Thursday, July 31, 2008

ஒரு நடிகனின் வேசமும் நாகரிக கோமாளிகளும்

"எல்லோருமே திருடங்கதான், சொல்லப்போனா குருடங்கதான்" ன்னு இசை ஞானி பாடின பாட்டு இன்னைக்கும் அப்படியே இருக்கு. ஆனா அதை பாடுவது போல் பாவனை செய்த சிவப்பு மனிதனின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. தன் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே சினிமாவை சேர்த்துக்கொண்ட ரசிகனுக்கு இவர் போன்ற வேசதாரிகளின் நடிப்பை சினிமாவுக்கு வெளியிலும் புரிந்து கொள்ள முடியாத பகுத்தறிவு பாடம் புகட்டியுள்ளது முற்ப்போக்கு கழகங்கள்.

தண்ணீர் கேட்டு தமிழன் தவித்து கொண்டிருக்கும் இந்நாளில் அவன் கண்ணீரும் காசாக்க தெரிந்த்தவர்தான் இந்த வியாபாரி. தமிழனுக்கு செஞ்சோற்று கடன் பட்டவன் போல் மேடையில் பேசி இன்று அவன் சோற்றிலே கைவத்தவர்தான் இந்த கலியுக சிவாஜி.

தமிழன் காதுக்கெட்டாத தூரம் போய் அவனுக்கு ஆதரவாய் பேசியதற்கு மண்ணிப்பு கோரியிருக்கும் இந்த மாமனிதனையும் மண்ணிக்கப் போகிறானா இந்த மானங்கொண்ட தமிழன்?

ஆடிப் பிழைப்பவரின் ஆட்டத்தை மட்டும் ரசிக்கத் தெரிந்த்திருந்தால் இன்று பரதேசியாய் தண்ணீருக்காக பிச்சை பாத்திரமேந்தியிருக்க வேண்டியதில்லை. பிச்சை எடுக்க வேண்டும் என்று எண்ணித்தானே இந்த தமிழர் விரோத பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவனுக்கு தெரியாமலே அவன் மேல் கருத்தை தினித்துக் கொண்டிருக்கின்றன். அவாளை சொல்லி குற்றமில்லை. பகுத்தறிவு கற்றுத் தரவேண்டிய கழகங்கள் தமிழன் பெயர் சொல்லிக் கொள்ளையடிக்கும் கூட்டுத்தொழிலல்லவா செய்து கொண்டிருக்கின்றன.

"அடி வாங்குனது போன வாரம், இது இந்த வாரம்" னு சொல்லிட்டு குசேலன் பார்க்க கிளம்பும் ரசிகனுக்கு வாழ்த்துக்கள்.

Sunday, July 27, 2008

சார்க் 2008 ம் விடுதலை புலிகளும்

"இந்த ஆண்டு சார்க் மாநாடு இன்று முதல் சிறிலங்கா தலை நகர் கொழும்புவில் தொடங்கியது"- இது இந்தியாவில் தென் மூலையில் இருந்து கொண்டு கலைஞர் டிவி மானாட மயிலாட நிகழ்ச்சியின் விளம்பர இடைவெளியில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்புக்கிடையே ஒரு வினாடி கேட்டுக்கொண்டு மீண்டும் இன்னும் ஒரு தமிழ் கலாச்சாரம் வளர்க்கும் தொலைக்காட்சிக்குள் மூழ்கிவிட எத்தனித்தேன். அப்பொழுது திடீரென நம் பாட்டன் பாரதி தோன்றினான்.

பாரதி : "என்னடா பேரா, நலமா?" என்றான்

அதெல்லாம் சவுக்கியமா இருக்கோம்ல. நீ எப்படி, சவுக்கியமா?

பாரதி : ஏதோ கொஞ்சம் உயிருடன் இருக்கும் தமிழின் உயிரைக் காப்பாற்ற ஆவியை பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

ஏன் தமிழுக்கென்ன? நாங்கதான் இப்ப சினிமா பேரெல்லாம் தமிழ்லதான் வெக்கறமல்ல.

