Thursday, October 23, 2008

விடுதலையும் சனநாயகமும்

விடுதலை என்பது யாராலும் அடிமையாக்கப் படாமல் இருப்பது மட்டுமல்ல. தான் நினைத்ததை சொல்லவும், செய்யவும், செயலால் வரும் விளைவை அனுபவிப்பதும், கொண்டாடுவதும் கூட.

மக்களாட்சியில் மக்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும். முக்கியாமான முடிவுகள் எடுப்பதில் தொடங்கி அயலுறவுக் கொள்கை வரை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மேல் சொன்ன இரண்டும் உலகின் மிகப்பெரும் விடுதலை அடைந்த மக்களாட்சி நாடான இந்தியாவுக்குப் பொருந்துமா என்பது இந்திய குடிமக்கள்தான் சிந்திக்கவேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல், அதில் பெரும்பாண்மை மக்கள் வாக்களித்து தேரிவு செய்யும் நபரே முதலமைச்சர், பிரதம மந்திரி(வடக்கு சார்ந்த பதவி என்பதால் வடமொழி, மற்றபடி இரண்டும் ஒரே கருப்பொருளை கொண்டுள்ளன).

இவர்களின் பதவியின் பெயரிலேயே யார் இவர்கள் என்பது விளங்கும். ஆனால் முதல் அமைச்சரும், பிரத மந்திரியும் மன்னனாக முடியாது. மன்னன் சொல்லும் முடிவுகள் மற்றும் திட்டங்களை செயல் படுத்த வேண்டும். அப்படியா இருக்கின்றது இன்றைய சனநாயகம்? இந்தியா விடுதலை பெற்ற 1947 களில் வேண்டுமானால் மக்களின் கருத்தை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கேட்பது சரியாக இருந்திருக்கலாம்.

வெண்ணிலாவிற்கு விண்கலம் அனுப்பிய 2007லில் மக்கள்(மன்னன்) கருத்தை முக்கியமான முடிவெடுக்கும் நேரங்களில் கேட்பது ஒன்றும் நடக்காத செயலில்லை. சரி.. அப்படி முடியாமல் இருக்குமானால், இதே மக்களாட்சிதான் இனி வரும் காலங்களிலும் இருக்குமா?
ஐம்பது ஆண்டுகாலம் மக்களின் பெயரால் மண்ணையும் மக்களின் வரிப்பனத்தையும் தின்ற இந்த அமைச்சர்கள் உண்மையான மக்களாட்சியை கொண்டுவர என்ன முயற்சி செய்துள்ளனர்?.அல்லது இனிமேல் செய்வதற்கான திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா?

இங்கு காஷ்மீரில் ஒரு சட்டம், ஒரிஸ்ஸாவில் ஒரு சட்டம், தமிழகத்தில் ஒரு சட்டம். காஷ்மீரில் ஹூரியட் பிரிவினை பேசினால், அது பேச்சு சுதந்திரம். தமிழ்நாட்டில் பேசினால் தேச துரோகம். அப்படியானால், காஷ்மீர் இந்தியாவின் அங்கம் இல்லை என இந்திய அரசே ஒத்துக்கொள்கிறதா?.

இங்கு சட்டம் என்பது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் ஆயுதமாகவே மாற்றிவிட்டனர் இந்த அமைச்சர்கள். மகுடம் தரிக்க வேண்டிய மன்னன்(மக்கள்) மண்டியிட்டு கிடக்கிறார்கள்.

இருக்கும் வேட்பாளர்களில் எந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மட்டுமே மக்கள் தீர்மானிக்க வேண்டியது, இந்த சனநாயகத்தில். யாரை வேட்பாளரக நிறுத்த வேண்டும் என்பது கட்சிகளின் தலைவர்கள்தான், அவரின் செல்வாக்கை(!) பொறுத்து, நியமனம் செய்வார்கள். தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளார் மக்கள்(மன்னன்) தலையெழுத்தைய மாற்றக்கூடிய வல்லமை பொறுந்திய அமைச்சர்களாகின்றனர். இது தான் மக்களாட்சியா?

காலையில் எட்டு மணிக்கு தொடங்கி மாலை ஆறுமணி வரையும், அதற்கு மேலும் அலுவலகத்தில் வாழ்ந்துவிட்டு மீதி நேரத்தை தொலைக்காட்சிப் பெட்டியில் கழிக்கும் மக்களாட்சி மன்னர்கள் வாழ்க்கை முறையால், எதிர்காலத்தில் யாராவது ஒருவர்க்கு அடிமையாகவே இருந்துகொண்டு தன் வாழ்க்கையையும், தன் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையையும் அடகுவைத்து விடவேண்டியதுதான்.

தன்னுடைய தலையெழுத்தை தானே தீர்மானிக்க முடியாதவனை அடிமையென்ற சொல்லை தவிற வெறெந்த சொல்லும் அடையாளப்படுத்தாது. அப்படித்தான் இந்த உலகின் மாபெரும் மக்களாட்சி நாட்டின் குடிமக்கள் இருக்கின்றனர். சிந்திக்க சொல்லில் கொடுத்தவர் தந்தை பெரியார். நேர்மையின் இலக்கணம் கர்ம வீரர் காமராசர். அறிவின் ஊற்று அண்ணா. இவர்கள் காலத்தில் வேண்டுமானால் உண்மையான மக்களாட்சி இருந்திருக்கலாம். இன்றைக்கு ஆட்சியாளர்கள் மக்களை(மன்னனை) ஆணையிட(வாக்களிக்க) கூட அனுமதிக்காமல் அடித்து வீட்டுக்கு அனுப்பி, அவன் பெயரில் அவர்களே அதை செய்து கொள்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் மன்னனை(மக்களை) மதியிழக்க, மது(டாஸ்மாக்), மாது(மானாட மயிலாட)மற்றும் இன்ன பிற இலவசங்கள் கொடுத்து போதை யேற்றுகிறான்.

இதையெல்லாம் எதிர்க்க மக்கள் ஒன்று திரண்டால், சாதி, மொழி, மதம் என்று சொல்லி ஒரு ஊசியை போட்டு படுக்கவைத்து விடுகிறான்.இன்றைய இளவரசர்களோ, நாடக நாயகர்கள் பின்னாலும், மேற்கத்திய கலாச்சார மோகத்தினாலும் தான் யாரென்று தெரியாமலே அழிந்து போகிறான். இவர்கள் விழிக்காத வரை இந்த அமைச்சர்கள் தான் அமைச்சராட்சி ந்டத்திக் கொண்டிருப்பார்கள்.

சனநாயகம், அது இறந்து விடவில்லை, ஆனால் அது இந்தியாவில் இல்லை.

2 comments:

  1. தீபாவளி வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. Intha vaara kalaignar comedy

    "Eeala Thamilar urimaikkaaga Thi..moo.kaa... nadalumandra uruppinar patahviyayi rajinamaa seivom" - News dated Oct 10th

    "Eeala thamilar pirachinayil nadalumandra uruppinar rajinaamavai otthi vaikkumaru Pranab mukharjee vendugol viduthathal, raajinaama othivappu" - News dated Oct 26th

    Paamara thamilanin santhegam itho "Pranab mukharjee yenna thamilina thalaivaraa ? illai Eeala thamilargalin pirathinithiyaa ?"
    Kalaignare.... innum evvalavu murai than thamilanai muttaalakkum ungal muyarchigal arangerum...?

    Thamilane...vilithiduga...

    ReplyDelete