Wednesday, December 5, 2007

யோகி பாகம் 3


முந்தய பாகம் படிக்க இங்கே அழுத்தவும்
யோகியோட காதல் கதைய நான் சொன்னா எங்க டர்ர் ஆகியிரும்னு அவனே சொல்ரான் கேட்டுக்கோங்க. நானும் பக்கத்துல உக்காந்து கேட்கிறேன்.

யோகி : பொதுவா சினிமாவுல வர்ர டையலாக் 'காதல் வர்ரதுக்கு காரணம் வேண்டியதில்லை' அப்படின்னு. ஆனா அந்த காதல் ஒரு ஆட்டுமேலயோ, மாட்டுமேலயோ வராம ஒரு பொண்ணு மேல மட்டும் வர்ரதுக்கு என்ன காரணம்னு எல்லாத்துக்கும் தெரியும்.

ஆஹா.. எவ்வளவு பெரிய ஆராய்ச்சி... ஆரம்பமே அசத்திரியே கண்ணா.. அக்க..

அப்பரம்..


யோகி : உங்களுக்கு நான் பேசறது நக்கலாத்தான் இருக்கும். ஏன்னா உங்களுக்கு காதலிக்க வாய்ப்பு கெடைக்கலை.. அந்த வயித்தெரிச்சல்..

சரி சரி விடு...உண்மைய ஊரரிய சொல்லி ஊமத்தொரை மானத்த வாங்காதடா.. உங்கதைய கன்ட்டினியூ பண்ணுடா செல்லம்...

யோகி : அகிலாவ நான் முதல் முதல் பாத்தது எட்டு வருசதுக்கு முன்னாடி ஒரு முழுப்பரிச்சை லீவுல எங்க கல்லக்காய் காயவக்கிர களத்தில...

ஓ.. கல்லக்கா காயவக்கிர களத்துலதான் உன் காதல் கடலை சாகுபடி பண்ணுனையா?.. நடக்கட்டும்..

யோகி: அந்த களம்தான் அங்க இருக்கிற அத்தனை பொடுசுகளுக்கும் ப்ளே கிரவுண்ட். நான், கணேசன், மூர்த்தி, குமார் எல்லாம் கிரிக்கெட் அங்கதான் வெளையாடுவோம். ஒருவகையில சொல்லப்போனா அந்த கிரவுண்ட்ல தான் கார்ல் மார்க்ஸின் சமத்துவம், பொதுவுடமையெல்லாம் இருந்துச்சுன்னு சொல்லலாம். ஞாயித்துக்கிழமை எட்டு மணிக்கெல்லாம் ஆட்டம் ஆரம்பமாகிரும். அப்படி ஒரு நாள் விளையாடும்போது, அன்னைக்குன்னு பாத்து கணேசன் வீசுன பந்து நெலத்துல குத்தி நேரா வந்து என் கண்ணுல பட்டு உலகம் சுத்த ஆரம்மிச்சு அப்பரம் ஸ்க்ரீன் ஆஃப்பாகி விழுந்துட்டேன். அப்பரம் எம்மேல தண்ணி தெளிச்சி அப்படியே ஓரமா பெவிலியன்ல உக்கார வெச்சிட்டானுங்க. அப்பதான் அங்க வெளையாடிட்டு இருக்கிற என்னோட கேர்ள் ப்ரண்ட்ச கவனிச்சேன். ஆனா அங்க ஒரு பொண்ணு மட்டும் ஒரமா நின்னு வேடிக்கை பாத்துட்டு இருந்த்துச்சு. அப்பரம் நம்ம கெர்ள் ப்ரண்ட் ஒன்ன கூப்டு யாரு என்னன்னு விசாரிச்சப்பதான் அது மேக்கு வீதி அங்கமுத்து பொண்ணுனும் ஊட்டியில இருந்து பரிச்ச லீவுல வந்திருக்குன்னு தெரிஞ்சுது. "ஏன் அதையும் வெளையாட்டுக்கு சேத்திக்க வேண்டியதுதாணேன்"னு கேட்டேன்.