பாரதி : ஆம். ஆம். இப்பொழுது தமிழ், திரைப்படங்களின் பெயரில்தான் வாழ்கிறது. அதற்கு விருதுகளும் வரி விலக்கும் தருவதுகூட இப்பொழுது எப்படி தமிழை தத்தெடுக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

உனெக்கென்ன தாத்தா உன்னோட பிரன்ஸுகளும் சிஸ்யர்களும் தமிழால் வாழ்ந்து தமிழையும் வாழவைச்சிட்டு போயிட்டீங்க.. இப்ப பாவம் நம்ம முத்தமிழ் காவலர் மட்டும் தனியா ஒத்த ஆளா நின்னு தமிழை தொலைக்காட்சில வாழ வெக்கிறார்.

பாரதி : ஆம். பார்த்தேனே.. நீங்கள் எப்படி தமிழை வளர்க்கிறீர்கள் என்று. தமிழ் பத்தினி தாயடா. அவளை ஏன் வேறு மொழிகளுடன் கலந்து வேசியாக்கி வணிகம் செய்கிறீர்கள் ?பதர்களே... உங்களிடமா என் தாயை ஒப்படைத்து விட்டு போனேன். அய்யகோ......

அய்யய்யோ.. தாத்தா நீ ஏன் உணர்ச்சி வசப்படரே. நீ இருந்த காலம் வேற இப்ப இருக்கற காலம் வேற. இப்பல்லாம் ஸ்கூல்ல தமிழ்ல பேசுனாலே தண்டனை குடுக்கிற காலம். நீ வேற சும்மா பொலம்பிட்டு... சரி வந்து இப்படி உக்காந்து நாங்க எப்படி இசைத்தமிழை நாட்டியத்தோட வாழ வைக்றம்னு பாரு.

பாரதி : "எங்களின் தாயவளை கொச்சை படுத்தி கூவி கூவி விற்க்கும் உங்களை கொன்றாலே அவளின் ஆயுள் அடுத்த நூறாண்டு வரை வாழுமடா" ன்னு கொலை வாளை எடுத்து முதலில் என் நாக்கை வெட்டி பின் என் தலையை வெட்டி அவன் வணங்கும் காளிக்கு என்னை காணிக்கை கொடுத்து விட்டான்.

நாக்க மூக்க ரிங் டோன் அலர எந்திருச்சு பாத்தா... யப்பா.. இது கனவுன்னு கன்பார்ம், சாரி.. மண்ணிக்கனும், உறுதிப்படுத்திக்கிறதுக்கு கழுத்தை தொட்டு பார்த்துக்கிட்டேன். தலை ஒட்டிக்கொண்டுதான் இருந்தது.

சரி எழுந்திருச்சு வெளிநாடு வாழ் தமிழ் நண்பனின் அழைப்பை ஏற்று நாட்டு நடப்பு பற்றி கதைத்து கொண்டிருந்தோம். அவன் "சார்க் மாநாட்டை முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிருக்காங்க.. தெரியுமா?" ன்னு கேட்டான்.

அட எங்க நீ வேற.. இங்க எங்கப்பா தைரியமா புலிகளை பத்தி செய்தி சொல்றாங்க. அப்பப்போ இத்தனை புலிகளை இலங்கை ராணுவம் கொன்றுச்சுன்னு கணக்கு சொல்லுவாங்க. அதுக்கு மேல ஒன்னும் சொல்ல மாட்டங்க. நான் சின்னப் பையனா இருந்தப்ப இருந்து இவுங்க சொன்ன கணக்குப்படி பார்த்தா புலிகளின் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையவிட இரண்டு மடங்கு இருக்குமல்ல.

சரி சார்க் மாநாட்டுக்கு ஏன் புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிருக்காங்க?

நண்பன் : என்ன இருத்தாலும் தமிழீழமும் தெற்க்காசிய நாடுதானே?

நான் : அதெப்படி இந்தியா அனுமதிக்காம தமிழீழம் உருவாச்சு. இங்க நாங்கதான் வல்லரசு தெரியும்ல.

நண்பன்: ஆமாம். உங்கள் உளவுத்துறையும் உங்கள் ஊடகங்களும் அப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

நான் : டேய். எங்க நாட்ட பத்தி தப்பா பேசாத. அப்பரம் விஜையகாந்த் அர்ஜுன் கிட்ட எல்லாம் சொல்லி உன்ன என்கவுண்டர் பண்ணிருவோம்.ஜாக்கிரதை!..

நண்பன்: நான் ஏண்டா உங்க நாட்டை பத்தி தப்பா பேசப் போறேன். இணையத்துல வந்து நாலு செய்திய படிச்சுப் பாரு. உனக்கே புரியும்.

நான் : என்னட சொல்றே?

