நேற்று:
பக்கத்து ரூம் நண்பர்கள் :அவனுக்கென்னப்பா ஒன்னாந் தேதியான ரொக்கமா இருபதாயிரம், முப்பதாயிரம் சம்பளம் வாங்குறான்.
---------
ஆட்டோகாரர் : சார்.. பாத்து ஒரு நூறு ரூபா கூட போட்டு குடு சார். டைடல் பார்க்ல வேலை செய்யற... ஆட்டோக்காரங்கிட்ட கணக்குப் பாக்கிறயே சார்.
சாப்ட்:(மனதுக்குள்) டைடல் பார்க் முன்னாடியே இறங்கி கொஞ்ச தூரம் நடந்து வந்திடனும்.
-----------
டாக்டர்: என்ன வேலை பாக்குறீங்க...
சாப்ட்: (மனதுக்குள்)பல் வலிக்கு மருந்து குடுக்க நான் என்ன வேலை செய்யறேன்னு சொல்லனுமா.... சாப்ட்வேர் இஞ்ஜினியர்..
டாக்டர் : அப்படிங்களா.... இதுல உங்க பல்லு வலிக்கு மருந்து எழுதிருக்கேன். பீஸ் மூனாயிரம்.
சாப்ட் : (மனதுக்குள்)நெஞ்சு வலிக்குதுங்க டாக்டர்.
------------
போக்கு வரத்து காவலர் : ஏப்பா இவ்வளவு வேகமா வண்டிய ஓட்டிடு எங்க போற.(மத்திய கைலாஸ்-ல் நின்னுட்டு.)
சாப்ட் : சார்.. ஸ்பீடு லிமிட்ல தான் வந்தேன். (அதான் ஐடி கார்ட பாத்துட்டீங்கள்ள.. வண்டிய தள்ளிட்டு வந்தாலும், ஓவர் ஸ்பீடுன்னு புடிப்பீங்க..நேத்து லேட் நைட் வேலை செஞ்சது, காலைல கிளையன்ட் மீட்டிங்குன்னு சொன்னா விட்டுடவா போறீங்க..)
போக்கு வரத்து காவலர் : பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க... எந்த கம்பெனி.. சரி ஒரு 500 ரூபா பைன் கட்டிருங்க.
சாப்ட் : பணத்தை கொடுத்து விட்டு. (மனதுக்குள்)இனிமேல் இந்த ஐ.டி கார்ட வெளிய மாட்ட கூடாது..
------------
வீட்டு புரோக்கர் : சார்.. இப்பல்லாம் வீடு கிடைக்கறதே பெரிய விசயம். நீங்க சாப்ட்வேர்ல ஒர்க் பண்றேன்னு சொல்றீங்க... உங்களுக்காக ஒரு வீடு பாத்து வச்சுருக்கேன். வாடகை பதினைஞ்சாயிரம் ரூபா. கமிசன் எழாயிரத்து ஐநூறு.
சாப்ட் : (மனசுக்குள்..) இதுக்கு முன்னாடி குடியிருந்தவர் மூவாயிரத்து ஐநூறு ரூபாதான் குடுத்துட்டு இருந்தாருன்னு பக்கத்து வீட்ல சொல்றாங்க.
----------
பெண்வீட்டார் : மாப்ளை சாப்ட் வேர் இஞ்ஜினீர்ங்கரதால நாங்க வேற எதப்பத்தியும் கவலை படலை. இந்த 100 சவரன் நகையும், காரும், ரொக்கம் 10 லட்சம்தான் என்னால என் பொண்ணுக்கு செய்ய முடியும்.
சாப்ட்: (மனதுக்குள்..) எனக்கு பொண்ணை குடுக்கிறீங்களா? இல்லை என் வேலைக்கு பொண்ணை குடுக்குறீங்களா?
... சரி இவ்வளவு தொந்தரவு பண்றதால சரி.. உங்க பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.
------------
இன்று.... நாளை..
இன்று எங்கே?
ReplyDelete//நாமக்கல் சிபி said...
ReplyDeleteஇன்று எங்கே?//
நாளை
இன்று காணோம்
ReplyDeleteஅடுத்த பதிவில் வருமோ,
அதை எழுதும் போது கூடவே சாப்ட்வேர் கம்பெனியின் மனித வள துறை நிலைமையும் எழுதுங்க.
அன்று அடிமை மாத்ரி இருந்த அவர்கள இன்று வீறு கொண்டு எழுந்து விட்டார்களா.
குப்பன்_யாஹூ
நாமக்கல் சிபி said...
ReplyDeleteஇன்று எங்கே?
வருகைக்கு நன்றி...
இன்று நாளை இன்னும் வரவில்லை...
குப்பன்_யாஹூ said...
இன்று காணோம்
அடுத்த பதிவில் வருமோ,
அதை எழுதும் போது கூடவே சாப்ட்வேர் கம்பெனியின் மனித வள துறை நிலைமையும் எழுதுங்க.
அன்று அடிமை மாத்ரி இருந்த அவர்கள இன்று வீறு கொண்டு எழுந்து விட்டார்களா.
நிச்சயம், குப்பன் யாஹூ