Monday, December 24, 2007

தூக்கம்விற்ற காசுகள்

தூக்கம்விற்ற காசுகள்

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை

இதோ அயல்தேசத்து ஏழைகளின்கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்விசா அரிப்புகளோடும் வருகின்ற கடிதங்களை நினைத்து நினைத்துபரிதாபப்படத்தான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்சென்டில் வேண்டுமானால்...வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?தூக்கம் விற்ற காசில்தான்...துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்காலநினைவுகளையெல்லாம்...ஒரு விமானப்பயணத்தூனூடேவிற்றுவிட்டுகனவுகள்புதைந்துவிடுமெனத் தெரிந்தேகடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மரஉச்சியில் நின்றுஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!

வாரவிடுமுறையில்தான்..பார்க்க முடிகிறதுஇயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்தொட்டு எழுந்த நாட்கள்கடந்து விட்டன!

இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டுஎழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவுநேர கனவுக்குள் வந்து வந்துகாணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்விறால் பாய்ச்சல்மாட்டுவண்டிப் பயணம்நோன்புநேரத்துக் கஞ்சிதெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி எனசீசன் விளையாட்டுக்கள்!

ஒவ்வொருஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...விளையாடி மகிழ்ந்த உள்ளுர்உலககோப்பை கிரிக்கெட்!

இவைகளைநினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...விசாவும் பாஸ்போட்டும் வந்து...விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய்வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள்மறுத்து போராட்டம்!பெண்வீட்டார் மதிக்கவில்லைஎனகூறி வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்"கண்டிப்பாய் வரவேண்டும்" என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...சங்கடத்தோடுஒருதொலைபேசி வாழ்த்தூனூடே...தொலைந்துவிடுகிறதுஎங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?

நாங்கள் அயல்தேசத்துஏழைகள்தான்!

காற்றிலும் கடிதத்திலும்வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்அரபிக்கடல் மட்டும்தான்...ஆறுதல் தருகிறது!

ஆம், இதயம் தாண்டிபழகியவர்களெல்லாம்...ஒரு கடலைத்தாண்டியகண்ணீரிலையே...கரைந்துவிடுகிறார்கள்;!

"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் இழப்பையும்கணக்கிட்டுப் பார்த்தால்எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை...
முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தைதினாரும் - திர்ஹமும்தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லிகுழந்தை அழும் சப்தத்தை...தொலைபேசியில் கேட்கிறோம்!கிள்ளாமலையேநாங்கள் தொலைவில் அழும் சப்தம்யாருக்குக் கேட்குமோ?

ஒவ்வொருமுறை ஊருக்குவரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவுஇப்படிபுதிய முகங்களின்எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்மறைதலையும் கண்டு...
மீண்டும்அயல்தேசம் செல்லமறுத்துஅடம்பிடிக்கும் மனசிடம்...

தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறதுமீண்டும் அயல்தேசத்திற்கு!

- ரசிகவ் ஞானியார், துபாய்

Friday, December 7, 2007

Wednesday, December 5, 2007

யோகி பாகம் 3


முந்தய பாகம் படிக்க இங்கே அழுத்தவும்
யோகியோட காதல் கதைய நான் சொன்னா எங்க டர்ர் ஆகியிரும்னு அவனே சொல்ரான் கேட்டுக்கோங்க. நானும் பக்கத்துல உக்காந்து கேட்கிறேன்.

யோகி : பொதுவா சினிமாவுல வர்ர டையலாக் 'காதல் வர்ரதுக்கு காரணம் வேண்டியதில்லை' அப்படின்னு. ஆனா அந்த காதல் ஒரு ஆட்டுமேலயோ, மாட்டுமேலயோ வராம ஒரு பொண்ணு மேல மட்டும் வர்ரதுக்கு என்ன காரணம்னு எல்லாத்துக்கும் தெரியும்.

ஆஹா.. எவ்வளவு பெரிய ஆராய்ச்சி... ஆரம்பமே அசத்திரியே கண்ணா.. அக்க..

