Tuesday, July 21, 2015

காமராஜரும் சாதி அரசியலும்


நண்பர் அழகேசபாண்டியன் அவர்களின் காமராஜர் பற்றி ஜூலை 16 2015 அன்று வெளியிட்ட கருத்து பதிவின் தொடர்ச்சியாக இந்த பதிவு.

அழகேச பண்டியனின் கருத்து :

"எனது பெருந்தலைவர் அறிஞர் அண்ணா மட்டும் தான். குலக்கல்விக்கு எதிராக திராவிடக்கழகமும், அண்ணா தலைமையிலான திமுகவும் உருவாக்கிய பொது பிரச்சாரங்களும் இன்றைக்கு எவராலும் பேசப்படுவதில்லை. தனித்தமிழ் நாடு கோரிக்கையை நேருவிடம் பகடைக்காயாக உருட்டி, காமராசர் தான் சாதித்துக் கொண்ட விசயங்கள் இன்று பேசப்படுவதில்லை. சிவகாமியின் புதல்வர், தாயை தள்ளி வைத்ததைப் போல, சாதியை தள்ளி வைக்க வில்லை. காமராசர் ஆட்சி(பக்தவச்சலம் வழியாக) தொடர்ந்திருந்தால், பொன்னும் வைரமும் கொட்டி நாடு சுபிட்சமடைந்திருக்கும் என்ற கருத்து அபத்தமானது. காமராசரின் சமூகப்பார்வையில் பல கோளாறுகள் உண்டு. அவரது நல்ல நேரம், அன்று அண்ணா இருந்தார். தமிழகத்தின் தொழிற்வளர்ச்சிக்கு காமராஜரின் பங்கு முக்கியமானது என்பதில் மறுப்பேதுமில்லை."

அந்த பதிவில் எமது மறுமொழிகளும் அதற்க்கு அவர் பதில்களும்:

Alagesa Pandian அப்பட்டமாக பணத்தை காட்டி அண்ணாவை மிரட்டிய காமராஜர் எங்கே? காமராஜர் தோற்கக்கூடாது என்று பாடுபட்ட அண்ணா எங்கே? ரெண்டும் எப்படி ஒன்றாக முடியும்?

Perumal Mani 9 ஆண்டு கால காரியங்களை விட அதற்கான காரணங்கள் பெரிது என சொல்கின்றீர்கள். அண்ணா பேசினார் அதனால் காமராசர் செய்தார் என்றும் சொல்கின்றீர்கள். 'கட்சி'யாக பேசுவது எளிது ஆனால் 'ஆட்சி'யில் செய்வது அரிது என்ற அரசியல் அரிச்சுவடி அறியாதவறல்ல நீங்கள்.

  • Like · Reply · 7 · July 15 at 8:38pm
    • Alagesa Pandian Perumal Mani: அரசியலில் மக்களை ஒரு கருத்தை நோக்கி திரட்டுவதை அவ்வளவு கீழாக எடை போட வேண்டாம். காமராஜர் அதை செய்தார், இதை செய்தார் என்றால், அதற்கான சூழல் பலவும் அண்ணாவால் உருவாக்கப்ட்டவை.
  • Perumal Mani எத்தனை மாவட்ட தலைவர்களை காமராசர் தன் சாதியில் இருந்து நியமித்தார்? எத்தனை அமைச்சர்கள்? தன் சாதி அதிகாரிகள் எத்தனை பேருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார்? அரசியல் ரீதியாக காமராசர் எப்படி தன்சாதிக்கு உதவினார்?
    Like · Reply · 2 · July 15 at 8:46pm
    • Alagesa Pandian மாவட்டத்தலைவர்களை நியமித்தால் சாதியை வளர்ப்பவர் இல்லையென்றால் சாதி மறுப்பாளரா? காமராஜர் ஆட்சியில் சாதி அடிப்படையிலான சமரசப்பகிர்வு இருந்தது, அதில் எல்லோருக்கும் பொதுவான பகிர்வு இல்லை. பக்தவச்சலமு, சத்தியமூர்த்தியும், சுப்ரமனியமும் எப்படி தன் சாதிக்கு உதவினார்களோ அப்படித்தான் காமராசரும் உதவினார். ஆதாரம் கொடு.. ஆதாரம் கொடு என்றால், தேடிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.

