புதிய அனுபவங்கள் நம் வாழ்வில் சுவைகூட்டுகின்றன. அந்த அனுபவங்களை கொடுக்கும் புத்தகங்கள் என்றுமே நம்மை உயிர்ப்புடன் வைக்கிறது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு புத்தகங்களுடன் அதிக நேரம் செலவிட முடிந்தது. அந்த வகையில் 2016ல் வாழ்வை சுவையாக்கிய புத்தகங்கள் இதோ....
- என்று முடியும் இந்த மொழிப்போர்? - அ. ராமசாமி
- எங் கதே - இமையம்
- யாமம் - எஸ் ராமகிருஸ்ணன்
- எனது இந்தியா - எஸ் ராமகிருஸ்ணன்
- கோயமுத்தூர் ஒரு வரலாறு - சி ஆர் இளங்கோவன்
- காமராஜர் வாழ்வும் அரசியலும் - மு கோபி சரபோஜி
- வனவாசம் - கண்ணதாசன்
- பச்சைத் தமிழகம் - சுப. உதயகுமார்
- The Alchemist - Paulo Coelho
- போரும் சமாதானமும் - ஆண்டன் பாலசிங்கம்
- திராவிடத்தால் வீழ்ந்தோம் - வெங்காளூர் குணா
- களிநயம் - மகுடேசுவரன்
- திராவிட இயக்கம் - புனைவும் உண்மையும்
பயணங்கள் என்ற வகையில் வட இந்திய சுற்றுப்பயணமும், புதிய மனிதர்கள் என்ற வகையில் அந்தப்பயணத்த்தில் சந்தித்த அமெரிக்கர்களும், செக் குடியரசு நாடடவரும்.
அனுபவம் என்ற வகையில் தந்தையின் இழப்பிற்குப் பின்னான உறவுகளுடனான சந்திப்பு நெகிழ்ச்சியைத் தந்தது . அதைத் தனியே எழுத வேண்டும்.
கல்லூரி நண்பர்களை மீண்டும் சந்தித்து மகிழ்ந்தது இந்த ஆண்டின் மகிழ்ச்சியான தருணம்.
நிறைய வலைப்பூக்கள், ஒரு மின்னூல், விகடனில் சில கட்டுரைகள், தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை என்பது இந்த ஆண்டின் ஆக்கமான எழுத்துப் பங்களிப்பு.
No comments:
Post a Comment