Saturday, February 23, 2008

யோகி - இறுதிப்பாகம்

எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கையில் அவர்கள் இதயங்கள் எதயோ பரிமாரிக்கொண்டன.

"இவன் யாரோ, இவன் யாரோ, வந்தது எதர்க்காக" என்று பாடிக்கொண்டிருந்தது அவள் உதடு.

"நீ இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை, வான வில்லே..." என்று இவனும் பாடிக்கொண்டிருந்தான்.

பேருந்து நகர்ந்து கொண்டிருக்கும்போதே யோகி பழய நினைவுக்குள் மூழ்கினான்...

இரண்டு வாரங்களுக்கு முன்னால்,

அகிலாவின் படிப்போ அல்லது அவள் எண்ணமோ தன் காதலால் திசை மாறிவிடக் கூடாதென்று காத்திருந்து அவளின் கடைசி தேர்வு முடிந்த நாளில் யோகி தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று அவள் பள்ளியில் இருந்து வரும் வழி பார்த்து நின்றான்.

தூரத்தில் வருவோரெல்லாம் அவனுக்கு ஆரம்பத்தில் அகிலா போல் தெரிவதும், பின் பக்கத்தில் வந்தபோது அவளில்லாமல் ஏமற்றமே அவனை எதிர் கொண்டது.

ஒரு மணி நேரம் நின்று காத்துக் கொண்டிருந்த பின் அகிலாவும் கடைசியில் வந்து கொண்டிருந்தாள்.. அவள்தான் கடைசியாக வந்து கொண்டிருந்தாள் என்பதால் அந்த நேரம் அவளை சுற்றி யாரும் இல்லை.

கால தேவன் தன் காதலுக்கு உதவிசெய்ததை, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அகிலாவை நோக்கி முன் நகர்ந்தான். தன்னை நோக்கி வருவதை விளங்கிக்கொண்டவளின் முகம் நானத்தால் சிவந்து தனது பாதையில் இருந்து சற்று விலகி நடக்கத்தொடங்கினாள்.

அவள் அருகில் சென்று.." அகிலா.. உன்னை பார்க்கத்தான் இவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கிறேன்..."

அவள் அதை எதையும் கேட்காதது போல் தொடர்ந்து நடந்தாள்...

"அகிலா.. அகிலா... உங்கிட்டதான் நான் பேசிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு போயிட்டு இருக்கே..."


" என்னை உனக்கு புடிக்கலையா? "

"உங்கள எனக்கு எதுக்கு பிடிக்கனும்?"

"ஆமா.. நீ எங்க மாமன் பெத்த பொன்னுதான.. அப்ப அவன் குணம் உங்கிட்ட இல்லாம இருக்குமா"

"என்ன சொல்ல வர்ரீங்க?"

"உன்னை எனக்கு புடிச்சிருக்கு.. என்னை உனக்கு புடிச்சிருக்கா?"

"சரி.. உங்கள எனக்கு பிடிச்சிருந்தா மட்டும் என்ன?"

உள்ளத்தில் பனிமழை பொழிய மீண்டும் அதை ஒருமுறை கேட்க

"என்ன சொன்னே?"

"எனக்கு உங்கள பிடிச்சிருந்தா மட்டும் இப்ப என்ன?. ஆரம்மத்துல உங்கள பத்தி நான் தப்பா நெனச்சிருந்தேன். ஆனா அப்பரம் எங்க பாட்டி உங்கள பத்தி சொன்னதுக்கப்பரம் தான் புரிஞ்சுது எங்கப்பாவுக்கும் உங்கப்பாவுக்குக் இருக்கிற பிரச்சினை. எங்கப்பவை யாரலும் மாத்த முடியாது."

"ஆன அதுமட்டும் இப்ப பிரச்சினை இல்ல.. எனக்குன்னு சில ஆசை, கனவுகள் எல்லாம் இருக்கு...."

"ஆசை இல்லாம இங்க யாருதான் இருக்கா? சொல்லு....."

"எனக்கு இப்ப கல்யணத்த பத்தி பேசர காலம் இப்ப இல்லேனாலும், என்னோட விருப்பத்த சொல்ரதுல தப்பு இல்ல"

"என்னைக்கவது ஒரு நாள் என்னை எங்கப்பா யாருக்காவது ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வெக்கதான் போராரு. ஆனா முன்ன பின்ன தெரியாத யாரோ ஒருத்தர்கிட்ட என்னோட வாழ்க்கைய குடுக்கரதுல எனக்கு விருப்பமில்லை... "

"நான் நினைச்சத்தான் நீயும் சொல்லிட்டு இருக்கே ...."

