Saturday, January 24, 2009

தொலைவில் நீ, அருகில் நான்....

இங்குதான்...இங்குதான்..
உன் அருகில் நான் இருக்கிறேன்
காற்றுடனே உன் இதழுரசும் இடைவெளியில்..

எங்கெல்லாமோ தேடினேன் உன்னை..
என் இருப்பை உறுதி செய்து கொள்ள...

இன்றுதான் உன்னிடம் என் காதலை...
காதலை.. காதலை...

இப்படித்தான் ஒவ்வொருமுறையும் உன்
கொலுசு என் காதலை தின்றுவிடுகிறது..

காற்றை தென்றலாக்கும் உன் கூந்தல்
என்னை மட்டும் ஏன் கள்வனாக்குகிறது...

உன்னை பிரிந்த கூந்தல்கள்தான்
உடையாமல் என் நெஞ்சை கட்டி வைக்கிறது...

மழையாய் நனைக்கிறாய் பார்வையில்
இழையாய் துளிர்க்கிறேன் காதலில்..

இல்லை என்று சொல்ல உன் நா தொடங்கும்..
இல்லை.. இல்லை.. என இமைகள் முடிக்கும்..

தேவையில்லை வார்த்தைகள்..
இல்லாமலே போகட்டும் வார்த்தைகள்..

இங்கு வார்தைகள் காதல் சொல்வதில்லை..

எதற்க்கு நானம்... என்னை இன்றா முதலாய் பார்க்கிறாய்..
ஆம்.. இன்றுதான் முதலாய் பார்க்கிறாய்...

ஒவ்வொறுமுறையும் இறந்து பிறக்கிறேனல்லவா...

வழிவிட்டு நின்றாய்...
கடந்து செல்லச் சொல்கிறாய்
என்றே நினைத்தேன்...

காதலை வழி மறிக்க எனக்கு மட்டும்தான்
தோன்றியது.. உனக்கில்லை...

தொடர்கிறேன்...தொட்டுவிட..
தொலைவில் நீ.. நிலவாய்..
உன் அருகில் நான்.. நிழலாய்..

No comments:

Post a Comment