      • கொங்குநாட்டு தமிழன் உங்கள் இந்த கருத்து பொது வெளியில் அதிகம் கிடைக்காத பதிவு. இதை புரிந்துகொள்ள உங்களுக்கு என்ன தகவல் தெரியுமோ அதை குறைந்தபட்ச கருத்துப் புரிதலுக்காகவாவது நீங்கள் வெளிப்படுத்தவேண்டும். இல்லையென்றால் எல்லோரும் போகிற போக்கில் வீசிவிட்டும் போகும் கல்லைப்போலவே இருக்கும்.
      • Kailash Ganesan Atlast u accepted u dont hv evidence for your allegations dint expected this from u and Elango Kallanai .
      • Alagesa Pandian என்ன எவிடன்ஸ் வேனும்?
      • Alagesa Pandian காமராசரின் சாதி சார்பு பற்றி என் கருத்துக்கு சான்றாக, அடுத்த நிலைத்தகவலைக் காண்க. அதுவும் ஆதாரமாக கொள்ளவில்லையென்றால், அது உங்கள் பாடு. கருத்தை சொன்னேன் என்பதற்காக மேலும் இம்சிக்க வேண்டாம்.
      • Alagesa Pandian திரும்பவும் இங்கே இணைப்பை பகிர்கிறேன்.http://journals.cambridge.org/abstract_S0026749X00010970

        ****
        JOURNALS.CAMBRIDGE.ORG
      • Kailash Ganesan I tried to read the article but its costly to read . You dont need to get permission to write about some one but when you are blaming someone you need to have evidence or evidence should be known to public right . Whats your problem to cite some evidence here if you have it ?
  • கொங்குநாட்டு தமிழன் காமராசரைப்பற்றிய உங்களின் இன்னொரு பார்வைக்கு மூலமென்ன?
    Like · Reply · 1 · July 15 at 8:48pm
    • Alagesa Pandian மூலத்தை விரிவாகத் தான் எழுதனும். என் பதிவில் குறிப்பிட்டுள்ள படி தொழிற்வளர்ச்சியில் காமராஜரின் பங்கை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் காமராஜர் பற்றிய சிறுவிமர்சனமும், கடும் வன்மத்தோடு எதிர்கொள்ளபடுவது ஆபத்தானது.

  • கொங்குநாட்டு தமிழன் உங்கள் விமர்சனம் வன்மத்தோடு எதிர்கொள்ளப்படவில்லை. ஒரு ஆச்சர்யத்துடன் இது உண்மையா என்ற கேள்வியுடன் எதிர்கொள்ளப்படுகிறது. உங்களுக்கு வேறு வழியில்லை, விளக்கமாக எழுதித்தான் தீர வேண்டும்.
  • Alagesa Pandian கொங்குநாட்டு தமிழன்: சாதி ரீதியான இணைப்புகளை அவ்வளவு எளிதாக வெளிக்கொணர முடியாது. அதில் எப்போதும் ஆதாரங்கள் தோல்வி அடையத்தான் செய்யும். போகிற போக்கில் கல் எறிதல் அல்ல இது.
  • கொங்குநாட்டு தமிழன் இது போல ஒரு குற்றச்சாட்டை யார் மீது வேண்டுமானாலும் சொல்லலாமில்லையா? உங்களைப்போன்று சிந்தனையாளர்கள் ஏதுனும் குறிப்பெழுதியிருந்தாலோ அல்லது அவருடன் பழகியவர்கள் எழுதியிருந்தாலோ அதை குறிப்பிடுங்கள்.
    Like · 1 · July 15 at 9:16pm · Edited
  • Jeya Kumar ஆம் ஆதாரம் வேண்டும்
  • Alagesa Pandian மற்ற தலைவர்களுக்கு எதிராக இருப்பதைப் போல வலுவான ஆதாரங்கள் தற்போது என்னிடம் இல்லை. ஒத்துக் கொள்கிறேன். எனக்கு தோன்றிய கருத்தை சொல்லலாம் இல்லையா? அல்லது அதுக்கு யாரிடமாவது முன் அனுமதி வாங்கனுமா?
  • கொங்குநாட்டு தமிழன் நண்பரே உங்களுக்கு தோன்றியதைச் சொல்ல தடையில்லை. ஆனால் அதை மற்றவரும் புரிந்துகொள்ள கூடுதல் தகவல் தரும்போது உங்கள் கருத்து வெளியீட்டின் நோக்கம் நிறைவேறுமல்லவா. என்னுடைய கேள்வியெல்லாம், இப்படியொரு கருத்து உங்களுக்கு வர ஏதோ ஒன்று உங்களுக்கு உந்துதலாக இருந்திருக்கவேண்டும். அது வெறும் Assumption ஆக இருக்குமேயானால் அதற்க்கான காரணிகளை உள்ளடக்கிய பிறகு வெளியிட்டுருக்கலாம் என்பதே என் தாழ்மையான கருத்து.

