Sunday, March 22, 2009

Friday, March 6, 2009

எதிரியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

நா வரல கத்தியாகிவிட்டது. நாதியில்லாத இந்த இனத்தின் ஈனக்குரல் சமாதியிலிருக்கும் பேரரசின் காதை எட்டவில்லை. மானம் விட்டு மண்டியிட்டது போதும். அரசியல் காரணங்களுக்காக எத்தனை நாட்கள் எத்தனை விலைமதிக்க முடியாத உயிர்களை சுருங்கிக் கொண்டிருக்கும் இனம் கொடுக்கமுடியும்.

கிளர்ந்தெழும் இனவெழுட்சியை எப்படி முடக்கவேண்டும் என்று எமது தலைவர்களுக்கு தெரியும். இன்னும் இவர்களை நம்பி வாய்பிளந்து காலம் கடத்துவது இன்னும் இருக்கும் உயிர்களை பலிகொடுப்பதை தவிர வேறெதுவும் சாதிக்கப்போவதில்லை.

தமிழன் என்ற தனி அடையாளத்துடன் இந்தியாவில் வாழவேண்டுமென்றால் அதற்க்கு சரியான இடம் சிறைச்சாலைகள் என இந்திய சட்டம் கூறுவதை இன்னும் புரிந்து கொள்ள நமக்கு ஏன் இன்னும் தாமதம்.

பாகிஸ்தானிடம்,சீனாவிடம் இலங்கை ஆயுதம் வாங்குவது தனது இறையாண்மைக்கு ஆபத்து என தானே ஆயுதம் வினியோகிக்கும் இந்தியாவிடம் போர் நிறுத்த பிச்சை கேட்பதற்கு மானத்துடன் மரணத்திற்க்கு அழைப்பிதழ் தரலாம். இலங்கையை இதற்குமேல் தன்னால் வற்புறுத்த முடியாது என்ற தனது இயலாமையை வெளிப்படையாக தெரிவித்து விட்டபிறகும்
உண்ணாவிரதமும் நடைபயணமும் எதற்க்கு?

இந்திய அரசிடம் இத்தனை மன்றாடியும் எதயும் சாதிக்கமுடியாத நாம் எதிரியிடமிறுந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். இந்திய தூதரகத்தை முற்றுகையிடுவதும் கையெழுத்து வாங்கி அனுப்புவதும் வீன் வேலை. இந்தியா சொல்லி இலங்கை கேட்காது என்பதும் தெரிந்துவிட்டது. யார் சொன்னால் இலங்கை கேட்குமோ அவரிடம் முறையிடுவது தானே அறிவுப் பூர்வமாக எடுக்கும் முடிவு. சீனாவும் பாகிஸ்தானும் தான் இலங்கையில் இன்றைய ஆளுமை செழுத்தும் நாடுகள். அதனால் சந்திக்க வேண்டிய, ஆதரவு கேட்கவேண்டிய, நிர்பந்திக்க கோருகிற கோரிக்கைகளை சீன மற்றும் பாகிஸ்தானிடம் முறையிடுவதுதான் பயனுள்ளதாகும் என்பது எதிரியிடமிருந்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.