பல நண்பர்கள் தாங்கள் தமிழில் கருத்துக்களை பகிர விரும்புவதாகவும் ஆனால் எப்படி அதை செய்வது என்பது தெரியவில்லை என்று தெரிவிக்கின்றனர். அவர்களின் அந்த சிக்கலை தீர்க்கவே இந்த பதிவு.
நீங்கள் விண்டோஸ் நிறுவியுள்ள கணினி பயன்படுத்தினால் கீழ்க்கண்ட முறைகளில் ஒன்றின் மூலம் நீங்கள் தமிழில் தட்டச்சு எளிதாக செய்யலாம். முக்கியமாக உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டியதில்லை. என்பது சிறப்பு. ஆம்..வியப்பாக உள்ளதா...மேலே படியுங்கள்.
எளிதாக ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம்
ஆங்கில எழுத்துக்களைக்கொண்டு தட்டச்சு செய்யும்போது இந்த செயலிகள் தமிழில் திருத்திக்கொள்ளும் (!). உதாரணத்திற்கு வணக்கம் என்று தட்டச்சு செய்ய, vaNakkam (பெரிய ண வுக்கு Capital N, "ள்" ற்க்கு L, "ழ" விற்க்கு za) என்று தட்டச்சு செய்து இடைவெளி கொடுக்கும்போது செயலி தமிழில் திருத்திக்கொள்ளும்.
1. தமிழ் பத்திரிக்கை தளங்களை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம் - விகடன்.காம் ( http://www.vikatan.com/news/article.php?module=news&aid=40602) தளத்திற்க்கு சென்று ஏதாவது ஒரு செய்தியையோ கட்டுரையையோ சொடுக்கி அந்த பக்கத்தின் கீழ் கருத்து பதியும் பகுதிக்கு செல்லவும். அங்கு உள்ள எழுது பெட்டியில் (Comment box) தட்டச்சு செய்து அதை படியெடுத்து(Copy) முகநூல் அல்லது நீங்கள் பதிய விரும்பும் தளத்தில் ஒட்டவும் (Paste).
2. அஞ்சல் பாங்கு உலவி தமிழ் தட்டச்சு பலகையை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்ய http://tamilkeyboard.com/#tam,Keyboard_ekwunitamil தளத்திற்க்கு சென்று எழுது பெட்டியில் மேற்க்குறிப்பிட்ட முறையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய, செயலி தமிழில் திருத்திக்கொள்ளும்.
3. அஞ்சல் பாங்கு தட்டச்சு பலகையை உங்கள் கணினியில் நிறவி இணைய இணைப்பு இல்லாமலே கணினியில் பதிந்து கொள்ளலாம். இந்த சுட்டியை www.keyman.com/tamil சொடுக்கி அஞ்சல் பாங்கு தட்டச்சு பலகையை தரவி்றக்கம் செயது கணினியில் நிறுகிக்கொள்ளவும்.
அ. தரவிறக்கம் செய்த கோப்பின் மீது வலச்சொடுக்கி "Run as Administrator" சொடுக்கவும்.
ஆ. பின்னர் வரும் திரையில் "I agree to license terms" ஐ தெரிவு செய்து "Install Keyman Desktop" என்ற விசையை அழுத்தவும்.
இ. கணினி மீளுயிர்ப்பெற்று வந்த பிறகு தொடக்க விசையை அழுத்தி பார்தீர்களானால் தெரியும்.
ஈ. அதை அழுத்தும்போது, கீ மேன் செயலி செயல்பட்டு கீழ்பட்டையில் வலதுபுரம் விசைப்பலகை தெரிவு செய்ய வாய்பளிக்கும்
உ. அந்த வாய்புகளில் அஞ்சல் பாங்கை தெரிவு செய்துவிட்டு நீங்கள் முகநூலிலோ அல்லது வேறொரு தளத்திலோ மேற்ச்சொன்ன முறையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும்போது அது தமிழில் தட்டச்சாகும்.
ஊ. மீண்டும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய கீழ்ப்பட்டையில் தெரியும் கீமேன் விசைப்பலகையை சொடுக்கி "US" ஐ தெரிவு செய்து ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கொள்ளலாம்.
ஆண்டிராயிட் மற்றும் ஆப்பிள் செல்லிடப்பேசியிலும் தமிழில் எளிதாக தட்டச்சு செய்யலாம். அடுத்த பதிவில் அதை முழுவதும் விவரிக்கிறேன். உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கருத்துக்களாக பதியுங்கள், முடிந்த அளவு பதிலளிக்கிறேன்.