்ட் சோ ஸ்ரிதேவில காதலுக்கு மரியாதைக்கு போலாமா"ன்னு திரியை பத்தவச்சான் மூர்த்தி.

ஏதோ காதல்னா என்னன்னு தெரியாத மாதிரியும் இந்த படத்த பாத்துதான் அத தெரிஞ்சுக்க போற மாதிரியும் யோசிச்சிட்டு யோகியும் குமாரும் சரின்னு சொன்னவுடன் சபை கலைந்தது.

அன்னைக்கு தியெட்டருக்கு போனப்ப நம்ம யோகியோட மூஞ்சில 1000 வாட்ஸ் பல்ப் எரிஞ்சத யாரும் கவனிக்கலை...

ஆம்... அங்கே அகிலாவும் காதலுக்கு மரியாதை செய்ய வந்திருந்தாள்.

உயிரற்ற மனிதர்களெல்லாம் காதலை திரையில் பார்க்க, காதல் உயிருள்ள யோகி அகிலாவின் கடைக்கண் பார்வையால் தாலாட்டப் பட்டான்.

அவர்கள் கண்களால் பேசிக்கொண்டதை நம்மால் டி-க்ரிப்ட் செய்ய முடியவில்லை....

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கே எந்திரிச்சு காலேஜ்க்கு கெளம்ப ரெடியானான் யோகி.

"என்னடா லீவுன்னு சொல்லிட்டு இப்ப திடீர்னு காலேஜ்க்கு போகனும்கற" ன்னு தாய்க்குலம் கேட்க.. "இல்லம்மா.. இன்னைக்கு ஒரு முக்கியமான் ஸ்பெசல் க்ளாஸ் இருக்குன்னு ப்ரெண்டு போன் பன்னான்"னு, எட்டவதுல சயின்ஸ் புக், அறிவியல் புத்தகம் வாங்கனும்னு சொல்லி காசு வாங்குன அதே புத்தி சாலிதனத்தை பயன்படுத்தினான்.

காலையில் சத்தி செல்லும் KMK வில் முதல் சீட்டில் இடம் பிடித்தான். ஆம் அவன் எதிர் பார்தது போல் அகிலாவும் வந்து பஸ்ஸில் முன் சீட்டில் அமர்ந்தாள்..

(தொடரும்...)