அதுக்குள்ள நான் அவளை பத்தி பேசிட்டு இருக்கறத பாத்துட்டு அப்புடியே ஒரு மொர மொரச்சுட்டு வீட்டுக்கு போயிட்டா. அப்பறந்தான் தெரிஞ்சுது அவுங்க வீட்ல எங்ககூட எல்லாம் வெளையாடக்கூடாதுன்னு சொல்லி அனுப்பிருக்காங்கன்னு.

ஓ.. அப்படின்னா உன்னப்பத்தியும் உன் கூட்டாளிகள பத்தியும் அவுங்க வீட்டுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குன்னு சொல்லு....

யோகி : அட நீங்க வேற.. அவிங்கப்பன் அப்பவே பருத்தி வியாபரத்துல நெறையா சம்பாரிச்சு யாரையும் மதிக்காம தலைல நடந்துட்டு இருந்தான். அது ஏழை பணக்காரங்கற ஏற்றத்தாழ்வுல விதைத்த விதை. நாங்கெல்லாம் ஏழை பசங்களாம், அதனால எங்க கூட வெளையாடக்கூடாதாம்.

சரி விடு.. நாம பைனல்ல பாத்துக்கலாம்- னு கில்லி விஜய் மாதிரி சொன்னேன்.

யோகி : லீக்ல ஜெயிக்காம எப்படி ப்பைனலுக்கு போறது, அப்புறம் ஜெயிக்கிறது. அதுவுமில்லாம ஒரு நாள், நம்ம மூர்த்தி கொரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஒட்டிட்டு போகும்போது எதுர்ல வந்த எமகாதகன் அங்கமுத்துமேல போயி மோதிட்டான். அவன் மோதிட்டாங்குறத விட அவன் கீழ் சாதிப்பய்யன்னு தெரிஞ்சவுடனே ரய்யினு ஒரு அரை அரைஞ்சு சைக்கிள தூக்கி அப்படி ஓரமா வீசிட்டுப்போனான். அதப்பாத்துட்டு இருந்த நாங்க மூர்த்திய சமாதானம் பண்ணி எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து எங்கப்பாகிட்டே சொன்னேன். அவரு ' அவன பத்திதான் உங்களுக்கு தெரியுமல்ல் .. அப்பரம் ஏண்டா அவங்கிட்ட போயி வம்பு வெச்சுக்கிறங்க. சாதி, பணம்னு பாக்கரவங்கிட்ட போயி பண்ப எதிர்பாக்கலாமா. சரி விடு அவன நான் பாத்துக்கறேன்'னு சமாதானம் பண்ணி அனுப்பிச்சாரு.

அப்பரம் அவரு வீட்ல வந்து எங்கம்மாவ புடிச்சு " ஏண்டி உங்கண்ணன் இப்படி இருக்கிறான். சின்னபபயங்கிட்ட போயி அவனோட பணத்திமர காமிச்சிருக்கான். உங்க குடும்பமே இப்படித்தான். எப்படித்தான் நீ அங்க வந்து பொறந்தயோ. உனக்காக எல்லாத்தயும் சகிச்சுக்க வேண்டியிருக்கு.. அன்னைக்கு அந்த வீட்டு வேலைக்கு போன பொண்ண அடிச்சப்பவே உங்கண்ணன் கையவெட்டிருப்பாங்க அந்த சாதிக்கார பசங்க.. அவன் நல்ல நேரம்.. எங்கிட்ட பிரச்சினை வந்ததால அன்னைக்கு சமாதனப்படுத்தி அனுப்பினேன் அவங்களை." அப்படின்னு திட்டிட்டு போனாரு. அதுக்கப்பறம் எங்கம்மா " எப்பதான் அவன் திருந்தப்போரானோ?. அவன் திருந்தரானோ இல்லையோ, அகிலாவ என் பையனுக்கு கட்டிகிட்டு வந்து அவன் பாவத்துல இருந்து அந்தப்புள்ளய காப்பாத்துனும்" னு முனகிக்கொண்டே உள்ளே போனாங்க.

