Friday, October 31, 2008

சாப்ட்வேர் இஞ்ஜினியர் - நேற்று - இன்று

நேற்று:

பக்கத்து ரூம் நண்பர்கள் :அவனுக்கென்னப்பா ஒன்னாந் தேதியான ரொக்கமா இருபதாயிரம், முப்பதாயிரம் சம்பளம் வாங்குறான்.
---------
ஆட்டோகாரர் : சார்.. பாத்து ஒரு நூறு ரூபா கூட போட்டு குடு சார். டைடல் பார்க்ல வேலை செய்யற... ஆட்டோக்காரங்கிட்ட கணக்குப் பாக்கிறயே சார்.

சாப்ட்:(மனதுக்குள்) டைடல் பார்க் முன்னாடியே இறங்கி கொஞ்ச தூரம் நடந்து வந்திடனும்.
-----------
டாக்டர்: என்ன வேலை பாக்குறீங்க...

சாப்ட்: (மனதுக்குள்)பல் வலிக்கு மருந்து குடுக்க நான் என்ன வேலை செய்யறேன்னு சொல்லனுமா.... சாப்ட்வேர் இஞ்ஜினியர்..

டாக்டர் : அப்படிங்களா.... இதுல உங்க பல்லு வலிக்கு மருந்து எழுதிருக்கேன். பீஸ் மூனாயிரம்.

சாப்ட் : (மனதுக்குள்)நெஞ்சு வலிக்குதுங்க டாக்டர்.

------------
போக்கு வரத்து காவலர் : ஏப்பா இவ்வளவு வேகமா வண்டிய ஓட்டிடு எங்க போற.(மத்திய கைலாஸ்-ல் நின்னுட்டு.)

சாப்ட் : சார்.. ஸ்பீடு லிமிட்ல தான் வந்தேன். (அதான் ஐடி கார்ட பாத்துட்டீங்கள்ள.. வண்டிய தள்ளிட்டு வந்தாலும், ஓவர் ஸ்பீடுன்னு புடிப்பீங்க..நேத்து லேட் நைட் வேலை செஞ்சது, காலைல கிளையன்ட் மீட்டிங்குன்னு சொன்னா விட்டுடவா போறீங்க..)

போக்கு வரத்து காவலர் : பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க... எந்த கம்பெனி.. சரி ஒரு 500 ரூபா பைன் கட்டிருங்க.

சாப்ட் : பணத்தை கொடுத்து விட்டு. (மனதுக்குள்)இனிமேல் இந்த ஐ.டி கார்ட வெளிய மாட்ட கூடாது..
------------

வீட்டு புரோக்கர் : சார்.. இப்பல்லாம் வீடு கிடைக்கறதே பெரிய விசயம். நீங்க சாப்ட்வேர்ல ஒர்க் பண்றேன்னு சொல்றீங்க... உங்களுக்காக ஒரு வீடு பாத்து வச்சுருக்கேன். வாடகை பதினைஞ்சாயிரம் ரூபா. கமிசன் எழாயிரத்து ஐநூறு.

சாப்ட் : (மனசுக்குள்..) இதுக்கு முன்னாடி குடியிருந்தவர் மூவாயிரத்து ஐநூறு ரூபாதான் குடுத்துட்டு இருந்தாருன்னு பக்கத்து வீட்ல சொல்றாங்க.
----------

பெண்வீட்டார் : மாப்ளை சாப்ட் வேர் இஞ்ஜினீர்ங்கரதால நாங்க வேற எதப்பத்தியும் கவலை படலை. இந்த 100 சவரன் நகையும், காரும், ரொக்கம் 10 லட்சம்தான் என்னால என் பொண்ணுக்கு செய்ய முடியும்.

சாப்ட்: (மனதுக்குள்..) எனக்கு பொண்ணை குடுக்கிறீங்களா? இல்லை என் வேலைக்கு பொண்ணை குடுக்குறீங்களா?
... சரி இவ்வளவு தொந்தரவு பண்றதால சரி.. உங்க பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.

------------

இன்று.... நாளை..

Wednesday, October 29, 2008

செய்தி திணிப்பு 2

இன்றய செய்தி திணிப்பு

தி ஹிந்து.