அப்பரம்..


யோகி : உங்களுக்கு நான் பேசறது நக்கலாத்தான் இருக்கும். ஏன்னா உங்களுக்கு காதலிக்க வாய்ப்பு கெடைக்கலை.. அந்த வயித்தெரிச்சல்..

சரி சரி விடு...உண்மைய ஊரரிய சொல்லி ஊமத்தொரை மானத்த வாங்காதடா.. உங்கதைய கன்ட்டினியூ பண்ணுடா செல்லம்...

யோகி : அகிலாவ நான் முதல் முதல் பாத்தது எட்டு வருசதுக்கு முன்னாடி ஒரு முழுப்பரிச்சை லீவுல எங்க கல்லக்காய் காயவக்கிர களத்தில...

ஓ.. கல்லக்கா காயவக்கிர களத்துலதான் உன் காதல் கடலை சாகுபடி பண்ணுனையா?.. நடக்கட்டும்..

யோகி: அந்த களம்தான் அங்க இருக்கிற அத்தனை பொடுசுகளுக்கும் ப்ளே கிரவுண்ட். நான், கணேசன், மூர்த்தி, குமார் எல்லாம் கிரிக்கெட் அங்கதான் வெளையாடுவோம். ஒருவகையில சொல்லப்போனா அந்த கிரவுண்ட்ல தான் கார்ல் மார்க்ஸின் சமத்துவம், பொதுவுடமையெல்லாம் இருந்துச்சுன்னு சொல்லலாம். ஞாயித்துக்கிழமை எட்டு மணிக்கெல்லாம் ஆட்டம் ஆரம்பமாகிரும். அப்படி ஒரு நாள் விளையாடும்போது, அன்னைக்குன்னு பாத்து கணேசன் வீசுன பந்து நெலத்துல குத்தி நேரா வந்து என் கண்ணுல பட்டு உலகம் சுத்த ஆரம்மிச்சு அப்பரம் ஸ்க்ரீன் ஆஃப்பாகி விழுந்துட்டேன். அப்பரம் எம்மேல தண்ணி தெளிச்சி அப்படியே ஓரமா பெவிலியன்ல உக்கார வெச்சிட்டானுங்க. அப்பதான் அங்க வெளையாடிட்டு இருக்கிற என்னோட கேர்ள் ப்ரண்ட்ச கவனிச்சேன். ஆனா அங்க ஒரு பொண்ணு மட்டும் ஒரமா நின்னு வேடிக்கை பாத்துட்டு இருந்த்துச்சு. அப்பரம் நம்ம கெர்ள் ப்ரண்ட் ஒன்ன கூப்டு யாரு என்னன்னு விசாரிச்சப்பதான் அது மேக்கு வீதி அங்கமுத்து பொண்ணுனும் ஊட்டியில இருந்து பரிச்ச லீவுல வந்திருக்குன்னு தெரிஞ்சுது. "ஏன் அதையும் வெளையாட்டுக்கு சேத்திக்க வேண்டியதுதாணேன்"னு கேட்டேன்.

அதுக்குள்ள நான் அவளை பத்தி பேசிட்டு இருக்கறத பாத்துட்டு அப்புடியே ஒரு மொர மொரச்சுட்டு வீட்டுக்கு போயிட்டா. அப்பறந்தான் தெரிஞ்சுது அவுங்க வீட்ல எங்ககூட எல்லாம் வெளையாடக்கூடாதுன்னு சொல்லி அனுப்பிருக்காங்கன்னு.

ஓ.. அப்படின்னா உன்னப்பத்தியும் உன் கூட்டாளிகள பத்தியும் அவுங்க வீட்டுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குன்னு சொல்லு....

யோகி : அட நீங்க வேற.. அவிங்கப்பன் அப்பவே பருத்தி வியாபரத்துல நெறையா சம்பாரிச்சு யாரையும் மதிக்காம தலைல நடந்துட்டு இருந்தான். அது ஏழை பணக்காரங்கற ஏற்றத்தாழ்வுல விதைத்த விதை. நாங்கெல்லாம் ஏழை பசங்களாம், அதனால எங்க கூட வெளையாடக்கூடாதாம்.

