உலகிலுள்ள வளங்களை தனதாக்கி கொண்டு, அதன் மூலம் தான் மட்டும் பயண்பெறும் நோக்கில் அரசியல், ராணுவ உத்திகளை கொண்டு சிறிய ஏழை நாடுகளை தன்னுடைய அடிமையாக்கிக் கொண்டு சுரண்டிப் பிழைக்கும் பெரியண்ணனின் புதிய சின்னத் தம்பி, அண்ணன் வழி செல்வதில் ஆச்சர்யம் இல்லை.
சுரண்டிப் பிழைக்கும் வர்க்கம் ஆட்சி செய்யும் போது, ஏழையும் இயலாதவனும் இறையாண்மைக்கு அடிமையாகி கடைசியில் உயிர்த்தியாகம் செய்து விடுதலையை தேடிக்கொள்வதில் வியப்பேதும் இல்லை.
உயிர் பிழைக்க ஒருவாய் தண்ணீர் கேட்கும் தமிழருக்கு செவிசாய்க நேரமில்லாமல் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வளர்ச்சிதிட்டங்களை தீட்டிக் கொண்டு வெளியிட்டிருக்கும் மேதைகளின் அறிவை மெச்சிக்கொள்ள வார்த்தைகளில்லை.
சிறுவர், குழந்தகள், முதியவர், இளம் ஆண்கள் பெண்கள் என வருங்கால சந்ததியினரை அழித்து விட்டு யாருக்கு இந்த வளர்ச்சி திட்டங்கள். சோனியாவும் நீரோவை போல பிடில் வாசிக்கிறார்.
தமிழர் வளங்களை சுரண்ட இன்னும் என்னென்னமோ திட்டங்கள் வரும் நாட்களில் வரும்.... அதையெல்லாம் கேட்டுக் கொண்டும் அதையே தமிழனிடம் விற்பனைசெய்யவரும் குள்ள நரித்தலைவர்களை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடும் இந்த மானம் கெட்ட தமிழனின் விதியை மாற்றியெழுத இங்கு யாருமே இல்லை என்பதுதான் வேதனை கலந்த உண்மை...
No comments:
Post a Comment