1. தேஸ்முக் வட இந்தியர்களுக்கு ஆறுதல்.
2. ஆனத் உலக சாம்பியன்.
3. நில நடுக்கம் காரணமாக பாகிஸ்தானில் 170 பேர் பலி.
4. மஹாராஸ்ட்ரா வில் நடந்த சம்பவங்களுக்கு மத்திய அரசு. - மாயாவதி.
5. பாராமுலாவில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.
6. ஜெயலலிதாவுக்கு வந்த மிரட்டல் கடிதம் மீதான மனுவை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.
7. பாதுகாப்பு குறைவான மாநிலங்களுக்கு ரயில் போக்கு வரத்தை நிருத்த தயங்க மாட்டோம். - பிகார் மக்கள் மகாராஸ்ட்ராவில் தாக்கப் பட்ட சம்பவத்துக்கு லாலு பிரசாத் எச்சரிக்கை.
8. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை - கருணாநிதி.
9. தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பின் பாதுகாப்பை மீறி குண்டுகள் வீசி சென்றுள்ளனர்.

இலங்கையில் கள முனையில் 60 ராணுவ வீரர்கள் பலி மற்றும் சீமான், அமீர் பினை விடுதலை போன்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

தினமலர்

1.ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் மிரட்டல்! தாய்லாந்தில் இருந்து வந்தது எச்சரிக்கை.(எழுதியது விடுதலைப் புலிகள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட வில்லை. இந்த சூழ்நிலையில் புலிகளின் இயக்கம் இது போன்ற செயல்களை செய்திருக்க வாய்ப் பில்லை என்பது அறிவுள்ள எவர்க்கும் விளங்கும்)
2. பாகிஸ்தானில் பூகம்பம்: 200 பேர் பலி.(மற்ற பத்திரிக்கை களில் 170.)
3. இலங்கை பிரச்சனைக்கு ராஜிவ் வழியில் தீர்வு காணவேண்டும். - கருணாநிதி.
4. அடுத்த தாக்குதல்! மும்பையில் உ பி வாலிபர் கொலை. அமர்சிங் மாயவதி கடும் எரிச்சல்.
5. நிதி நெருக்கடி நிலவரம். சிதம்பரம் ஆலோசனை.
6. கொழும்பு, மன்னார் முகாம்களில் புலிகள் குண்டு வீச்சு.
7. ஆனந்த் உலக சாம்பியன்.

புலிகளின் கொழும்பு விமான தாக்குதல், கள முனையில் 60 ராணுவ வீரர்கள் பலி மற்றும் சீமான், அமீர் பினை விடுதலை போன்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

தின தந்தி

1. பாகிஸ்தானில் நில நடுக்கம் : 170 பேர் பலி
2. இயக்குனர்கள் சீமான், அமீர் பினையில் விடுதலை.
3. இலங்கை தமிழர்களுக்கு 2 1/2 கோடி கருணாநிதியிடம் வசூல்.
4. ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்.
5. உலக சதுரங்கம் - ஆனந்த் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.

தின மணி

1. இன்னும் பத்து நாட்களில் தனியார் நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கை.
2. பாகிஸ்தானில் நில நடுக்கம் 170 பேர் பலி
3. கனடாவில் இருந்து ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்.
4. நீலிக்கண்ணீர் வடிக்கிறார் இலங்கை அதிபர் - ராமதாஸ்
5. பா ஜா கா ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு.
6. உ. பி இளைஞர் மும்மையில் அடித்து கொலை.
7. இலங்கை ராணுவத்தினர் 60 பேர் பலி.
8. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ஆனந்த்.

தமிழர் எழுச்சியை தடுக்கும் நாளேடுகளை உங்கள் இல்லத்திலும், அலுவலகங்களிலும் தவிர்க்கவும்.

Tuesday, October 28, 2008

செய்தி திணிப்பு 1

சில இந்திய நாளேடுகளின் செய்தி திணிப்பு மற்றும் திரிப்புகளை இந்த தொடர் பதிவின் மூலம் வாசக நெஞ்சக்களின் பார்வைக்கு.