சரி விடு.. நாம பைனல்ல பாத்துக்கலாம்- னு கில்லி விஜய் மாதிரி சொன்னேன்.

யோகி : லீக்ல ஜெயிக்காம எப்படி ப்பைனலுக்கு போறது, அப்புறம் ஜெயிக்கிறது. அதுவுமில்லாம ஒரு நாள், நம்ம மூர்த்தி கொரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஒட்டிட்டு போகும்போது எதுர்ல வந்த எமகாதகன் அங்கமுத்துமேல போயி மோதிட்டான். அவன் மோதிட்டாங்குறத விட அவன் கீழ் சாதிப்பய்யன்னு தெரிஞ்சவுடனே ரய்யினு ஒரு அரை அரைஞ்சு சைக்கிள தூக்கி அப்படி ஓரமா வீசிட்டுப்போனான். அதப்பாத்துட்டு இருந்த நாங்க மூர்த்திய சமாதானம் பண்ணி எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து எங்கப்பாகிட்டே சொன்னேன். அவரு ' அவன பத்திதான் உங்களுக்கு தெரியுமல்ல் .. அப்பரம் ஏண்டா அவங்கிட்ட போயி வம்பு வெச்சுக்கிறங்க. சாதி, பணம்னு பாக்கரவங்கிட்ட போயி பண்ப எதிர்பாக்கலாமா. சரி விடு அவன நான் பாத்துக்கறேன்'னு சமாதானம் பண்ணி அனுப்பிச்சாரு.

அப்பரம் அவரு வீட்ல வந்து எங்கம்மாவ புடிச்சு " ஏண்டி உங்கண்ணன் இப்படி இருக்கிறான். சின்னபபயங்கிட்ட போயி அவனோட பணத்திமர காமிச்சிருக்கான். உங்க குடும்பமே இப்படித்தான். எப்படித்தான் நீ அங்க வந்து பொறந்தயோ. உனக்காக எல்லாத்தயும் சகிச்சுக்க வேண்டியிருக்கு.. அன்னைக்கு அந்த வீட்டு வேலைக்கு போன பொண்ண அடிச்சப்பவே உங்கண்ணன் கையவெட்டிருப்பாங்க அந்த சாதிக்கார பசங்க.. அவன் நல்ல நேரம்.. எங்கிட்ட பிரச்சினை வந்ததால அன்னைக்கு சமாதனப்படுத்தி அனுப்பினேன் அவங்களை." அப்படின்னு திட்டிட்டு போனாரு. அதுக்கப்பறம் எங்கம்மா " எப்பதான் அவன் திருந்தப்போரானோ?. அவன் திருந்தரானோ இல்லையோ, அகிலாவ என் பையனுக்கு கட்டிகிட்டு வந்து அவன் பாவத்துல இருந்து அந்தப்புள்ளய காப்பாத்துனும்" னு முனகிக்கொண்டே உள்ளே போனாங்க.

உங்க மாமன் அவ்வளவு மோசமான ஆளா? பெரிய கட்டை தொரையா இருப்பானாட்ட இருக்கே...



யோகி : அதுக்கப்பரம் நான் அவள பாத்தது, மூனு வருசத்துக்கப்புறம் நம்ம காமாட்சியம்மன் கோவில் தேர் திருவிழாவுல. நான் வழக்கம்போல என் கூட்டாளிகளோட அப்படியே கூட்டத்த பார்த்து சுத்தி வந்துட்டு இருந்தேன். அப்ப யாரோ நம்மள வாச் பண்ரதா நம்ம ராடார் சிக்னல் கொடுத்துச்சு. அப்படியே சிக்னல் வர்ர பக்கம் திரும்பி பாத்தா அகிலா, சிவப்பு பட்டு பாவாடை தாவனியோட இன்னொரு அம்மன் மாதிரி அவிங்க குடும்பத்தோட நின்னுட்டு இருந்தா. நான் பாக்குறேன்னு தெரிஞ்சதும் அப்படியே வேடிக்க பாக்கர மாதிரி அந்தபக்கமா திரும்பிட்டா.

