பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு நிலம் கையப்படுத்தல் சட்டம் 2013 ல் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. பின் 2014ல் சில திருத்தங்களை கொண்டுவந்தது. ஆனால் அந்த திருத்தங்கள் நிறைவேற்றாமல் காங்கிரஸ் அரசு வெளியேறியது. பின்னர் பதவியேற்ற மோடியின் சர்க்கார் மேலும் சில திருத்தங்களுடன் இந்த சட்டத்தை மார்ச் மாதம் 2015ல் நிறைவேற்றியது. இந்த சட்டம் ஏன் பலதரப்பட்ட மக்களால் எதிர்க்கப்படுகிறது என்பதற்க்கு அந்த சட்ட திருத்தத்தின் சில முக்கியமானவற்றை தெரிந்துகொள்தல் அவசியம்.
2013 ஆண்டு இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சட்டத்தின்படி தனியார்- பொதுத்துறை நிறுவனக்கள் கூட்டு திட்டத்திற்க்கு நில உரிமையாளர்களில் 70%சத விகிதத்தினர் சம்மதம் தேவை. தனியார் திட்டங்களுக்கு 80%வித நில உரிமையாளர்கள் சம்மதம் தேவை. ஆனால் மோடி அரசு கீழ்கண்ட ஐந்து பிரிவுகளுக்கும் மேல் சொன்ன நில உரிமையாளர் சம்மதம் தேவை என்ற விதியிலிருந்து விலக்களித்துள்ளது.
1. பாதுகாப்பு (defense)
2. கிராமப்புர கட்டமைப்பு
3. குறைந்த விலை வீடு கட்டும் திட்டம்
4. தொழிற்ச்சாலைகள்
5. கட்டமைப்பு திட்டங்கள் ( தனியார் பொதுத்துறை கூட்டு முன்னெடுப்புகள்)
மேற்க்குறிப்பிட்ட பிரிவுகள் மேலோட்டமாக பார்க்கும்போது மிக நல்ல பயன்பாடாக தெரியலாம். ஆனால் பிரிவு 3, 4 மற்றும் 5, நிலத்தை நம்பி விவசாயம் செய்து பிழைக்கும் ஒரு குடும்ப்பத்தை எந்த சட்டச்சிக்களுமில்லாமல் நடு தெருவுக்கு கொண்டுவந்து விடும். இது விவசாயிக்கு மட்டுமல்ல, யாருடைய நிலத்தையும் மேற்ச்சொன்ன ஒருபிரிவின் கீழ் பெரும் முதலாளிகள் எளிதாக கையகப்படுத்திவிடலாம். உதாரணமாக ஒரு நான்கு பேரைக்கொண்ட குடும்பம் விவசாயமோ அல்லது ஏதாவது ஒரு தொழிலை நிலத்தை நம்பி பிழைத்துக்கொண்டிருக்கும்போது, புதிய தொழிற்ச்சாலை, சாலை வசதி அல்லது நெடுஞ்சாலைத்துறை கிடங்கு என ஏதாவது ஒரு பிரிவில் அவரின் சம்மதம் இல்லாமலே கையப்படுத்திக்கொள்ளலாம். அதற்க்கீடக சந்தை விலையில் இருந்து மூன்று மடங்கு முதல் நான்கு மடங்கு பணம் தருவர். ஆனால் அந்த பணத்தைக்கொண்டு அவரால் வேறொரு நிலமோ அல்லது தொழிலோ நிச்சயம் செய்யமுடியாது. காரணம் சந்தை விலை என்பது அரசு நிர்ணயிக்கும் விலை. எந்த நில பரிவர்த்தனைகளும் இந்த மதிப்பீட்டில் நடைபெறுவதில்லை. எனவே வேறொரு நிலத்தை அவரால் நிச்சயம் அந்த தொகையைக்கொண்டு வாங்க முடியாது. பிழைப்புக்காக அவர் நகரத்தை நோக்கி கூழித்தொழிலாளியாகச்செல்ல இந்த திட்டம் வழிவகுக்கும். ஒரு தற்ச்சார்பு கொண்ட விவசாயி தொழிலாளியாக நகரத்தை நோக்கி தள்ளப்படுவார்.