தி ஹிந்து

சிறப்பு பத்தி: நாங்கள் அரசியல் தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளோம்.- ராஜ பக்ச.
http://www.hindu.com/2008/10/29/stories/2008102957320100.htm

முதன்மை செய்தி: நேர்காணல் : நானே அரசியல் நடவடிக்கைகளை முன்னின்று நடத்துவேன் - ராஜ பக்ச.
http://www.hindu.com/2008/10/29/stories/2008102960181200.htm

அமைதியை காப்பதில் ஊடகங்கள் சமூக அக்கறை கொண்டிருக்க வேண்டும் - ராம் http://www.hindu.com/2008/10/29/stories/2008102960181200.htm

வான் தாக்குதலுக்குப் பிறகு கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
http://www.hindu.com/2008/10/29/stories/2008102960191200.htm

கொழும்பின் இரவில் வானில் அரங்கேரிய நாடகங்கள்
http://www.hindu.com/2008/10/29/stories/2008102957380100.htm

இலங்கை தமிழர்களுக்கான தமிழ் மக்களின் உதவி குவிகின்றது.
http://www.hindu.com/2008/10/29/stories/2008102957310100.htm

செய்திகளை அதனின் முக்கியத்துவம் பொறுத்து அதனை முதன்மை படுத்துவதில் தொடங்கி
ஹிந்துவின் தமிழ் உணர்வு செய்திகளின் இருட்டடிப்பும் சிங்கள அரசின் அடிவருடுவதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


தின மலர்

மகிழ்ச்சி மத்திய அரசுக்கு - நெருக்கடி நீங்கியதால். பாராளுமன்ற தேர்தல் வரை இழுத்தடிக்க முடிவு.

திமுக வுக்கு ஆதரவாக காங்கிரஸ் நடக்கிறது - ஜெயலலிதா.

தமிழகத்தில் ஊடுருவிய விடுதலை புலிகள்?(தினத்தந்தி செய்தியை பார்க்க)

நடிகர் சங்க உண்ணாவிரதத்துக்கு கட்டுப்பாடு.
ரஜினி, கமல் பங்கேற்கலாம்

இலங்கை தமிழர் பிரச்சனையில் ரஜினி தனி ஆவர்த்தனம் - ரசிகர்களின் அதிருப்தியை சிதரடிக்க திட்டம்

தமிழக அரசு சொந்த நிதியிலிருந்து உதவ வேண்டும் - ராமதாஸ்

வன்முறையாளர்களை எதிர்ப்போம் - காங் தலைவர் தங்க பாலு.

சீமான், அமீர் சாமீன் மனு அக் 31 வரை தள்ளிவைப்பு

தினத்தந்தி

இலங்கை தமிழ்ர்களுக்கு நிவாரணம் குவிகிறது

விடுதலை புலிகளின் விமானம் கொழும்பு நகரில் குண்டு வீச்சு

இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல்தீர்வு காண அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் - என். வரதராஜன். கம்யூனிஸ்டு தலைவர்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்கள் பெரிய அளவில் உதவி செய்ய முன் வரவேண்டும். மு. கருணாநிதி

இலங்கையில் தவித்த தமிழக மீனவர்கள் ஆறுபேர் விமானம் மூலம் சென்னை வருகை.

இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வு காணும் வரை நமது கூட்டு மூயற்சி தொடர வேண்டும் - ராமதாஸ்

படகில் அகதிகளாக வந்த இலங்கை தமிழ் மீனவர்கள் ஐந்துபேர் இந்திய கடற்படையிடம் சிக்கினர்.(தினமலர் இவர்களை புலிகள் என்று குறிப்பிட்டுள்ளது)

இலங்கை தமிழர் பிரச்சினையில் இரயில் மறியல் நடத்த திட்டம் - புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ சி சண்முகம்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியிருந்தால் என்னை தாராளமாக கைது செய்ய்யுங்கள்.- திருமா.

இலங்கையில் போர் நிறுத்தம் மட்டுமே மன நிறைவை தரும் - தா. பாண்டியன். கம்யூனிஸ்ட்.


தமிழர் விரோத ஏடுகளை அடையாளம் கண்டு கொள்வீர்.

Thursday, October 23, 2008

விடுதலையும் சனநாயகமும்

விடுதலை என்பது யாராலும் அடிமையாக்கப் படாமல் இருப்பது மட்டுமல்ல. தான் நினைத்ததை சொல்லவும், செய்யவும், செயலால் வரும் விளைவை அனுபவிப்பதும், கொண்டாடுவதும் கூட.