இந்த உரையாடலில் நண்பர் அழகேச பாண்டியன் யாருக்கும் கிடைக்காத, கேம்ப்ரிட்ஜ் ஜர்னலின் இணைப்பை கொடுத்திருக்கிறார். சரி அப்படி அந்த இதழின் கட்டுரையில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க அதன் பிரதியை வாங்கி படித்ததில் கீழ்க்கண்ட செய்திகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த இதழ் 1970ல் சென்னை கிருத்துவக் கல்லூரியிலிருந்து தெற்க்காசிய படிப்பினை என்ற இதழில் டங்கன் பாரஸ்டர் வெளியிட்டிருக்கிறார். இது ஒரு ஆய்வுக்கட்டுரை என்பதுடன் இந்த கட்டுரையை வெளியிட்ட பாரஸ்டரைப்பற்றி இப்போது தெரிந்து கொள்வது நமது வாதத்திற்க்கு ஒரு பக்கச்சார்பை ஏற்ப்படுத்திவிடும் என்பதால், அவரைப்பற்றிய விவரம் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

காமராஜர் தனது சொந்த சாதி சார்பு நிலையில் அரசியல் செய்தார் என்பது நண்பரின் வாதம், அந்த வாதத்திற்கு துணையாக பாரஸ்டரின் கட்டுரையை பகிர்கிறார். ஆனால் அந்த கட்டுரையில் " காமராஜர் தன் சாதிக்காரர்களுடன் ஒத்து போகததால் கமுதியில் கல்லடிபட்டார்" என்று பாரஸ்டர் குறிப்பிடுகிறார். மேலும் அந்த இதழின் பக்கம் 48ல் காமராஜர் எப்படி தனது சாதிக்கு எதிராக நிலையெடுத்து காங்கிரஸில் இயங்கினார், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு ஆதரவான நீதிக்கட்சிக்கும், நாடார் ஜன சங்கத்திற்க்கும் எதிராக காமராஜர் எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் குறிப்பிடுகிறார்.

மேலும் காமராஜரின் ஆரம்ப காலங்களில் எந்த கொள்கை அவரை காங்கிரஸை நோக்கி இழுத்தது என்ற கேள்வி எழுப்பி அதற்கு "காங்கிரஸின் கொள்கையோ, காந்தியமோ அவரை காங்கிரஸை நோக்கி இழுக்க காரணமில்லை...சமத்துவம் மற்றும் ஏழைகளுக்கான முக்கியத்துவமே காமராசரை காங்கிரஸை நோக்கி செலுத்தியது" என்று விடை கண்டு பிடிக்கிறார் பாரஸ்டர்.

பக்கம் 50ல் "காமராஜர் தேசிய அரசியலில் கோலோச்ச கொண்டிருந்த ஆர்வம் வரலாற்றில் எங்குமே காணக்கிடைக்கவில்லை. அவர் அரசியல் சாசன உருவாக்கத்திலோ அல்லது தேசியக் கொள்கை வடிமைப்பிலோ எந்த ஒரு பங்களிப்பும் செய்யவில்லை" என்றவாறு குறிப்பிடுகிறார்.

இந்த குறிப்பை எழுதும்போது பாரஸ்டர் காமராஜரை ஒரு தேர்ந்த தேசிய அரசியல் தலைவராக உருவகப்படுத்தியிருக்க வேண்டும். காமராஜர் எந்த ஒரு நிலையிலும் தலைமைப் பொறுப்பை எதிர்பார்த்து தன் செயல்பாட்டை அமைத்துக் கொண்டதில்லை. அவர் இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானதுகூட அன்றைய சூழலில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைவர் என்ற காரணத்தாலேயே அன்றி அவரிடம் மெத்த படித்த பண்டிதத்தை எதிர்பார்த்து அல்ல. காமராஜர் பொது சனங்களின், கடைசி குடிமகனின் தலைவர். அவரை ஒரு மேல்தட்டு படித்த பண்டிதராக கருதிக்கொண்டு ஏன் நாட்டின் கொள்கை வடிவமைப்பிலும் அரசியல் சாசனம் எழுதுவதிலும் பங்கெடுக்கவில்லை என்று கேள்வி எழுப்புவது விதண்டாவாதம், உள்நோக்கம் கொண்டது.

பக்கம் 55 ல் "I do not mean in any derogatory way to Kamaraj, and it does not imply that he was using his position as Congress Leader illegitimately to further the interests of his own caste" என்றும் குறிப்பிட்டிருக்கிறார் பாரஸ்டர்.