நண்பன் : இப்ப உங்க பிரதமர் சார்க் மாநாட்டுக்கு சிறிலங்கா போறார்ல. அதுக்கு எதுக்கு 5000 வரையிலான உங்க ராணுவ வீரர்களோட போறார்?

நான் : அங்கதான் எப்ப பாத்தாலும் குண்டு வெடிக்குதல்ல. ஒரு வல்லரசின் பிரதமரை தீவிர வாதத்திடமிருந்து காப்பாத்தரதுல என்ன தப்பு?

நண்பன் : ஆமா. நேத்து கூடதான் உங்க நாட்ல பல இடங்கள்ல குண்டு வெடிச்சுது. அப்ப உங்க நாட்டுக்கு வர்ற அமெரிக்க அதிபர் 50000 படையினருடன் வருவாரா?

நான் : சரி என்னதான் சொல்ல வர்றே?

நண்பன் : முற்பகல் செய்யின் பிற்பகல் விழையும்னு உங்க அதிகாரிங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குப்பா.

நான் : புரியும் படி சொல்லு?

நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி சிறிலங்காவின் பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னாடி குண்டு வெடித்து பாகிஸ்தான் தூதர் Bashir Wali Mohmand மயிர் இழையில் உயிர்தப்பினார்..

நான் : அது விடுதலைப் புலிகள் செஞ்சிருப்பாங்க.

நண்பன்: ஆனா இதை அவங்க செய்யல. இது முழுக்க முழுக்க இந்திய உளவுத்துறை பண்ணின சதி வேலை ன்னு ஒரு சில பத்திரிக்கைல படிச்சேன். இலங்கை விசயத்துல பாகிஸ்தானோட தலையீடு மற்றும் ஆயுத உதவி போன்றவை வல்லரசுக்கு சற்று அச்சத்தை கொடுத்ததாகவும் எங்கே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கை என்ற சின்னப் பையன் வேறு ஒருவனின் கட்டுப்பாட்டுக்கு போயிருமோ என்ற எண்ணத்திலும் இன்னுமொரு காஷ்மீர் தென்னிந்தியாவில் உருவாகமல் தடுப்பதற்க்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் புலிகளின் பெயரை பயண்படுத்திக்கொண்டாதாகவும் தகவல்.

நான் : சே... சே... எங்க நாடு இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாது. இது முழுக்க முழுக்க வெளி நாட்டு சதி.

நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆப்கானிஸ்தான்ல இந்திய தூதரகத்துல குண்டு வெடிச்சு 40 க்கும் மேற்பட்டோற் இறந்த்ததாவது தெரியுமா?

நான் : ஆமாம். அது எங்களின் எதிரி பாகிஸ்தானின் சதிதான்.

நண்பன் : அதற்க்கு காரணம் தாலிபான்கள் என்று பாகிஸ்தான் சொல்லியிருக்கே?

நான் : அது பொய். பாகிஸ்தானின் ISI சதி.

நண்பன் : அது பாகிஸ்தானின் சதி. இங்கு நடந்தது புலிகளின் சதி.... நல்ல பகுத்தறிவுடா உனக்கு.

நான் : சரி இதுக்கும் புலிகளின் போர் நிறுத்தத்துக்கும் என்னடா சம்பந்த்தம்?

நண்பன் : இருக்கு. இந்த மாநாட்டை சாக்காக வைத்து பாகிஸ்தான் இந்திய பிரதமரை கொல்ல சதி திட்டம் தீட்டிருக்கலாம்னு ஒரு செய்தி இந்திய உளவுப்பிரிவுக்கு புலிகளின் உளவுப் பிரிவு மூலமா அனுப்பப் பட்டிருக்கு.

நான் : சரி நம்பிட்டேன். இதையே சாக்காக வைத்து பாகிஸ்த்தான் பிரதமரை கொலை செய்ய இந்தியா சதி செய்திருக்கிறதுன்னு தாலிபான் உளவுப்பிரிவு பாகிஸ்தான் உளவுப்பிரிகுக்கு தகவல் அனுப்பிச்சிருக்குமே?

நண்பன் : இருந்தாலும் இருக்கும். அதனால தான், அவுங்க இந்தியப் படைகள் பாதுகாப்புக்காக இலங்கையில் இருந்தால், தாங்கள் கலந்து கொள்ள போவதில்லைன்னு அறிவிச்சிருக்காங்க. இந்த வம்புல ஏன் தேவையில்லாம தமிழரின் விடுதலைப் போராட்டம் மாட்டிக்கிட்டு அல்லல் படனும்னு புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிட்டாங்க.

