தர்மநாடு என்ற நாட்டை கபாலி என்று ஒரு
ராஜா ஆண்டு வந்தாராம். அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தனராம். மூத்த
மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும், மூன்றாவது
மனைவிக்கு ஒரு மகளும் இருந்தனர்.
பல்வேறு இடர்களைத் தாண்டி தன்
சாம்ராஜ்யத்தை கட்டிக் காத்து வந்த கபாலி ராஜா. பல்வேறு சந்தர்பங்களில் தன் குடும்பத்தை காத்துக்
கொள்ளச் செய்த கொலைகளும், கொள்ளைகளும் மகத நாட்டு மகராணிக்கு தெரியவந்து, கபாலி ராஜாவை
தனக்கு அடிமையாக்கி தன்னுடைய சாம்ராஜ்யத்தில் கப்பம் கட்டும் அரசனாக மாற்றிக்
கொண்டால். கபாலி ராஜாவிற்கு இதனால் எந்த பாதிப்பு மில்லை, காரணம் அவர்
குடும்பத்திற்கும், அரச பதவிக்கும் எந்த பாதகமும் இல்லாததனால் மக்களைப் பற்றி
அக்கரையில்லாமல் இருந்தார்.
அதே காலத்தில் பக்கத்து நாடான
இலங்கையில் இராவணனின் வாரிசு பிறர்குபகாரி, மகத நாட்டிலிருந்து வந்த படைகளின்
ஆட்சியிலிருந்து இலங்கையை மீட்க போராடி வந்தான்.
கபாலி ராஜாவின் மூத்த மகனான
அழகுராஜாவிற்கு ஆட்சி அதிகாரத்தை கொடுக்கவிடாமல் இளைய மகனான சுடலைராஜாவிற்கு முடி சூட்ட
குடும்பத்திலிருந்து வந்த பல்வேறு அழுத்தம் காரணமாக முடிவெடுக்கிறார். அதுவரை
போக்கிரியாக இருந்த சுடலைராஜ முடி சூட மக்கள் ஆதரவைப் பெற நல்லவனாக நடிக்க
தொடங்குகிறான். அதே வேளையில் அழகுராஜாவை வனவாசத்திற்கு அனுப்பி வைத்து விடுகிறார்
கபாலி ராஜா.
சமகாலத்தில் இலங்கையில் மகதப் படைகளின்
அட்டூழியங்கள் அத்து மீரவே, இராவணின் வாரிசான பிறர்க்குபகாரி கபாலி ராஜாவிடம் உதவி கேட்கிறான்.
கபாலி ராஜா ஏற்கனவே மகதநாட்டு ராணியிடம் அடிமையாக இருப்பதால், பேசாமல் நீயும்
என்னைப்போலவே மகத ராணிக்கு அடிமையாய் இருந்து விடு. உனக்கும் என்னைப் போல் நல்ல
வாழ்வு கிடைக்கும் என்று ஆசை வார்த்தை (மகத நாட்டு ராணியின் உத்தரவின் பேரில்)
காட்டுகிறார்.
ஆனால் மானத்தை இழந்து அடிமையாக உயிர்
வாழ்வதைவிட மானத்தோடு உயிர் துறப்பது மேல் என்று கூறி கபாலி ராஜாவின் ஆலோசனையை
புறந்தள்ளிவிட்டான் பிறர்க்குபகாரி.
மகதாட்டுப் படைகளின் சூழ்ச்சியினால்
பிறர்க்குபகாரி போரில் பின் வாங்கி,
பின் சூழல் கனிந்து வரும்போது படைதிரட்டி
பகைவரை விரட்டலாம் என்று தலை மறைவாகிறார். மகதநாட்டு படைகள் பிறர்க்குபகாரியின்
நிலங்களையும் மக்களையும் ஆக்கிரமித்து அவர்களை அடிமைப் படுத்துகிறார்கள்.