பக்கம் 60: காமராஜர் நாடர்கள் அதிகம் இருக்கும் பகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிட்டார்.

- காமராஜர் விருதுப்பட்டியில் பிறந்து இயங்கிக்கொண்டிருந்த நிலையில், ஒரு வேட்பாளர் தன்னைச்சுற்றியுள்ள மக்களின் குரலாக இருப்பதற்க்காக விருதுப்பட்டியை தேர்ந்தெடுப்பது எப்படி சாதிய நோக்கோடு பார்க்கப்படும். அவர் விருது நகரில் போட்டியிட்ட காலங்களில் நாடார் சமூகம் நீதிக்கட்சிக்கே ஆதராவாக இருந்தது என்பது நிதர்சனம், அதையும் மீறி அவர் வெற்றிபெற்றது நிச்சயம் அவர் சாதி அடிப்படையில் வெற்றி பெறவில்லை, மாறாக அனைத்து சமூக மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றார் என்றே புரிந்துகொள்ள முடியும்.

கீழ்கண்ட குற்றச்சாட்டுகளையும் பாரஸ்டர் வைக்கிறார்.

  1. 1937 - சாத்துரில் நாடார்களின் வாக்குகளால் வெற்றிபெற்றார்.
  2. 1951-52 - சிரிவில்லிப்புத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதும் நாடார்கள் ஆதரவுடன்.
  3. 1967 - பொதுத்தேர்தலில் தோல்வியடைய காரணம் - நாடார்களுக்கிடையே பிளவு, இளம் நாடார் சமூகத்தார் தி மு க வை ஆதரித்தது
  4. 1969 - இடைத்தேர்தலில் நாகர்கோவில் பகுதியில் வெற்றிபெற்றதுகூட நாடார் சமூகத்தின் ஆதரவில் தான்.(நம்முடைய கேள்வி: ஏன் நாடார் சமூகத்தின் பிளவு இந்த தேர்தலில் அவரை தோற்க்கடிக்கவில்லை?)


காமராஜருக்குப் பின் மேற்ச் சொன்ன தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது உண்மையாய் இருக்கும்போது, காமராஜர் நாடார்களின் தயவில் வெற்றிபெற்றார் என்பது உண்மையில்லை என்று தெளிவாகிறது.

நண்பரின் வழி முறையிலேயே நம்மாலும் பல ஆங்கில எழுத்தாளர்கள் காமராஜர் சாதி அரசியல் செய்யவில்லை என்று எழுதியதை எடுத்துக்காட்ட முடியும். உதாரணமாக,

Robert L. Hardgrave, University of California, Berkeley. Center for South and Southeast Asia Studies அவர் தனது புத்தகத்தில்(The Nadars of Tamilnad: The Political Culture of a Community in Change) பக்கம் 265ல் காங்கிரஸ் கட்சியின் தலைமப்பொறுப்பிற்க்கு காமராஜர் வந்தது காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாகவும், தலைவர் சத்திய மூர்த்தியின் நம்பிக்கையின் பேரிலேயே அன்றி, நாடார் சமூகத்தின் ஆதரவினால் அன்று. பல சந்தர்ப்பங்களில் நாடார் சமூகம் காமராஜருக்கு எதிராகவும், நீதிக்கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டதற்க்கு ஆதாரங்களை அடுக்கிறார்.

மேற்க்குறிப்பிட்ட செய்திகளின் மூலம் காமராஜர் பற்றிய டங்கன் பாரஸ்டரின் கருத்துக்களும், அதனுடன் பல்வேறு சமயங்களில் அவரே முரண்படுவதும் படிப்பவர்களுக்கு புரியும் என்றே நம்புகிறேன்.


முதலில் நாம் சொன்னது போல டங்கன் பாரஸ்டரைப்பற்றிய குறிப்பு:

1962 வாக்கில் இந்தியாவில் கிருத்துவ மதபோதத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னை கிருத்துவக்கல்லூரியில் அரசியல் பற்றி வகுப்பெடுக்கும் பேராசிரியராக ஸ்காட்லாந்து மிசனிரியின் பிரதிநிதியாய் பணியை தொடங்குகிறார். இவரது படைப்புகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் கிருத்துவ மதத்தை பரப்புவதை அடிப்படையாகக் கொண்டது. கிருத்துவ மத போதகம் குறித்து அவரின் கட்டுரைகள் மற்றும் கருத்துக்களின் தொகுதி(Forrester on Christian ethics and practical theology : collected writings on Christianity, India, and the social order) என்ற புத்தகமாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதை படித்தீர்களானால் பாரஸ்டரின் உண்மை முகத்தை புரிந்து கொள்ளலாம்.
இந்து சாதிகளுக்குள் உள்ள பிளவைப் பயன்படுத்தி ஒடுக்கப்படும் சாதியை அரவணைத்து அவர்களை கிருத்துவர்களாக மற்றும் பணியைத்தான் கிருத்துவ மிசனரிகள் கடந்த பல நூற்றாண்டுகளாக செய்து வந்தன.

சமூகங்களுக்கிடைய கருத்து வேறுபாடுகளும் மோதல் போக்கும் இருந்தாலும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஒரு சமயத்தில் காமராஜ நாடார் பக்கமே நின்றார். இந்த சமூக இனக்கம் கிருத்துவ மிசனரிகளின் நோக்கத்திற்க்கு தடையாக இருந்த நிலையில், நாடார் சமூகத்திலிருந்து உருவெடுத்த மக்கள் தலைவரை அவரின் திறமைகள் மற்றும் சாதனைகளை குறைத்து மதிப்பிட்டு கருத்து வெளியிட்டது, எந்த உள்நோக்கமும் இல்லாதது என நம்புமளவிற்க்கு நாம் இன்னும் பாவிகளாய் இருக்கவில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சமுதாயத்தில் மதிப்பை தேடுவது இயல்பு. அதற்கு அவர்கள் தங்கள் சமூகத்திற்குள் அடையாளங்களைத் தேடுவதும் கொண்டாடுவதும் இயல்பு. அதானாலேயே காமராஜர் தன் சாதிக்காரர்களுக்காக அரசியல் செய்தார் என்பது தவறு. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று சாதிகள் மனிதர்களின் அடையாளமாயிருக்கும்போது ஒவ்வொருவரும் தன்னை மற்றவர் மதிக்கும் நிலைக்கு மாற தன் சாதி புகழ்பாட ஆரம்பித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு சமூகம் காமராஜரை கொண்டாடுவதை காமராஜரின் தவறாக சித்தரிப்பது அழகல்ல. இதுபோன்ற குற்றச்சாட்டை எந்த ஒரு தலைவர் மீதும் சுமத்திவிட முடியும். ஆனால் உண்மையென்பது அவையெல்லாவற்றையும் தாண்டி நிற்கிறது.

Sunday, July 19, 2015

மனிதர்கள்... தெய்வங்கள்

சமீபத்தில் நான் பங்கெடுத்துக்கொண்ட இளம் தலைமுறையினருடனான கலந்துரையாடலில் ஒன்றை புரிந்துகொள்ள முடிந்தது. நமது வாழ்க்கை மற்றும் கல்விமுறை மிகவும் புத்திசாலித்தனமான ஏமாளிகளை உருவாக்கியுள்ளது. மிகச்சிறந்த படிப்பாளிகூட தனக்கு தேவையான பொருளைத்தேடுவதில் சமூகத்தின்பால் எந்த அக்கறையும் காட்டாத ஒரு மூர்கத்தனமான வெறியும் ஒற்றை நோக்கை கொண்டதுமான வழிகளையே தேர்ந்தெடுக்கின்றனர். 

இன்றைய தேவையெல்லாம் தனக்கானது மட்டுமானது என்ற அளவுடன் முடிந்துகொள்கிறது. தனது அடுத்த தலைமுறை பற்றிய சிந்தனை அல்லது அக்கறை கூட இல்லாமல் வாழ்ந்து முடித்துவிட துடிக்கிறது. சமீத்திய தலைக்கவச அரசாணை குறித்த விவாதம் பெரும் அயர்வை ஏற்ப்படுத்திவிட்டது. ஒரு சில மெச்ச படித்தவர்கள் இந்த ஆணைக்கு எதிராக செய்யும் வாதம் முட்டாள்தனமானது மட்டுமல்ல அவர்கள் ஒரு சமூகச்சிந்தனையற்ற காலிகளாக உருவெடுத்து நிற்ப்பது கவலையளிக்கிறது. "எப்படி முடிவெட்டிக்கொண்டு தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது?", "அரசு சரியான சாலைகளை போட்ட பின் தலைக்கவசத்தை கட்டாயமாக்கட்டும்" என்பது போன்ற கருத்துக்கள் நம்மை நாமே மீளாய்வு செய்யவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்பதை இடித்துச் சொல்கிறது.

இதைவிடவும் விரக்தியேற்படுத்துவது இளம் மருத்துவ மாணவர்கள் குழுக்களுடன் உரையாடுவது. பெரும்பாலானவர்கள் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை நிலையை குறிக்கோளாகக்கொண்டு இந்த தொழிலை தேர்ந்தெடுத்திருப்பது வேதனையளிக்கிறது. ஓரளவு மதிப்பெண் எடுத்த மாணவர்கள் ஐடி துறையில் கை நிறைய பொருளீட்டும்போது, நல்ல மதிப்பெண் பெற்று நுழைவுத்தேர்வுகளில் தங்கள் அறிவுத்திறமையை நிறுவிப்பெற்ற மருத்துவப்படிப்பு அவர்களை விட அதிகமாக பொருளீட்ட உதவ வேண்டும் என்று மனம்போன போக்கில் மருத்துவ சேவையை ஒரு கொள்ளைத் தொழிலாக பார்க்க தொடங்கியுள்ளனர். திறமையானவர்கள் அதிக பொருளீட்டவேண்டுமென்றால் யார் சமூக அக்கறையுடன் சேவை செய்வது? இலவச மருத்துவம் வேண்டுமென்றால் அரசு மருத்துவமனையை அணுகவேண்டும் என்ற எதிர்வாதம், ஒன்றை புரிந்துகொள்ள உதவுகிறது. இன்றைய கல்வி/வாழ்க்கை முறை ஒவ்வொரு வீட்டிலும் புத்திசாலி கொள்ளைக்காரர்களை உருவாக்குகிறது. 

ஒரு காலத்தில் கல்வியில்லாததால் சமூகத்தில் கொள்ளை, கொலைகள் மற்றும் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது என்ற பார்வைமாறி எங்கெல்லாம் அதிகம் படித்தவர் இருக்கிறாரோ அங்கெ கொள்ளை, கொலை குற்றங்கள் அதிகமாக நடக்கும், அனைத்தும் சட்டபூர்வமாக. 

இந்தியாவில் 1870ல் ஒரு அமெரிக்க பாதிரி குடும்பத்தில் ஏழு சகோதர்களுடன் பிறந்தவர் இதா ஸ்கட்டர் என்ற பெண்மணி. இவரது தந்தை கிருத்துவ அறத்தை பரப்ப இந்தியாவில் தங்கி சேவை செய்து வந்தார். தன் குடும்பத்தில் தன் ஏழு சகோதரர்களும் பாதிரிகளாக மாறி கிருத்துவ அறத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்தபோதும், தான் ஒருபோதும் பாதிரியாக சேவை செய்யப்போவதில்லையென்றும், தான் அமெரிக்காவில் குடியேறி வாழப்போவதாகவும் தன் விருப்பத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அதன்படியே மெஸ்ஸசஸட் பல்கலைகழக்கத்தில் இளநிலைப்படிப்பை முடித்து தன் பெற்றோரை பார்ப்பதற்க்கு 1890ல் இந்தியா வருகை தருகிறார். அப்போது தனது தந்தை பங்கெடுத்துவரும் மருத்துவ சிகிச்சை முகாம்களை ஏதேச்சையாக பார்வையிடுகிறார். அப்போது ஒரு சில கற்ப்பினிகள் குழந்தை பெற்றெடுக்கும் தருவாயில் காத்திருக்கிறார்கள். அவர்கள் உறவினர்கள் தங்கள் மகள் ஒரு பெண் மருத்துவரால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்ற பிடிவாதத்துடன் இருக்கிறார்கள்.



இவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்த இதாவிற்க்கு இந்தியாவில் பெண் மருத்துவர்கள் கிடையாது என்ற நிலையை புரிந்துகொண்ட போது அங்கிருந்த மூன்று கற்ப்பினிப்பெண்கள் உயிரிழந்தனர். இதனால் மிகவும் கவலையடைந்த இதா பெண் மருத்துவர்கள் இந்த சமுதாயத்திற்கு தேவை என்பதை புரிந்து மீண்டும் அமெரிக்காவின் கார்னெல் மெலன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கிறார். பெண்களை மருத்துவப்படிப்பில் ஏற்றுக்கொண்ட முதல் மாணவர் குழுவில் பயின்று மீண்டும் இந்தியா திரும்புகிறார். ஒரு சிறிய அறையில் தன் தந்தை ஏற்ப்பாட்டின்படி பெண்களுக்கு மருத்துவம் செய்கிறார். ஏறக்குறை இரண்டு ஆண்டுகளில் 5000 பேருக்கு மருத்துவம் செய்கிறார். கூடவே தனக்கு உதவியாக இருக்க செவிலிப்பயிற்சி கொடுத்து பல செவிலியர்களையும் உருவாக்குகிறார். பின்நாளில் பெண்களுக்கென பிரத்தியேகமாக மருத்துவம் சொல்லிக்கொடுக்கும் கல்லூரியை உருவாக்குகிறார். தற்போது ஆண்களும் பெண்களும் மருத்துவம் படிக்கும் தலைசிறந்த வேலூர் CMC மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட வரலாறு இதுவே.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இந்த மனித சமுதாயத்திற்க்கு ஆற்றிட ஒரு சிறந்த கடமை இருக்கிறது. அது நிச்சையமாக பொருளீட்டி ஆடம்பரமாக வாழ்ந்து மடிவது இல்லை.

