பிறை நிலா பார்த்து அலை கடல்
வாரி இறைக்கும் வசந்தம், அன்பே
நீ என்னைக் கடக்கும் ஒரு நிமிடம்.....
உன் அன்பின் சிறைதள்ள முனையும்
உன் ஓரவிழிப்பார்வை, அதையே
வேண்டி தவமிருக்கும் என் ஊமை நெஞ்சமும்
விட்டுக் கொடுக்கவில்லை இந்தக்கணம் வரை...
ஆதாயம் பாராமல் பொழியும் ஆகாயம்-
அன்பு போழியும் தேவதை உன் நெஞ்சம்,
அள்ளி அள்ளிக்குடித்தாலும் தீராத தாகம் கொண்ட
அன்பு பஞ்சத்தில் வாடுது என் மானுட நெஞ்சம்!.
சொல்லிச் செல்வதுமில்லை
அழுது புலம்பினால் வருவதுமில்லை -
உன் நினைவுகள்!
உனக்கு தெரியும்
எனது கண்ணீர் துளிர்க்கும் தருணங்கள்!
உனக்கு தெரியும்
எனது மனம் சிரிக்கும் தருணங்கள!
கண்ணீர் துடைக்கிறாய்,
இன்பத்தில் தோழ் சாய்கிறாய்
காதல் சொல்ல விளைகிறேன் -
விடைபெற வேண்டும் என்கிறாய்.
தூர இருந்தாலும் என் உயிரின்
ஈர நினைவுகள் உன்னைச்சுற்றியே இருக்கும்
என்பது உனக்கும் தெரியும்- அதனால்தான்
நீ என்னை விட்டு விலகினாலும் என் காதல்
உன்னோடு உயிர்ப்போடு இருக்கிறது...
No comments:
Post a Comment