Monday, April 27, 2009

தமிழரின் உயிரும் தலைவர்களின் நாடகங்களும்

இன்று தமிழினத்தின் வரலாற்றின் துன்பமேகம் சூழ்ந்த நாள். ஆம், ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்கள் உலகின் அத்தனை கண்களின் முன் எந்தவித உதவியும் இன்றி மடிந்துகொண்டிருக்கின்ற தமிழினத்தின் குருதிகொண்டு இந்தியப் பெருங்கடல் சிவப்பு நிறமாக மாறிக்கொண்டிருக்கும் நேரம். உயிரிருந்தும் பிணமாய், உணர்ச்சியிருந்தும் மரமாய் கண்ணீருடன் ஒவ்வொரு நொடியயையும் கரைத்துக் கொண்டிருக்கும் புளுவாய் நெளிந்து கொண்டிருக்கின்றோம்.

தமிழனினப் படுகொலையும் அதை தமக்கு சாதகமாக்கும் தலைவர்களின் நாடகங்களும் சார்ந்த இன்றைய நிகழ்வுகள்

நேற்று விடுதலைபுலிகள் விடுத்த போர் நிறுத்தத்தை நிராகரித்துவிட்டு இலங்கை அரசு தமிழரை அழிக்க போர் தொடரும் என்று அறிவித்துள்ளது.

காலை 3.45 : சிங்கள ராணுவம் பாதுகாப்பு வலையத்தின் மீது இறுதிகட்ட தாக்குதலை தொடங்கி விட்டது.

கடல், தரை வழியாக தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு அகோர எரிகணை தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது.

எண்ணற்ற அப்பாவி மக்கள் மீதே குறிவைத்து நடத்தப்படும் இனப்படுகொலையின் உச்சகட்டம்.

புலிகள் தங்களுடை முழு பலத்தையும் கொண்டு நாற்புறமும் ராணுவத்தின் தாக்குதலுகு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

நேற்றைய ராணுவத்தின் கடல்வழி முயற்ச்சியை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 5 மணி: தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி போர் நிறுத்தம் வேண்டி திடீர் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவிப்பு. அண்ணா நினைவிடத்தி.

காலை 6 மணி: அனைத்து மாவட்டங்களிலும் திமுக தொண்டர்கள் அமைச்சர்கள் உண்ணாவிரதம் தொடங்கினர். மதுரையில் அழகிரி உண்ணாவிரதம்.

காலை 8 மணி : தமிழக காங்கிரள் தலைவர் தங்கபாலு முதலமைச்சரின் உண்ணாவிரதத்தை கைவிட கோரிக்கை. சோனிய மன்மோகன் சிங் போர்நிருத்த முயற்சி மேற்க் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார்.

சோனியா மற்றும் மன்மோகன் சிங்கின் உண்ணாவிரத கோரிக்கையயை கருணாநிதி நிராகரித்தார்.

காலை 9 மணி : சேலத்தில் தங்கபாலுவும் உண்ணாவிரதம். கலைஞருக்கு ஆதரவாக. இலங்கை தமிழர் பற்றி எதுவும் குறிப்பிட வில்லை.

நேற்றய தினம்,சிவ் சங்கர் மேனனும், எம் கே நாரயணனும் இலங்கை அதிபர் ராஜபக்ச, ராணுவ தலைவர் கோத்தபய ஆகியோரச்சந்திது ஆலோசனை நடத்தினர்.

அவர்கள் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தியதாக திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு அறிவித்தனர். ஆனால் அவர்கள் போர்நிறுத்தம் பற்றி எதுவும் பேசவில்லை என்று இலங்கை அமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

அவர்கள் போர் நிறுத்தம் பற்றி ஆலோசனை செய்தார்களா? அல்லது இன்று உச்சகட்ட போர் நடத்த ஆலோசனை நடத்தி அதை கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரிவித்து சென்றார்களா? அதன் பேரில்தான் கருணாநிதி இன்று இந்த நாடகத்தை அரங்கேற்றுகைறாறோ என்று தமிழ் உணர்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

காலை 10 மணி: ராஜபக்ச முக்கிய மந்திரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம்.

காலை 11 மணி: இன்று தொடங்கிய மோதலில் இரண்டாயிரத்திற்க்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள் திரண்டு அந்தந்த நாடுகளை போர் நிறுத்தத்திற்க்கு இலங்கையய் வற்புறுத்த வீதியில் இறங்கி , என்று மில்லாத அளவுக்கு மிகப்பெரும் தமிழினப்படுகொலை நடக்கும் இந்த நாளில் போராட வேண்டும் என ப. நடேசன் கோரிக்கை.

காலை 11.30: சேலத்தில் புலம்பெயர் தமிழர் உண்ணாவிரதம்.

மதியம் 12.30: இலங்கை அரசு போர் நிறுத்தத்திற்க்கு இணங்கிவிட்டதாக ப. சிதம்பரத்தின் தகவலை அடுத்து கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட்டார்.

இலங்கை அரசு அதன் இணைய தளத்தில், கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல்களை பயன்படுத்துவதில்லை என்று அறிவித்துள்ளது.

மதியம் 12.45: வன்னியின் மீது இரண்டு விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழ. நெடுமாறன் விபத்தில் உயிர் தப்பினார். இலங்கையில் போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று கூறினார்.

No comments:

Post a Comment