முன்னைய 2013 சட்டத்தில் ஒரு நிலம் கையகப்படுத்தப்படும்போது அது அந்த சமூகத்தில் ஏற்ப்படும் பாதிப்புகளை ஆரய்ந்து அறிக்கையளித்தபின் முடிவுசெய்யப்படும் என்ற விதியிலிருந்து மேற்க்கண்ட ஐந்து பிரிவுகளில் தொடங்கப்படும் திட்டங்களுக்கு விலக்கு அளித்துள்ளது 2015 சட்ட திருத்தம்.
மேலும் 2013 ஆண்டு சட்டத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் சில கட்டுப்படுகளை கொண்டிருந்தது. ஆனால் மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தம் அந்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. உதாரணம்: விவசாய நிலத்தின் அதிக பட்ச கையப்படுத்தும் அளவு மாநில அரசின் விதிப்படி நிர்ணயிக்கப்படும். ஆனால் 2015 ஆண்டு திருத்தம் இந்த விதையை தளர்த்தியுள்ளது.
2013 ஆண்டு சட்சத்தின்படிநிலம் கையகப்படுத்தபட்ட பின் குறிப்பிட்ட காலத்திற்க்குள் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தால், நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மோடி அரசின் சட்டத்திருத்தம் இந்த விதியை நீக்கிவிட்டது. அதாவது ஒரு திட்டம் தொடங்குவோம் என்று தனியார் முதலாளிகள் நிலத்தை உரிமையாளரிடமிருந்து கையகப்படுத்திவிட்டு ஒரு ஐந்து ஆண்டு கழித்து நல்ல விலைக்கு வேறொருவருக்கு விற்றுவிட்டு போக வழியேற்ப்படுத்திக்கொடுத்துள்ளது.
2013ம் ஆண்டு சட்டத்தின்படி தனியார் மருத்துவமனைகளுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் நிலம் கையப்படுத்துதலில் எந்த விதிவிலக்கும் சலுகையும் வழங்கவில்லை. ஆனால் 2015 ஆம் ஆண்டு திருத்தம் இந்த இரு தனியார் தொழில்களையும் சட்டதிருத்தத்தின் மூலம் அனைத்து விதிவிலக்குகளும் சலுகைகளும் வழங்கியுள்ளது.
2013 ஆம் ஆண்டு சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தலின்போது தவறிழைக்கப்பட்டால் அந்த துறையின் தலைமை அரசு அதிகாரி பொறுப்பாக்கப்படுவார். 2015 ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தின்படி அரசு அனுமதித்தால்தான் அதிகாரியை பொறுப்பாக்க முடியும். இதன் மூலம் அதிகாரிகளை வைத்து தனியார் முதலாளிகளுக்கு சாதகம் செய்துவிட்டு பின் பிடிபட்டால் அவரையும் தப்பிக்க வைக்க அரசால் முடியும்.
இந்த திருத்தங்கள் நிச்சயம் பொதுமக்கள் நலன் கொண்டு உருவாக்கப்பட்டவையல்ல என்பது புரிந்திருக்கும். இது போன்ற ஒரு சட்டத்திருத்தத்திற்க்கு முந்திக்கொண்டு ஆதரவளித்த அதிமுக அரசும் மக்களுக்கு பெருந்துரோகம் இழைத்துவிட்டது. பாதிக்கப்படும் மக்கள் ஒன்றினைந்து போராடாவிட்டால் இந்த சட்டம் விவசாயிகளையும், ஏழைக்குடும்பங்களையும், சிறுதொழில் புரிவோரையும் நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிடும்.
மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்ட நிலம் கையப்படுத்தும் சட்டம் என்பதைவிட நில அபகரிப்பு திட்டமென்றே சொல்லவேண்டும். இத்திட்டத்தால் பெரும் முதலாளிகள் பயன்பெருவதுதான் நிதர்சனம்.
No comments:
Post a Comment