ஆகா.. இப்படித்தான் உனக்கு நீயே ஆப்பு வெச்சிட்டயா?


யோகி: சரி.. உண்மயாத்தான் வேடிக்கை பாக்கறா போல.. நம்ம ரேடார்ல தான் ஏதோ கோலார்னு நெனச்சுட்டு அப்படியே அங்க ராட்டினம் சுத்தர பக்கம் நகர்ந்தோம். அப்பரம் கோஞ்ச நேரங்களிச்சி நம்ம ராடர்ல மறுபடியும் சிக்னல். என்னன்னு பார்த்தா, நம்ம அம்மன் கையில ஒரு சின்ன குழந்தை. "என்னடா கண்ணா ? எப்படி இருக்கிறே ? விளையாடனுமா?" அப்படின்னு எனக்கு ஒரு கேள்வியும் குழந்தைக்கு ஒரு கேள்வியுமா கொஞ்சிட்டு இருந்தா.

அட..உனக்கு எங்கப்பா ஒரு கேள்வி?

யோகி : "என்னடா கண்ணா? எப்படி இருக்குறே?" அப்படிங்கறது என்னை பாத்து கேட்ட கேள்வி. கிருஸ்ணனுக்கு இன்னோரு பேரு கண்ணன். இதுகூட தெரியாம எப்படித்தான்...."

ஓஹோ.. இப்படியெல்லாம் பொண்ணுங்க பேசுவாங்கன்னு எனக்கு தெரியாம போச்சே. அப்ப எத்தன பேரு என்னை என்னை என்னென்ன பேரு வெச்சு கூப்டாங்களோ. எல்லாத்தயும் இப்படி மிஸ் பண்ணிட்டு இன்னைக்கு இவன் காதல் கதைய இப்படி கெறங்கி கேக்கற மாதிரு ஆகிப்போச்சே கருப்பு சிங்கம்.. சரிப்பா நீ கண்டினியூ பண்ணு...

(அலம்பல் தொடரும்...)

Saturday, December 1, 2007

யோகி - பாகம் 2


பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்..

முதல் பாகம் எழுதும்போது நுகர்வோர்(அதாங்க கிளையண்ட்-ன்னு தமிழ்ல சொல்லுவாங்கல்ல) கால் வந்ததால நம்ம கதாநாயகன பத்தி வெவறமா சொல்ல முடியாம போச்சி. இப்ப விம் போட்டு வெளக்கிருவோம்.....

அன்னைக்கு தூங்கிட்டு இருக்கும்போது கரடி சொன்னது எதுவும் காதில விழாம சீக்கிரமா ஒம்பது மணிக்கு எந்திருச்சு, அந்தப்பக்கம் தூங்கிட்டு இருந்த கோழியயும் எழுப்பி அன்றய கடமைய முடிசிட்டான். எழுந்து பொறுப்பா சமயலறைக்கு போய் தியாகி நம்பர் ஒண்(அம்மா) கிட்ட போயி என்ன டிபன்னு கேட்டு அன்றைய வேலைக்கு ஆரம்பமானான்.


மொதல்ல போயி பல்ல வெளக்குடா என் சிங்கக்குட்டின்னு செல்லமா சொன்னாங்க அந்த தியாகி. சிங்கமெல்லாம் பல்லு வெளக்காதுன்னு சொல்லிக்கிட்டே பாத்திரங்களை மோப்பம் பிடுச்சு ஒருவழியா அரவயித்துக்கு பத்து இட்லிய உள்ள அனுப்பிச்சிட்டு வெளியே நெளிந்த்தான்.

