Tuesday, April 21, 2009

காலம் சொல்லும் கணக்கு

சாவின் எண்ணிக்கையை தங்களின் தேர்தல் வாக்குச்சீட்டுக்களாக மாற்றத்துணிகின்ற மாபெரும் தலைவர்களை தன்னகத்தே கொண்ட இந்த தமிழ் சமுதாயம், விழித்துக்கொண்டு அவர்களை ஒதுக்குமா, அல்லது வழக்கம் போல் ஆயிரத்திற்க்கும் ஐநூறுக்கும் இறையாண்மையையும், போலி சன நாயகத்தையும் வாங்கி அணிந்து கொள்வார்களா என்பது காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்.

புலிகளை அழித்துவிட்டு தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை கொடுப்போம் என்ற ராசபக்சவிற்க்கும், தேர்தல் முடிந்த பிறகு யுத்த நிறுத்தத்திற்க்கு வழிசெய்வோம் என்று தேர்தல் வாக்குறுதிகள் வழங்கும் கருணாநிதி, சோனியாவிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.

இதில் புலிகளை அழித்து விட்டால், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்பது புனைக்கதைகள் தான். புலிகள் எங்கோ வானத்திலுருந்து குதித்து வந்து துப்பாக்கியேந்தியவர்கள் போல பரப்புரை செய்யும் அரசியல் தரகர்களின் வஞ்சகம் என்றுமே வெல்லப்போவதில்லை. இருபது வருடங்களுக்கும் முன் இன அழிப்பின் பாதிப்பில் உறுவானவர்களே இன்றைய புலிகள். இன்று நடக்கும் இன அழிப்பில் பாதிக்கப் பட்டிருப்பது என்றுமே இல்லாத எண்ணிக்கையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். இவர்கள் நளைய புலிகளாகவோ சிறுத்தைகளாகவோ நிச்சயம் பழிதீர்க்க உருவெடுப்பார்கள்.

பிரபாகரன் என்ற தலைவன் இன்று கொல்லப்பட்டால் விடுதலை போராட்டம் முடங்கிவிடும் என்பது அறிவுக் குருடர்களின் கணக்கு. தலைவன் வளர்த்த ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் அனைவரும் பின்நாளில் பிரபாகரனை படிக்கும் அனைவருமே பிரபாகரன் தான். ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் அதன் காரணங்களை ஆராய்ந்து அடுத்த வெற்றிக்கு நாள்குறிப்பது அவர்களின் வாழ்க்கை முறை. வெறும் இலங்கைத்தீவிற்க்குள் நின்றிருந்த போராட்டம் இன்று உலகம் முழுதும் எட்ட தொடங்கி விட்டது. இன துரோகிகள் யார், நண்பர்கள் யார், உண்மையான இன உணர்வாளர்கள் யார் என்பதை இந்த இக்கட்டான தருணத்தில் தமிழன் தெரிந்து கொண்டான். துரோகிகளை புறம்தள்ளி நண்பர்களை கூட்டி விடுதலைப்போராட்டம் வலுப்பெறவேண்டிய காலம் வந்து விட்டது.

எரியும் வீட்டில் எவர் எவர் நெறுப்பு காய்கிறார் என்பதை தொலைவில் இருந்து பார்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் நெறுப்பை வென்றவர்கள். காலம் நிச்சயம் அவர்களின் கணக்கை தீர்த்துக்கொள்ளும். அதுவரை இவர்களின் ஏளனமும் இருமாப்பும் வாழட்டும்.

1 comment: