இன்று வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் மாதாந்திர தமிழ் இலக்கிய தொலையுரையாடலில் திரு Aazhi Senthilnathan சிறப்பு அழைப்பளராகக் கலந்து கொண்டு தமிழ் மொழியுரிமை முக்கியத்துவம் குறித்தும், அயலில் வாழும் தமிழர்கள் இணைந்து எப்படி தமிழகத்தில் தமிழ்க் கல்வி மற்றும் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அல்லது சமவுரிமை பெற்றுக்கொள்ளலாம் என்ற ஆலோசனையும் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டது. அதில் முக்கியமாக தமிழகத்தில் நாம் பயன்படுத்தும் சேவைகளை (அரசு மற்றும் தனியார்) சேவைகளைத் தமிழில் தரக்கோரி அழுத்தம் கொடுப்பது.
ஏற்கனவே PLE மற்றும் CLEARல் இணைந்து இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், சில நாட்களுக்கு முன் இந்தியப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட அனுபவத்தை நினைவுகூறுவது பொருத்தமாக இருக்கும்.
சென்னையிலிருந்து கோவை சென்ற விமானத்தில் அறிவிப்புகள் மற்றும் சேவைகள் போஜ்புரி, இந்தி,மராத்தி மற்றும் உருதுவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அருகில் ஒரு தமிழ்க் குடும்பம், சிறு குழந்தையுடன் பயணித்தைக் கவனித்தேன். பெரும்பாலான பணிகள் தமிழர்கள்தான். ஆனால் விமான நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லையென்றாலும் 1 மணி நேரத்தில் என்னவாகிவிடும் என்று அமைதியாக இருந்தேன். ஆனால் கூடவே பயணம் செய்த தமிழ்க் குடும்பத்தினரின் குழந்தைக்கு பசியேற்பட்டிருக்கும் போல், அழுது கொண்டே இருந்தது. பெற்றோர்களுக்கும் தமிழைத் தவிர வேறு மொழியில் உரையாட பழக்கமில்லை போலும். பிறகு ஒரு வழியாக ஒரு பழச்சாற்றை வாங்கிக் கொடுத்து அமைதிப்படுத்தினார்கள். தமிழில் சேவை வழங்கியிருந்தால் இன்னும் கூட தேவையான உணவை வாங்கியிருக்கக் கூடும்.
அதைவிட முக்கியம் அவசர கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கங்கள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில். எத்தனைபேர் அவசர காலத்தில் இந்த அறிவுப்புகளைப் புரிந்து நடந்திருப்பார்கள்?
இதை நாம் கேட்காமல் எளிதாகக் கடந்துவிடலாம் அல்லது ஏன் இந்தி கற்றுக் கொள்ள வேண்டியதுதானே என்று பண்ணையார்த்தனமாக கேட்கலாம். அவர்களுக்கு என் பதில், இந்தியைவிட தமிழ் எங்கு, எதில் குறைந்தது? எனக்கான சேவையைப் பெற ஏன் நான் இன்னொரு மொழியை கட்டாயமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்?
அப்படி இந்தியை கட்டாயமாக்குவது ஐய்யரின் வாயில் ஆட்டுக்கறியைத் திணிப்பதற்கு ஒப்பானது.
மேலே குறிப்பிட்ட சம்பவம் குறித்து விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு கடிதமொன்று எழுதியிருந்தேன். அந்த கடிதத்திற்கு பதிலளித்த அவர்கள், தவறுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் தவறை சரி செய்ய ஆவன செய்வதாகக் கூறியிருந்தனர்.
நீங்கள் வேண்டினால் மட்டுமே உங்கள் உரிமை உங்களுக்கு. அப்படித்தான் இங்கு ஆட்சியாளர்கள் நம்மை வைத்திருக்கிறார்கள்.
Very good point. Perhaps starting an online petition and spreading through social media would be effective too.
ReplyDeleteThe email reply from SpiceJet looks like a template response that they send to all kinds of complaints.
ReplyDeleteIt Could be. But the intention is to make people aware that, you demand your right to converse in your language.
Deleteதமிழர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயல்.
ReplyDeleteபாராட்டுகள்.