"அந்த அளவு மனசு ஒன்றிப்போறதனாலதான் இப்ப நான் இங்க நின்னு பேசிட்டு இருக்கேன்னு நெனைக்கிறேன்..."

"நீங்களும் என்னை சுத்தி சுத்தி வர்ரத நான் கவனிச்சிட்டுதான் இருக்கேன். இருந்தாலும் எனக்கு இந்த மாதிரி காதல்ல எல்லாம் விருப்பமில்லை. கல்யாணம் பண்ரதுன்னு முடிவெடுத்துட்டு காதல் பண்ணும்போது யாருக்கும் யாருமில்லாத தெருவில் நின்னு பேசனும்னோ, காதல்கடிதம் பரிமாரிக்கரதோ, பைக்ல சேர்ந்து சுத்தரதெல்லாம் செய்யத்தோணாது. தன்னை நம்பி தன்னோட வாழ்க்கைய தர்ர பொண்ணை எப்படி வாழ்க்க முழுதும் சந்தோசமா வெச்சுக்கரதுன்னு யோசிச்சு அதுக்கான முயற்சிய செய்ய ஆரம்பிக்கரவன் தான் உண்மயான காதலன்"

அகிலாவைப்பத்தி என்னென்னமோ எண்ணிக்கொண்டு வந்தவனிடம், அகிலாவின் வார்த்தைகளால் அவளை ஒரு தேவதையாகவே பார்க்க தொடங்கினான்.

"எங்கப்பா என்ன வசதியான வீட்லதான் கல்யாணம் பண்ணிக்கொடுப்பாரு. ஒரு அப்பாவா யாரும் தன் மகளோட வாழ்க்கய யோசிச்சு இந்த முடிவுதான் எடுப்பாங்க.."

"நீங்களும் நானும் வாழ்க்கைல ஒன்னா சேரணும்னா அதுக்கு நீங்க இப்ப இருக்கர நிலமையில இருந்து மேல வர முயற்ச்சி செய்யனும். எதாவது சாதிக்கனும்........"

"உங்களை நம்பி நாளைக்கு நான் வந்தா, உங்களோட உழைப்பில நாம வாழனுமல்ல?"

யொகிக்கு கொதிக்கும் எண்ணைக் குழிக்குள் போட்டது போன்று இருந்தது..

"காதலை நான் புரிஞ்சு வெச்சிருக்கரத விட நீ ரொம்ப புரிஞ்சு வச்சிருக்கே".

"என்னை வேறொருத்தர் கைல பிடிச்சு கொடுக்கரதுக்கு முன்னாடி நீங்க வந்து பொண்ணு கேட்டா எங்கப்பா குடுக்கர மாதிரி உங்க உழைப்பில முன்னேறி வாங்க. அப்ப எங்கப்பா என்னை உங்களுக்கு தர மாட்டேன்னு சொன்னாருன்னா நான் உங்க பின்னாடி வந்திருவேன். அதுவரைக்கும் இந்த மாதிரி பின் தொடர்ந்து வந்து காதலிக்கறதெல்லாம் வேண்டாம். சரி எனக்கு நேரமாச்சு. நான் போகனும்"

"சரி அப்ப மறுபடியும் நான் உன்ன பாக்க முடியாதா?" என்றான் ஏக்கத்துடன்.

"இன்னும் பத்து நாள்ல நான் காலேஜ்ல சேர அப்ளிகேசன் வாங்க சத்தி போவேன்."
என்று சொல்லிவிட்டு அவள் வீடு நோக்கி தொடர்ந்தாள்.

யோகி அவளிடம் பேச வருவதற்க்கு முன் பல ஒத்திகைகள் செய்து வந்திருந்தான். ஆனால் அவை அனைத்தும் அவளின் வார்த்தைகளால் வீனாய் போனது.

