Saturday, June 27, 2015

ஹெல்மெட் போடுவதற்க்கு ஏன் இவ்வளவு எதிர்வினை?

சாலையில் பயணிப்பது என்றுமே 100% பாதுகாப்புடன் இருக்காது. நீங்கள் வண்டியை பாதுகாப்பாக ஓட்டினாலும் சாலையில் பயன்படுத்தும் மற்றவர்களை அப்படியே இருப்பார்களென்று சொல்லி விட முடியாது. ஆபத்து உங்கள் வாகனத்தின் டையரிலிருந்து எதிரே வரும் வாகனத்தின் ஒளிவிளக்கு வரை எங்கும் பரவிக்கிடக்கிறது. ஹெல்மெட் அணிவது ஓரளவேனும் உங்களை ஒரு ஆபத்திலிருந்து காப்பற்றலாம்.

பெரும்பாலும் தலையில் அடிபடுவதால் நிகழும் பாதிப்பு அடிபட்டவரைவிட அவரது குடும்பத்தோரை அதிகம் பாதிக்கும். எப்படி? ஒரு கணவன், மனைவி இரண்டு பள்ளி செல்லும் குழந்தைகள். மனைவி வீட்டை கவனித்துக்கொண்டு இருக்கிறார், கணவர் வேலைக்கு சென்று வரும்போது எங்கிருந்தோ ஒரு நாய் குறுக்கே வந்ததில் தடுமாறி கீழே விழுகிறார். அவர் ஹெல்மெட் அணியாத நம்மைபோன்ற பொது சனத்தில் ஒருவர். கீழே விழுந்ததில் தலையில் லேசான அடி. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவி செய்ய எழுந்து வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்து விட்டார். 

இரண்டு மணி நேரம் கழித்தும் வாந்தியெடுத்து தலை சுற்றி விழுகிறார். பயந்து போன மனைவி தட்டி எழுப்பி பார்த்து ஒன்றும் நடக்காத நிலையில் அக்கம்பத்துக்காரர்கள் உதவியுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். மனைவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழந்தைகளை பள்ளியிலிருந்து கூப்பிட்டு வரவேண்டும், கணவரின் நிலை என்ன என்றே தெரியாத குழப்பம். மருத்துவர் பரிசோதித்து விட்டு ஸ்கேன் செய்ய பரிந்துறைக்கிறார். மருத்துவமனையில் ஸ்கேனிங் மற்றும் இதர சிகிச்சைக்கு இரண்டாயிரம் கட்சச்சொல்கிறார்கள். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் பணம் கட்டி ஸ்கேன் செய்கிறார்கள். 

ஸ்கேன் செய்து பார்த்ததில் தலையில் அடிபட்டு மூளைக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் ரத்த நாளத்தில் ரத்தம் கட்டி சிறிய அடைப்பொன்று ஏற்ப்பட்டிருக்கிறது. அதன் விழைவால் அவருக்கு பக்கவாதம் ஏற்ப்பட்டு பேச்சும் கைகால் செயல் இழந்து இருக்கிறது. உடனடியாக கட்டியை கரைக்க ஊசி ஒன்று பொட வேண்டும். அதற்க்கு இரண்டு லட்ச ரூபாய் செலவாகும் என்று சொல்கிறார்கள். 

மனைவிக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்போது அவருக்கும் மாரடைப்பு வந்துவிடும் போல இருந்தது. வெளியுலகை அதிகம் பார்க்காத அவரால் தனியாக இந்த மன அழுத்தத்தையும் பணத்தை புரட்டவேண்டுமென்ற அழுத்தமும் நிலைகுழையச்செய்து விட்டது. அந்த ஊசி போட்ட பின்பும் உடனே குணமாகிவிடும் என்று சொல்லமுடியாது. சரியாகத பட்சத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்க்கு மூன்று லல்சத்திற்க்கு மேல் செலவாகும். மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்ப ஒன்றிலிருந்து இரண்டு மாதம் வரை எடுத்துக்கொள்ளும். அதுவரை அவர் மனைவி குழந்தைகளுடன் மருத்துவமனியிலேயே இருக்கவேண்டும். சிகிச்சையெல்லாம் முடிந்து குணமடந்தாலும் அவரால் உடனே எழுந்து நடக்க, பேச முடியாது. அவருக்கு சாப்படு ஊட்டுவதிலிருந்து, கக்கா போனால் சுத்தம் செய்துவிடுவதுவரை அடுத்த ஆறு மாதம் அவரது மனைவி கஸ்டப்படவேண்டும். தலையில் அடிபட்டதனால் அவருக்கு பழைய நினைவுகள் மறுந்துவிட்டது. பல நெருங்கிய சொந்தங்களை அடையாளம் தெரியவில்லை. அவர் கடன் வாங்கியிருந்தார் என்று வீட்டில் வந்து பலபேர் நச்ச ஆரம்பித்து விட்டனர். எவ்வளவு வாங்கினார் எவ்வளவு கொடுத்தார் என்பதற்க்கு எந்த அத்தாட்சியும் கிடையாது, அவருக்கும் நினைவில்லை.