Thursday, July 9, 2015

வட்டமடிக்கும் இந்தியா!

இந்தியா வளர்கிறது, உலக வங்கி இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டுள்ளது என்று நம்பும் என் சகோதரர்களே, இந்த வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

முகலாய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது கிழக்கிந்திய கம்பெனி(இங்கிலாந்து கம்பெனி என்றாலும் இந்தியப் பெயர் இருந்தால் நாம் ஏமாந்து விடுவோமல்லவா?. Unilever எப்படி Hindustan Unileverஆக நம்முடன் புழங்குகிறதோ அதேபோல) நம்முடன் வாணிபம் செய்ய காலூன்றியது. பிரெஞ்சுக்காரர்களும் அதே நோக்கில் இன்னொரு புறம் காலூன்றினார்கள். நமது மன்னர்களுக்குள் இருக்கும் பகையை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஹைதர் அலிக்கு பிரெஞ்சு கம்பெனியும் ஆர்காடு நவாப்பிர்க்கு இங்கிலாந்து கம்பெனியும் அவர்களுக்கிடையில் நடந்த போரில் உதவி செய்தன. ஆர்க்காட்டை தலை நகராகக் கொண்ட நவாப், ஹைதர் அலி உடனான போரில் ஏற்ப்பட்ட பொருட்செலவிற்க்கு கிழக்கிந்திய கம்பெனி 25% வட்டிக்கு கடன் கொடுத்தனர். பின்னாளில் இந்த கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் நவாப் அவருக்கு கீழிருக்கும் பாளையங்களில் வரி வசூலித்துக்கொள்ளும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு அளித்தார். இது தான் முதன் முதலில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு வழி வகுத்த நிகழ்வு. பின்னாளில் அவர்கள் ஒரு அரசை அமைக்க இது வழி வகுத்தது. அவ்வாறு வரி வசூல் செய்யச் சென்ற போது "யாரோ வாங்கிய கடனுக்கு நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டுமென்று" எதிர்த்தவர் தான் வீர பாண்டிய கட்டபொம்மன். இதில் சுவரஸ்யமான தகவல் (1)அவ்ரங்க சிப்பின் மிகப்பெரும் பொற்க்கலஞ்சியக் கப்பலை கடலில் கொள்ளையடித்து அவரின் பொருளாதார வளத்தை அழித்தது "எவரி" என்ற இங்கிலாந்து கடற்க்கொள்ளையனே.(2) இன்றும் இங்கிலாந்துக்கு உதவிய நவாப்களுக்கு வரியில்லாத பென்சன் நமது அரசால் வழங்கப்படுகிறது. அவர்கள் பிள்ளைகளுக்கு இங்கிலாந்தில் படிக்கவும் வசிக்கவும் உரிமை ஏற்ப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இவை அத்தனையும் நம் அரசியல் சாசனத்தின் மூலம் வழி செய்யப்பட்டவை.

அன்றைய கிழக்கிந்திய கம்பெனி இன்றைய உலக வங்கி மற்றும் ஐ எம் எப் ஆக உருவெடுத்திருக்கிறது. அவர்கள் ஒரு நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு கொடுக்கும் கடன்களுக்கு வட்டியுடன் சில நிபந்தனைகளும் விதிப்பார்கள். அந்த நிபந்தனைகள் தான் நமது அரசுகள் கொண்டுவரத் துடிக்கும் நில அபகரிப்பு சட்டம், இலவச மின்சார நிறுத்தம், பன்னாட்டு கம்பெனிகளுக்கு வரி விலக்கு, பல்லாண்டு ஒப்பந்தங்கள், அபாயகரமான தொழிற்ச்சாலைகளை இந்தியாவில் உருவாக்கிக் கொள்ளும் அனுமதிகள், இவற்றை எளிதாக்கும் சட்டங்களை உருவாக்குதல் அல்லது திருத்துதல் (இழப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்ப்படாத வண்ணம் எழுதப்படும்).

வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டன், வெள்ளையர்கள் சரக்கு உயர்ந்த சரக்கு என்று நம்மை தொடர்ந்து நம்ப வைப்பதன் மூலம் அவர்களின் சரக்குகளுக்கு தொடர்ந்து சந்தையை விளம்பரங்கள் மூலம் தயார்படுத்திக்கொள்கிறார்கள்.