கண்களில் அவள் பிம்பமும் இதயத்தில் அவளின் வர்த்தைகளும் ஒலித்துகொண்டிருக்கும் போதே சத்தியை பேருந்து அடைந்திருந்தது. அவளிடம் பேச காத்திருந்த யோகி, அவள் பேருந்திலிருந்து இறங்கி அவனை கண்டு கொள்ளாமல் கல்லூரி நோக்கி சென்றது அவனுக்கு ஏமாற்றம் தந்தது, இருந்தும் அவளை புரிந்து கொண்டான்.

அவனும் அவன் கல்லூரி நோக்கி பயணம் செய்தான்.

கல்லூரிக்கு சென்று துறைத்தலைவரை சந்திக்க சென்றான். அவன் எழுதத் தவறிய தேர்வுக்குரிய பேராசிரியாய் அவனை அழைத்து விசாரித்தார்.

கொஞ்சமா படிக்கிற பசங்கல்ல கொஞ்சம் அதிகமா படிக்கர பய்யன்னு பேரெடுத்த யோகிய தேர்வில் தோல்வியடைய விரும்ப்பாத அந்த பேராசிரியய் மீண்டும் அவனை தேர்வெழுத அனுமதித்தார் அன்றய தினமே. யோகியும் தான் வந்த நோக்கம் நிரைவேரியதற்க்கு பேரசிரியய்க்கு நன்றி தெரிவித்து விடை பெற்றான்.

மூன்று வருடங்களுகுப் பிறகு படிப்பு முடிந்த நிலையில் வளாக நேர்முகத்தேர்விற்க்காக அமெரிக்காவின் மிகப்பெரும் கணினி நிறுவனமான இன்டெல் அவன் கல்லூரிக்கு வந்திருந்தது.

அவன் அகிலா விதைத்த கனவுகளுடன் தேர்வுகளின் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான். அவனின் எண்ணப்படியே நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று அடுத்த மாதம் அமெரிக்காவில் பணி நியமன ஆணை பெற்றான்.

எண்ணத்தில் கொள்ள முடியாத மகிழ்ச்சியுடன் அகிலாவை பார்க்க அவசரமாக ஊருக்கு கிளம்பினான்.

ஊரில் நுழைந்தவுடன் பேருந்து நிலையம் அருகே மக்கள் கூட்டமாக இருந்தது. யோகியும் என்னவென்று ஆர்வத்துடன் கூட்டத்தை விலக்கி பார்த்தான். அங்கு அவன் கண்ட காட்சி அவன் இதயம் உடைந்து அழச்செய்து விட்டது.

ஆம்.. அகிலா ரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்தாள். அன்று மாலை அவள் பேருந்திலிருந்து இரங்கி பாதையை கடக்கும் போது கட்டுப்பாடிழந்த லாரி யொன்று அவள் மீது மோதியது.
அது அவளின் வாழ்வுடன் யோகியின் வாழ்வையும் எடுத்து சென்றது.

அன்றிலிருந்து தன்னை மறந்து கால் போகும் போக்கில் நடந்து காலத்தை அகிலாவின் நினைவால் கரைத்து நடந்தான் முழு யோகியாக........


(முற்றும்)

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Etharchiya unnoda blog-ku vanthu puliyampatti gramam, yogi, karadi ganesan, thiyagi#1, kmk bus, appuram antha ponnu akila ippadi ellariyum sandichathu oru yedurparatha enba athirchi.

    4-5 varusham kalichu nane padikura mudal tamil story than intha யோகி. ne kadai solluvanu theriyum anna ne ivalavu alaga kadai solluvanu ennakku theriyathu appu. romba pudoomiyana nadai, elemiyana eluthukal.... hats-off

    climax-la nane kuda, enga ne antha ponna verayarruko kati koduthuduvanun nenachan, nalla vela close panita. romba dhanks thiru.

    Yogi ippo enna pannikitu irrukan.. USA offer vangunane.. join pannana? USA avany akila nenivukalil irruthu metucha?? ippadi pala question-ku ennaku yerkanava vedai therijalum, ne athiyum oru kadiya yeluthanumdrathu ennoda korikai.

    Unnoda kadiyal.. paliya nenivugali thothi.. athil enni naniya vaithathukku mika nandri.

    Valthukal nanba..

    ReplyDelete
  3. Story had a Director Selva Raghavan finish.... Fantastic begining to your story writing... I would like to see more ideology/thought provoking concepts behind your stories in the future, along with colocial touch that you are master at... All the best!!!

    ReplyDelete