இந்த பிரச்சினையையெல்லாம் தாண்டி அவர் பழைய நிலைக்கு வர எப்படியும் இரண்டு வருடமாகி விடும். அதுவரை அவர் குடும்பம் பட்ட துன்பம் யாருக்கும் தெரியாது. சில நேரங்களில் அடிபட்டவர் கோமாவில் ஆறு மாதம் ஒருவருடம் என்று படுத்த படுக்கையிலேயே இருப்பர். எழுந்து வருவாரா வரமாட்டாரா என்று மனைவியும் குழந்தைகளும் ஏங்கி ஏங்கி தங்கள் வாழ்க்கையை நினைத்து வருந்திக்கொண்டே இருப்பர். நிற்க்க....மேற்ச்சொன்ன எதுவும் கற்ப்பனையல்ல.

இப்போது, ஒரு ஆயிரம் ரூபாய் ஹெல்மெட் போட்டுக்கொண்டு உங்கள் குடும்பத்தை காப்பாற்ற உங்களுக்கு என்ன தடை இருந்து விட முடியும்?

உங்கள் ஹெல்மெட் உடைந்திருந்தாலோ அடிபட்டிருந்தாலோ, தயவு செய்து புதிய தரமான ஒன்றை வங்கிக்கொள்ளுங்கள்.

4 comments:

  1. ஹெல்மெட் நிச்சயம் பாதுகாப்பு தரும் என்பதில் ஐயமில்லை ஆனாலும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு ஓட்டகொஞ்சம் பயிற்சி தேவை. பின்னால் இருப்பவர்களும் போட வேண்டும் என்பது என்னவோ கொஞ்சம் மிகையாகத் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. முதலில் ஹெல்மெட் இரு சக்கரவாகன பயணத்தில் கட்டாயம் என்பதை உணரவேண்டும். நமது ஊர்களில் ஆரம்பம் முயல் இதில் சலுகை அனுபவித்துக்கொண்டு இப்போது கட்டாயப்படுத்துவதால் நாம் ஆட்சேபனை தெரிவிக்கிறோம். உலகின் மற்ற நாடுகளைப்போலவே நாமும் ஹெல்மெட் அணிய கற்றுக்கொள்ளவேண்டும், அதில் வரும் சிறு சிறமங்களைத்தாண்டி.

      Delete
  2. பெரும்பாலும் அனைவருக்கும் ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு இருப்பினும் அதனால் சில சிரமங்கள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.பள்ளிச் சிறுவர்கள்,குடிகாரர்கள், உரிமம் இல்லாமல் ஒட்டுபவர்கள்,போன்றோர் சிறிதும் கவலையின்றி வாகனம் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதைவிடுத்து, ஹெல்மெட் அணியாவிட்டால் உரிமம் பறிமுதல், உரிமம் ரத்து என தடாலடியாக அறிவிப்பதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஏன் இப்படி ஒரு கட்டாயம் வருகிறது என்பதற்க்கான பின்னனியை தெரிந்து கொண்டீர்களானால் உங்களுக்கு இது எரிச்சலை ஏற்ப்படுத்தாது. மேற்ச்சொன்ன சூழ்நிலையில் நீங்கள் இருந்திருந்திருந்தீர்களென்றால், அதை புரிந்து கொள்வது எளிது.

      Delete