வியாழக்கிழமை என்பது புளியம்பட்டியில் புதன் கிழமையே ஆரம்பிச்சிடும். சந்தைக்கு வெளியூர்ல இருந்து பிசினஸ் டெலிகேட்செல்லாம் வந்து சுல்தான் ரோட்ல, சத்திரோட்ல இருக்குர டாஜ், ரெசிடன்சி ஹொட்டல்ல ரூம் போட்டு தங்கிடுவாங்க. அனில் அம்பானி அவங்க அப்பா குருபாய் அம்பானியெல்லாம் இங்க நடக்கிர வார சந்தையில வந்து வியாபரம் பண்ணி ஒரு லாரி நெறய பணத்த அள்ளிட்டு போவங்களாம். சுத்துபட்டு பதினேழு கிராமத்துக்கும், இப்ப புதுசா உருவாயிருக்கிற திருப்பூரோட சேத்து பதினெட்டு கிராமத்துக்கும் மானாவாரியா வருமானத்த அள்ளித்தர்ர சந்தை அது. தலால் வீதி சந்தையில எப்பவாவது கொஞ்ச நாளைக்குதான் புள் ரன் இருக்கும். ஆனா இந்த சந்தையில எப்பவுமே புள், கவ் ரன் எல்லாம் இருக்கும். பஸ்டாண்டுக்கு பக்கதிலதான் சந்தைங்கிறதால அங்கு நடந்த ஆயிரங்கோடி வியாபாரங்கள் எவ்வளவுதான் துண்டு போட்டு மறைத்தும் எப்படியொ யோகியும் மற்றவர்களின் காதையும் இரைச்சலாக குடைந்த்தது.

இதெல்லாம் செகண்ட் செமஸ்டர் லீவுல வந்து புளியம்பட்டி மண்ணுல சைக்கிள்ள சேரன் மாதிரி சுத்தி கூட்டாளிகளோட கும்மியடிச்சிட்டு இருந்தப்ப நடந்த்தது.

தன்னோட குலத்தொழிலான விவசாயம் மற்றும் கடலை எண்ணை தயாரிக்கிர லோட்டரிக்கு எங்கே தன்னோட வாரிசு வந்து நாசம் பண்ணிரும்னு நெனச்சு பன்னண்டாவது பாடர்ல பாஸ்பண்ண உடனேயே நல்லூருக்கு பக்கத்துல இருந்த பத்து ஏக்ரா நிலத்த வித்து கொண்ட்டுபோயி ஈரோடு கொங்கு பொறியியல் காலேஜ்ல அணுவ பொளந்து அதுக்குள்ள சுத்திட்டு இருக்கிற எலக்ட்ரான்கள பத்தி படிக்கிற படிப்புல சேத்திவிட்டுட்டாரு நம்ம தியாகி நம்பர் டூ(அப்பா).

நம்ம ஆளும் எங்கயோ அணு ஆராய்ச்சியெல்லாம் செஞ்சு அமேரிக்கா போயி நோபல் பரிசெல்லாம் வாங்கி அத கொண்டுவந்து அத்த மக அகிலாகிட்ட காமிச்சு அவள கரெக்ட் பண்ணிரலாம்னு கனா கண்டுட்டு இரும்பு பெட்டிய தூக்கிட்டு ஈரோடு கெளம்பிட்டான்.

இந்த புளியம்பட்டி வயசு பொண்ணுகள பத்தி சொல்லலைன்னா இந்த காவியம் முற்றுப்பெறாதுன்னு பின்னூட்டம்(பீட்பேக்) தந்த நம்ம நண்பர்களின் நப்பாசைய நிறைவேத்திருவோம்.

