Tuesday, October 14, 2008

பூனைக்கு மணி கட்டிய புலி

செப் 9, அதிகாலை மணி 3. சூரியன் வந்து தூக்கம் கலைப்பதற்குள், நீண்ட துயிலில் இருந்த தமிழினத்தையும், சூரியனையும் எழுப்ப வரலாறு குறித்த கொடுத்த நேரம். பகை என்னும் நெறுப்பு எல்லாத் திசையிலும் பரவியிருந்த போதும் சிறகு முலைத்த இரண்டு புலிகள் வன்னிக்காட்டின் மேல் பறந்து, "என் கண்ணில் யாரும் தப்ப முடியாது" என்று இருமாப்புடன் விழித்திருந்த வான் கண்காணிப்பு பொறிகளின் கண்களில் மண் தூவி இடியை எச்சம் போல் தலையில் இறக்கிச் சென்றன பறக்கும் புலிகள்.

கண் விழிப்பதற்குள், கண்கள் குருடாகி வானம் பார்த்து வீழ்ந்தது சிங்களக் கொடி. விழுந்த சிங்களத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருந்த வல்லரசின் துருப்புக்களும் புலியின் வான் குண்டுக்கு தப்ப வில்லை. அங்கே அண்டார்டிக் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அவர்களை அங்கவீனப் படுத்தியது தொடர்பாக இந்தியப் பேரரசு எந்த கவலையும் வெளியிடவில்லை என்பது கியாஸ் தியரி.

அரசியல் அஞ்ஞானி, வன்முறை விஞ்ஞானி என்றெல்லாம் பெயர் சூட்டிப்பார்த்த அரசியல் ஞானிகளின் தலையில் குட்டி, பாடம் புகட்டிவிட்டான் யாழின் மைந்தன். வாரிக் கொடுத்து, ஆயுதங்கள் ஆயிரம் வாங்கிக் கொடுத்து, கூடிக் கூடி தீட்டிய திட்டமெல்லாம் இன்று குப்பை மேடானது. எதிரியின் விரல் கொண்டே அவன் கண்ணை குருடாக்கி நிலை குலையச் செய்ய இரண்டு குண்டுகளே போதும் அவனுக்கு.

தமிழினத்தை காவு வாங்க துடிக்கும் சிங்கத்தோல் போர்த்திய பூனைக்கு புலிகட்டிய மணி ஒலிக்கும் போதெல்லாம் விழித்துக் கொள்வார்களா இந்த கருப்பு, சிவப்பு என பல வண்ணங்களில் உலவும் இனக்காவலர்கள்?

No comments:

Post a Comment