எல்லோரைப்போலவே நானும் நெகிழ்ந்து போனேன், சிதம்பரத்தின் நிதி நிலை அறிக்கையை பார்த்து. பிறகு எங்கோ படித்த சில கட்டுரைகள் சில உண்மைகளை சொன்னது.
விவசாயிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்தது ஒரு சாதனையாக பார்க்கப்பட்டால், விவசாயிகளின் இந்த நிலமைக்கு என்ன காரணம் என்று ஒரு சின்ன ஆராய்ச்சி செய்தால் அது பொய்யென்று தெரிகிறது.
பெரும்பாலான தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் ஆந்திரப் பிரதேச வாரங்கள் மாவட்டத்தை சேர்ந்த பருத்தி பயிரிட்டவர்கள். இந்திய அரசியல்வாதிகளின் நலம் நோக்கி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி மொன்சான்டோ என்ற வெளிநாட்டு விதை நிறுவனம் வழங்கிய மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் வந்த வினைதான் அது. அப்படியென்ன அந்த விதையில் உள்ளது என்கிறீர்களா?. இங்குதான் நமது மடமை நோக்கப்பட வேண்டியது. "சாதாரண விதையில் வளரும் பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க பூச்சிமருந்து செலவு செய்யவேண்டும், ஆனால் நாங்கள் கொடுக்கும் விதைக்கு பூச்சி மருந்து தேவையில்லை, விதையே எதிர்ப்பு சக்திகொண்டது, விலைமட்டும் கொஞ்சம் அதிகம்" என்று சொல்லி விவசாயிகளிடம் விற்றுவிட்டார்கள் சோதனை செய்யப்படாத ஊன விதைகளை. இந்த விலை அதிகமான பருத்தி பயிரிடுவதற்க்கு வங்கிகளின் மூலம்(ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி) விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்கியது இந்திய அரசு. அந்த பணமெல்லாம் அப்படியே மொன்சான்டோ கல்லாவிற்க்கு போனது.
இதுபோலவே பல மண்ணை மலடாக மாற்றும் வெளிநாட்டு உர நிறுவனங்களும் பணத்தை சுருட்டின மற்ற விவசாயிகளிடம் இருந்து.
பயிரிட்டு சில நாட்களுக்கு பிறகுதான் அந்த பயிரின் மகத்துவம் தெரிந்தது. அந்த பயிர் இந்திய மண்ணில் விழைச்சலை தராதென்று. சில நாட்களில் அனைத்து பயிர்களும் மடிந்து விட்டது. விவசாயிகளிடம் கடன் மட்டும் மிச்சமிருந்தது. பிறகு வெளிநாட்டு முதலாலிகள் முதலீடு செய்திருந்த வங்கிகள் கடனை வசூலிக்க சாட்டையய் சுற்றியதில் தப்பிப்பதற்க்கு தற்க்கொலை செய்து கொண்டான் இந்திய விவசாயி.
இப்படியே பயிரையும் மண்ணையும் கொன்று இனி எதிர்காலத்தில் அவர்களிடமே கையேந்தி நிற்க வேண்டும் என்ற தொலை நோக்கு திட்டத்தில் நம்மை விழவைத்து விட்டார்கள்.
எல்லாம் முடிந்த பிறகு இப்போது மக்களின் வரிப்பணத்தை எடுத்து வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி ஈட்டுத்தொகை கொடுக்கப்போகிறார்கள்.
இதற்க்கு பதிலாக இந்த அரசியல் வாதிகள் நேரடியாகவே வெளிநாட்டு நிறுவனத்திற்க்கு பணத்தை கொடுத்துவிட்டு அவன் வீசும் எழும்புத்துண்டை பொறுக்கிக்கொண்டு இருந்திருக்கலாம், பல இந்திய விவசாயிகளின் உயிர்களாவது மிஞ்சியிருக்கும்.
திட்டங்கள் வகுக்கும் மன்மோகன், சிதம்பரம், சுப்பிரமணிய சுவாமி எல்லாம் எங்கிருந்து கற்றுவந்தார்கள் இந்த பாடங்களை?
ஆதாரம்,
http://www.organicconsumers.org/monlink.cfm
http://www.scidev.net/content/opinions/eng/sowing-trouble-indias-second-green-revolution.cfm
http://www.globalresearch.ca/index.php?context=viewArticle&code=SHR20060911&articleId=3204
http://www.democracynow.org/2006/12/13/vandana_shiva_on_farmer_suicides_the
http://artsci.wustl.edu/~anthro/research/biotech_suicide.html
http://www.monsanto.com/