பொதுவா பிகருங்களுக்கு தாந்தான் அழகுன்னு எப்பவுமே மனசுல ஒரு நெனப்பு, அது அவிஞ்சு போன ஆயில் கேனா இருந்தாலும் அப்படித்தான் நெனைக்கும். அது புளியம்பட்டி ஆயில் கேன்களுக்கும் பொறுந்தும். இதுல படிச்சது படிக்காததுன்னு எல்லாம் வித்தியாசம் கெடையாது. அதனால இந்த வெளியூரு போயி படிக்கிர ஐஸ்வர்யா ராய்களெல்லாம் உள்ளூர் பசங்கள ராமராசனாக்கூட மதிக்காதுங்க. பஸ் ஏற்ர வரைக்கும் குணிஞ்ச தலை நிமிராத கொடமொலகா மாதிரி இருக்குஙக. பஸ் ஏறி அன்னூர் தாண்டுனா அவிங்க அலம்பல் தாங்காம அங்க நிக்கிர அனாம்பத்து ஆண்களெல்லாம் தெரிச்சு கடசி சீட்ல வந்து விழுவாங்க. நம்ம வெளியூரு சாரூக்கான், அமீர்கான் கிட்ட மட்டும்தான் கதைப்பாங்க. இதப்பாத்த ஒண்ணு ரெண்டு உள்ளூர் சிங்கங்க "உலகம் இதைகண்டு எள்ளி நகையாடுமேன்னு" பக்கத்துல நிக்கர பாட்டிகிட்டே பால்லுமேல நாக்க போட்டு டைம் கேட்டு பஸ்ஸுக்குள்ள படகு வைக்கிர அளவுக்கு வழியரத என்னன்னு சொல்ரது....

இதுல யோகியோட அத்த பொண்ணு மட்டும் விதி விலக்கு இல்லை. பத்தாததுக்கு அவிங்கப்பன் அங்கமுத்து பொண்ணை ஒண்ணாவதுலேயே ஊட்டி கான்வெண்ட்ல கோண்டு பொயி விட்டு தாய் தமிழுக்கு கலங்கம் கர்ப்பித்தான். நாலுவருசத்துக்கு அப்பரம் அங்க இருக்கிர குளுரு தாங்க முடியலேன்னு புளியம்பட்டி கான்வெண்ட்ல கொண்டுவந்து அஞ்சாவது சேத்தி விட்டார். போதுவா அந்த கான்வெண்ட்ல படிக்கிரவிங்க தமிழ்மீடியத்தில படிக்கர பசங்கள திரும்பிகூட பாக்க மாட்டாங்க. நம்ம மைனரு வேர தமிழுக்கு சங்கம் வெச்சு பெருமை சேர்த்த பள்ளிக்கூடத்தில படிச்சான். இந்தியக்கூட அப்பப்ப தூர்தர்சன் சனிக்கிழமை படம் பாக்கிறப்ப கேட்டுட்டு அப்புறம் அதையும் தார் பூசி அழிச்சிருவான். இந்த இங்லீச, பள்ளிக்கூடத்தில வாத்தியாரு வந்து பாடம் நடத்துர ஒரு மணி நேரத்துக்கும் அவரு ஏதோ திட்டராருன்னு பல்ல கடிச்சிட்டு முகம் சிவக்க தலைகுனிஞ்சு திரைக்காவியம் படிச்சிட்டு இருப்பாங்க. ஒரு சிலர் ரொம்ப ஒவரா போயி அழ ஆரம்பிச்சிருவாங்க. அவங்கள சமாதனப்படுத்தரதுக்கு ஜாக்டா, டான் குய்க்சாட் கதைய தமிழ்ல சொல்லிட்டுப்போவாரு அந்த வாத்தியாரு. இதுல பத்தாததுக்கு மைனரு அப்பாவும் அகிலா அப்பாவும் புளியம்பட்டி பஞ்சாயத்து போர்டு ப்ரெசிடெண்டுக்கு எதிரெதிர் மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டு மைனரு அப்பா 3712 ஓட்டு வித்யாசத்துல ஜெயிச்சிட்டாரு. அப்புரம் சொல்லவா வேணும் மைனரும் அவங்க அத்த பொண்ணு அகிலாவும் காதல் அளவளாவியதை.

இருந்தாலும் மைனருக்கு எப்படி அந்த மயில் மேல மையல் வந்துச்சுன்னா.......



(அலம்பல் தொடரும்..)