உலகப்பொருளாதார பார்வையில்லாத நம்மிடம் ஏதாவது ஒரு புள்ளி விபரத்தை காண்பித்து வளருகிறோம் என்ற மாயையில் தொடர்ந்து நம்மை வைத்திருப்பது அவர்களின் முதலுக்கு லாபம். கிராமங்கள் மற்றும் உள்நாட்டு வளங்களை மதிக்காமல் வெளியில் கையேந்திக்கொண்டிருக்கும் வரை நாம் இந்த அடிமை வட்டத்திலிருந்து மீளப்போவதில்லை. இன்றைய நவாப்கள்  -அம்பானி, அதானி, மிட்டல்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளுவதும் அவசியம்.

இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், நமது நாடு எதை நோக்கி செல்கிறது, என்ன வளர்ச்சியடைகிறது என்று.


Tuesday, July 7, 2015

சாதியை ஒழிக்க முடியுமா?

கேள்வி: சாதியை ஒழிக்க முடியாதா?

பதில்: இதற்க்கு விடை காண சமகால மன நிலையிலிருந்து சற்று மாறுபட்டு சாதியைப் பற்றி நாம் ஆராய வேண்டும். ஒரு காலத்தில் தொழில் அடிப்படையில் பகுக்கப்பட்டவர்கள் அது தொடர்பான பெயரில் அழைக்கப்பட்டனர். பின் அது அடையாளமாகிப்போய் இந்த சாதி இப்படி என்று ஒரு வரையறை செய்யப்பட்டது. பின்பு இந்த சாதி பொருளாதாரத்தில் இப்படி, அப்படி அவரின் பண்பு, குண நலன்கள் இப்படி இருக்கும் என ஒரு அனுமானம் ஏற்ப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இன்றைய சாதிப் பாகுபாடும் சக மனிதன் மீதான ஒரு அனுமானமும் அவரை மற்றவரிடத்திலிருந்து பிரித்து விடுகிறது. உண்மையில் சாதி வெறும் 'சாதி'யின் பெயரில் இல்லை. சாதி - பகுப்பு - பல்வேறு இடங்களில் இருக்கிறது. உதாரணம்: பள்ளியில் மதிப்பெண்கள் அடிப்படையில் சுட்டி-மந்தம்-மக்கு, அலுவலகங்களில் கடை நிலை ஊழியன், மேலாளர், மேற்ப்பார்வையாளர் என்பது போல். மேற்க்கூறிய சாதிகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தகுதியை வளர்த்துக்கொள்வதன் மூலம் மாறிக்கொள்ளலாம். ஆனால் நமது சாதி நிலை மாற்ற முடியாததாயிருக்கிறது. ஒரு காலத்தில் குறிப்பிட்ட சாதி மக்கள் செய்யும் தொழில் இப்படி இருக்கும் அதனால் அவர்கள் அந்த சாதி என்றார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எல்லா சாதியினரும் எல்லா வேலைகளும் செய்கின்றனர். உதாரணம் உயர்சாதிப்பெண் பிணமெரிக்கும் வேலை செய்கிறார், முன்னொருகாலத்தில் வேளாண்மை செய்தவர் குடும்பம் இன்று பெங்களூரில் மிகப்பெரிய முடிதிருத்தும் நிலையம் நடத்துகிறார். இங்கு உழைப்பவன், உழைக்காதவன் என்ற இரண்டு சாதிதான் உண்மையில் இருக்கிறது. சாதிப்படி நிலைகள் அகற்றப்படவேண்டும் அல்லது சாதியை அதன் அடையாளத்திலிருந்து பிரித்து யாரும் எந்த சாதியையும் அடையாளமாக்கிக்கொள்ள வழியேற்ப்படுத்துவதைத்தவிர வேறு வழியில்லை. சாதிக்கொடுமை உயர்சாதியிடம் மட்டுமில்லை, அது தாழ்ந்தசாதி என்று பிரகடனப்படுத்துவதிலிருந்து அதை வைத்து வாழும் தலைவர்கள் வரை உயிரோடுதான் உள்ளது. ஒரு தாழ்ந்த சாதி கோடீஸ்வரர் ஒரு உயர்ந்த சாதி கைவிடப்பட்ட பெண்ணை கைப்பிடிக்க எவரும் குறுக்கே நிற்ப்பதில்லை என்பதிலிருந்து சாதியின் அடிப்படையை புரிந்து கொள்ளலாம்.