உங்க மாமன் அவ்வளவு மோசமான ஆளா? பெரிய கட்டை தொரையா இருப்பானாட்ட இருக்கே...



யோகி : அதுக்கப்பரம் நான் அவள பாத்தது, மூனு வருசத்துக்கப்புறம் நம்ம காமாட்சியம்மன் கோவில் தேர் திருவிழாவுல. நான் வழக்கம்போல என் கூட்டாளிகளோட அப்படியே கூட்டத்த பார்த்து சுத்தி வந்துட்டு இருந்தேன். அப்ப யாரோ நம்மள வாச் பண்ரதா நம்ம ராடார் சிக்னல் கொடுத்துச்சு. அப்படியே சிக்னல் வர்ர பக்கம் திரும்பி பாத்தா அகிலா, சிவப்பு பட்டு பாவாடை தாவனியோட இன்னொரு அம்மன் மாதிரி அவிங்க குடும்பத்தோட நின்னுட்டு இருந்தா. நான் பாக்குறேன்னு தெரிஞ்சதும் அப்படியே வேடிக்க பாக்கர மாதிரி அந்தபக்கமா திரும்பிட்டா.

ஆகா.. இப்படித்தான் உனக்கு நீயே ஆப்பு வெச்சிட்டயா?


யோகி: சரி.. உண்மயாத்தான் வேடிக்கை பாக்கறா போல.. நம்ம ரேடார்ல தான் ஏதோ கோலார்னு நெனச்சுட்டு அப்படியே அங்க ராட்டினம் சுத்தர பக்கம் நகர்ந்தோம். அப்பரம் கோஞ்ச நேரங்களிச்சி நம்ம ராடர்ல மறுபடியும் சிக்னல். என்னன்னு பார்த்தா, நம்ம அம்மன் கையில ஒரு சின்ன குழந்தை. "என்னடா கண்ணா ? எப்படி இருக்கிறே ? விளையாடனுமா?" அப்படின்னு எனக்கு ஒரு கேள்வியும் குழந்தைக்கு ஒரு கேள்வியுமா கொஞ்சிட்டு இருந்தா.

அட..உனக்கு எங்கப்பா ஒரு கேள்வி?

யோகி : "என்னடா கண்ணா? எப்படி இருக்குறே?" அப்படிங்கறது என்னை பாத்து கேட்ட கேள்வி. கிருஸ்ணனுக்கு இன்னோரு பேரு கண்ணன். இதுகூட தெரியாம எப்படித்தான்...."

ஓஹோ.. இப்படியெல்லாம் பொண்ணுங்க பேசுவாங்கன்னு எனக்கு தெரியாம போச்சே. அப்ப எத்தன பேரு என்னை என்னை என்னென்ன பேரு வெச்சு கூப்டாங்களோ. எல்லாத்தயும் இப்படி மிஸ் பண்ணிட்டு இன்னைக்கு இவன் காதல் கதைய இப்படி கெறங்கி கேக்கற மாதிரு ஆகிப்போச்சே கருப்பு சிங்கம்.. சரிப்பா நீ கண்டினியூ பண்ணு...

(அலம்பல் தொடரும்...)

2 comments:

  1. Again a different approach to your narration... I guess you are at your creative best following different narration techniques each time... All the best...

    Regards,
    Yoga

    ReplyDelete
  2. Quite interesting....keep continue the "yogi's biograpy".... Pakkithila irrunthu pakkura madhiri oru feeling pa...enjoying the reading...waiting for the next part.... post it soon...

    Regards,
    Gopi

    ReplyDelete