நான் : காக்கா உக்காற பனை மரம் விழுந்த கதையாவல்ல இருக்கு.

நண்பன் : "உண்மை எதுன்னு யாருக்கு தெரியும். காலம் தான் பதில் சொல்லனும்" னு சொல்லிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

என்னடா இன்னைக்கு ஒரே திகிலா போகுதுன்னு வொரி.. மண்ணிக்கணும்..வருத்தப்பட்டுட்டே .. வருத்தத்த போக்க ஏதவது ஒரு பள்ளிக்கூடம் பக்கம் பொறேன்.

அது என்னடா பள்ளிக்கூடத்துல வருத்தத்த போக்றாங்களான்னு நீங்க கேக்கறது தெரியுது.

அங்கதான் டாஸ்மாக் இருக்கும்ல............

http://www.dawn.com/2006/08/16/top10.htm
http://findarticles.com/p/articles/mi_kmafp/is_200608/ai_n16622684
http://www.thaindian.com/newsportal/india-news/isi-behind-the-indian-embassy-bombing-m-k-narayanan_10070860.html
http://wcbstv.com/topstories/afghanistan.bomb.blast.2.765878.html
http://www.colombopage.com/archive_08/July20160024JR.html
http://www.gulfnews.com/World/Afghanistan/10228788.html

Tuesday, July 22, 2008

திண்ணை காலி

எங்கடா மன்மோகன், சிதம்பரத்தையெல்லம் நிக்க வச்சு நாக்க மூக்க கேள்வி கேட்டுட்டு வெளியபோகும்போது தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் நம்மளை கைது பண்ணிட்டாங்களோன்னு பொங்க வெச்சு கொண்டாடுன உங்களை விடாது இந்த கருப்பு.

நாங்க கோடு எழுதுலேன்னா அமெரிக்க பொருளாதாரமே சும்மா மொடங்கிபோயுரும்ல... அதான் கொஞ்சம் டைம் பாசுக்கு கோடு எழுதி எழுதி ரிவியூல கோக்கு மாக்கா கேள்வி கேட்டவங்களுக்கு ஆப்பு வெச்சு சாமாளிச்சு வெளிய வர கொஞ்சம் லேட்டாயிருச்சு.

அதனால இந்த நாலுமாச நாட்டு நடப்ப நம்ம கலைஞர் மாதிரி நானே என்னை பேட்டி எடுத்து உங்களுக்காக பதிக்கிறேன்.

உலக நாயகன் நடிச்சு ஓடு ஓடுன்னு ஓடிட்டு இருக்கர தசாவதாரம் பற்றி....?

படம் நல்லா இல்லைன்னு சொல்லல. நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்.

இந்தியர்கள் அதிகமா சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்கன்னு புஸ் சொன்னத பத்தி...?

அது என்ன "ஆரம்பிச்சிட்டாங்க". இத என்னால ஏத்துக்க முடியாது. புஸ்ஸுக்கெல்லாம் பதில் சொல்லி நம்ம டைம வீண் பண்ணக்கூடாது.

திமுக கூட்டணியிலிருந்து ப மா கா வை கழட்டி விட்டதை பற்றி...?
காடுவெட்டி குரு மாதிரி ஆளுங்க எங்க தன்னோட கட்சிகாரங்கள விட மக்கள்கிட்ட அதிக செல்வாக்கு வந்துரும்னு ஒரு பயத்துல இந்த முடிவை எடுத்திருப்பார்னு நான் நினைக்கிறேன்.


தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொண்றதை கண்டித்து முதலமைச்சர் உண்ணா விரதம் இருந்தத பற்றி...?

எலக்சன் வருதல்ல. அதான் மீன் பிடிக்கறார் முதலை மச்சர்.

சிம்புவும் நயனும் சந்திச்சத பத்தி....?
நயந்தான் இந்த வம்ப பத்தி சிந்திக்கணும். தயவு செஞ்சு என்னோட நம்பர அந்த பொண்ணுகிட்ட குடுத்திடாதீங்க..

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐமுகூ வெற்றி பெற்றதை பத்தி....
பணம் 575ம் செய்யும்.

அடுத்த காவியம் எப்பன்னு நம்ம வாசகர்கள் கேள்விக்கு....?
விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

வருட்டுங்களா........