இந்த துயரச் செய்தி தர்மநாட்டு மக்களை
சோகத்தில் ஆழ்த்தியது. கூடுதலாக பிறர்க்குபாரி உதவி கேட்டு கோரிக்கை அனுப்பியதை
கொச்சைப் படுத்திய கபாலி ராஜாவின் கயமைத்தனத்தைக் கேள்விப்பட்டு கொந்தளிப்பில்
இருந்தனர். இதைத் தெரிந்துகொண்ட கபாலி ராஜா, எங்கே தனது ராஜ்யம் பட்டத்து இளவரசனாக
அறிவிக்கப்பட்ட சுடலைராஜாவிற்கு கிடைக்காமல் மக்கள் பறித்து வேறொருவரிடம் கொடுத்து
விடுவார்களோ என்ற பயத்தில் அமைச்சரவையில் உளவுத்துறை மூலம் ஆலோசனை செய்கிறார். ஆலோசனைக் கூட்டத்தில் ராமாயணக் கதையை கருவாக எடுத்து, ஆரியர்கள் எப்படி ராமனை கதாநாயகக் காட்ட ராவணனை தீயவனாகக் காட்டினார்களோ அதே போல் கபாலியை கதாநாகனாகக் காட்ட பிறர்க்குபகாரியை தீயவனாக மக்களிடம் காட்ட முடிவெடுக்கப் பட்டது. அந்த
ஆலோசனையின் பேரில், அவையின் ஆஸ்தான புலவர்கள் மற்றும் லகுட பாண்டிகளைக் கொண்டு வரலாற்றை
மாற்றி எழுத உத்தரவிடுகிறான்.
அதன்படி மண்டபப் புலவர்களும், லகுட
பாண்டிகளும் ஊருக்குள் சென்று, பிறர்க்குபகாரிதான் இலங்கை நாட்டு மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்
சென்றவன். கபாலி ராஜாவின் ஆலோசனையைக் கேட்காமல் மகத நாட்டு படைகளுடன் போரிட்டு
மக்களை பலி கொடுத்து விட்டார் என்று நாடகங்கள், பாடல்கள் மற்றும் ஏடுகளில் எழுதி ஊர் ஊராய்
பரப்பிக் கொண்டிருந்தனர். சில லகுட பாண்டிகள் இன்னும் கொஞ்சம் மேலே போய், பிறர்க்குபாகாரிதான்
படுகொலைகளைச் செய்த பாதகன் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.
இதையெல்லாம் பார்த்த மக்களோ, கபாலியின்
சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு புலவர்களையும், லகுட பாண்டிகளையும் ஊரை விட்டு துறத்து, நாட்டின்
ராஜ்ஜியத்தை கபாலிராஜாவிடமிருந்து மீட்டு தற்காலிகமாக ஒரு அரசரை தேர்ந்தெடுத்து
அமர்த்திக்கொண்டனர்.
ஏமாற்றமடைந்த கபாலி ராஜாவும், காதுக்கெட்டியது
கைக்கு எட்ட வில்லையே என்று துயறுற்ற சுடலையும் வேறு வழீன்றி நாட்டை விட்டு
ஒதுங்கியிருந்தனர்.
கொஞ்சகாலம் கழித்து மீண்டும் ராஜ்ஜியத்தைக்
கைப்பற்ற மீண்டும் ஆலோசனை செய்கிறார் கபாலி. மீண்டும் அந்த இலங்கை பிறர்க்குபகாரியை கொலைகாரணாக மக்களிடம்
பரப்புரை செய்ய புலவர்களையும், லகுட பாண்டிகளையும் ஏற்பாடு செய்கிறார். அதே சமயத்தில்,
சுடலை ஊர் ஊராகச் மாறு வேடத்தில்
சென்று மக்களின் மன நிலையைத் தெரிந்து கொள்கிறேன் என்று கிழம்பி ஊரில் மக்கள் இன்னும்
கபாலி மீது கடுப்பில் இருப்பதைத் தெரிந்து கொள்கிறார். எப்படியாவது மக்களை ஏமாற்றி,
அவர்கள் மனதை மாற்றி ராஜ்ஜியத்தை கைப்பற்ற வீதியெங்கும் வித்தைகள் செய்கிறார். ஆனால் கடைசி வரை கபாலியின் கன்வு பலிக்கவே இல்லை... சுடலை தன் ராஜ்ஜிய
கனவு தகர்ந்து
வாழ்கையை வெறுத்து அலைந்து கொண்டிருந்தான். கபாலியின் பாவச் செயலுக்கு
அவன் வாழ்ந்து, அவன் சந்ததி வீழ்வதைப் பார்க்கும்படியான தண்டனை அடைந்தான்.
No comments:
Post a Comment