மக்களாட்சியில் மக்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும். முக்கியாமான முடிவுகள் எடுப்பதில் தொடங்கி அயலுறவுக் கொள்கை வரை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மேல் சொன்ன இரண்டும் உலகின் மிகப்பெரும் விடுதலை அடைந்த மக்களாட்சி நாடான இந்தியாவுக்குப் பொருந்துமா என்பது இந்திய குடிமக்கள்தான் சிந்திக்கவேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல், அதில் பெரும்பாண்மை மக்கள் வாக்களித்து தேரிவு செய்யும் நபரே முதலமைச்சர், பிரதம மந்திரி(வடக்கு சார்ந்த பதவி என்பதால் வடமொழி, மற்றபடி இரண்டும் ஒரே கருப்பொருளை கொண்டுள்ளன).

இவர்களின் பதவியின் பெயரிலேயே யார் இவர்கள் என்பது விளங்கும். ஆனால் முதல் அமைச்சரும், பிரத மந்திரியும் மன்னனாக முடியாது. மன்னன் சொல்லும் முடிவுகள் மற்றும் திட்டங்களை செயல் படுத்த வேண்டும். அப்படியா இருக்கின்றது இன்றைய சனநாயகம்? இந்தியா விடுதலை பெற்ற 1947 களில் வேண்டுமானால் மக்களின் கருத்தை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கேட்பது சரியாக இருந்திருக்கலாம்.

வெண்ணிலாவிற்கு விண்கலம் அனுப்பிய 2007லில் மக்கள்(மன்னன்) கருத்தை முக்கியமான முடிவெடுக்கும் நேரங்களில் கேட்பது ஒன்றும் நடக்காத செயலில்லை. சரி.. அப்படி முடியாமல் இருக்குமானால், இதே மக்களாட்சிதான் இனி வரும் காலங்களிலும் இருக்குமா?
ஐம்பது ஆண்டுகாலம் மக்களின் பெயரால் மண்ணையும் மக்களின் வரிப்பனத்தையும் தின்ற இந்த அமைச்சர்கள் உண்மையான மக்களாட்சியை கொண்டுவர என்ன முயற்சி செய்துள்ளனர்?.அல்லது இனிமேல் செய்வதற்கான திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா?

இங்கு காஷ்மீரில் ஒரு சட்டம், ஒரிஸ்ஸாவில் ஒரு சட்டம், தமிழகத்தில் ஒரு சட்டம். காஷ்மீரில் ஹூரியட் பிரிவினை பேசினால், அது பேச்சு சுதந்திரம். தமிழ்நாட்டில் பேசினால் தேச துரோகம். அப்படியானால், காஷ்மீர் இந்தியாவின் அங்கம் இல்லை என இந்திய அரசே ஒத்துக்கொள்கிறதா?.

இங்கு சட்டம் என்பது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் ஆயுதமாகவே மாற்றிவிட்டனர் இந்த அமைச்சர்கள். மகுடம் தரிக்க வேண்டிய மன்னன்(மக்கள்) மண்டியிட்டு கிடக்கிறார்கள்.

இருக்கும் வேட்பாளர்களில் எந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மட்டுமே மக்கள் தீர்மானிக்க வேண்டியது, இந்த சனநாயகத்தில். யாரை வேட்பாளரக நிறுத்த வேண்டும் என்பது கட்சிகளின் தலைவர்கள்தான், அவரின் செல்வாக்கை(!) பொறுத்து, நியமனம் செய்வார்கள். தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளார் மக்கள்(மன்னன்) தலையெழுத்தைய மாற்றக்கூடிய வல்லமை பொறுந்திய அமைச்சர்களாகின்றனர். இது தான் மக்களாட்சியா?

காலையில் எட்டு மணிக்கு தொடங்கி மாலை ஆறுமணி வரையும், அதற்கு மேலும் அலுவலகத்தில் வாழ்ந்துவிட்டு மீதி நேரத்தை தொலைக்காட்சிப் பெட்டியில் கழிக்கும் மக்களாட்சி மன்னர்கள் வாழ்க்கை முறையால், எதிர்காலத்தில் யாராவது ஒருவர்க்கு அடிமையாகவே இருந்துகொண்டு தன் வாழ்க்கையையும், தன் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையையும் அடகுவைத்து விடவேண்டியதுதான்.

தன்னுடைய தலையெழுத்தை தானே தீர்மானிக்க முடியாதவனை அடிமையென்ற சொல்லை தவிற வெறெந்த சொல்லும் அடையாளப்படுத்தாது. அப்படித்தான் இந்த உலகின் மாபெரும் மக்களாட்சி நாட்டின் குடிமக்கள் இருக்கின்றனர். சிந்திக்க சொல்லில் கொடுத்தவர் தந்தை பெரியார். நேர்மையின் இலக்கணம் கர்ம வீரர் காமராசர். அறிவின் ஊற்று அண்ணா. இவர்கள் காலத்தில் வேண்டுமானால் உண்மையான மக்களாட்சி இருந்திருக்கலாம். இன்றைக்கு ஆட்சியாளர்கள் மக்களை(மன்னனை) ஆணையிட(வாக்களிக்க) கூட அனுமதிக்காமல் அடித்து வீட்டுக்கு அனுப்பி, அவன் பெயரில் அவர்களே அதை செய்து கொள்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் மன்னனை(மக்களை) மதியிழக்க, மது(டாஸ்மாக்), மாது(மானாட மயிலாட)மற்றும் இன்ன பிற இலவசங்கள் கொடுத்து போதை யேற்றுகிறான்.

இதையெல்லாம் எதிர்க்க மக்கள் ஒன்று திரண்டால், சாதி, மொழி, மதம் என்று சொல்லி ஒரு ஊசியை போட்டு படுக்கவைத்து விடுகிறான்.இன்றைய இளவரசர்களோ, நாடக நாயகர்கள் பின்னாலும், மேற்கத்திய கலாச்சார மோகத்தினாலும் தான் யாரென்று தெரியாமலே அழிந்து போகிறான். இவர்கள் விழிக்காத வரை இந்த அமைச்சர்கள் தான் அமைச்சராட்சி ந்டத்திக் கொண்டிருப்பார்கள்.

சனநாயகம், அது இறந்து விடவில்லை, ஆனால் அது இந்தியாவில் இல்லை.

Tuesday, October 14, 2008

பூனைக்கு மணி கட்டிய புலி

செப் 9, அதிகாலை மணி 3. சூரியன் வந்து தூக்கம் கலைப்பதற்குள், நீண்ட துயிலில் இருந்த தமிழினத்தையும், சூரியனையும் எழுப்ப வரலாறு குறித்த கொடுத்த நேரம். பகை என்னும் நெறுப்பு எல்லாத் திசையிலும் பரவியிருந்த போதும் சிறகு முலைத்த இரண்டு புலிகள் வன்னிக்காட்டின் மேல் பறந்து, "என் கண்ணில் யாரும் தப்ப முடியாது" என்று இருமாப்புடன் விழித்திருந்த வான் கண்காணிப்பு பொறிகளின் கண்களில் மண் தூவி இடியை எச்சம் போல் தலையில் இறக்கிச் சென்றன பறக்கும் புலிகள்.

கண் விழிப்பதற்குள், கண்கள் குருடாகி வானம் பார்த்து வீழ்ந்தது சிங்களக் கொடி. விழுந்த சிங்களத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருந்த வல்லரசின் துருப்புக்களும் புலியின் வான் குண்டுக்கு தப்ப வில்லை. அங்கே அண்டார்டிக் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அவர்களை அங்கவீனப் படுத்தியது தொடர்பாக இந்தியப் பேரரசு எந்த கவலையும் வெளியிடவில்லை என்பது கியாஸ் தியரி.

அரசியல் அஞ்ஞானி, வன்முறை விஞ்ஞானி என்றெல்லாம் பெயர் சூட்டிப்பார்த்த அரசியல் ஞானிகளின் தலையில் குட்டி, பாடம் புகட்டிவிட்டான் யாழின் மைந்தன். வாரிக் கொடுத்து, ஆயுதங்கள் ஆயிரம் வாங்கிக் கொடுத்து, கூடிக் கூடி தீட்டிய திட்டமெல்லாம் இன்று குப்பை மேடானது. எதிரியின் விரல் கொண்டே அவன் கண்ணை குருடாக்கி நிலை குலையச் செய்ய இரண்டு குண்டுகளே போதும் அவனுக்கு.

தமிழினத்தை காவு வாங்க துடிக்கும் சிங்கத்தோல் போர்த்திய பூனைக்கு புலிகட்டிய மணி ஒலிக்கும் போதெல்லாம் விழித்துக் கொள்வார்களா இந்த கருப்பு, சிவப்பு என பல வண்ணங்களில் உலவும் இனக்காவலர்கள்?