உங்கள் குழந்தைகள் எந்த மாதிரி சமூகதில் வாழவேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள். ஆரோகியமான, நேர்மையான, ஆக்கபூர்வ சிந்தனை கொண்ட சமூகதில் வாழ நீங்கள் தான் அந்த சமுகதிற்க்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். பிறசவதிலுதுந்து, பள்ளியில் சேர்க்கையிலிருந்து தொடங்குகிறது இந்த சமூகதின் அவலம். நம்மை போலவே நமது குழந்தைகளும் இந்த ஊழல் சமுதாயத்தில் சிக்கி தவிக்காமல் தவிர்த்திட நாம் மாற்றத்தை நிச்சயம் கொண்டு வரவேண்டும். சரி எப்படி ஆரம்பிப்பது...எங்கு ஆரம்பிப்பது.. இந்த கேள்விகள் எழுந்தால் நிச்சயம் நாம் அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டோம்.
இந்த தேசத்திலுள்ள எல்லா மக்களையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை எதுவாக இருக்கும் என்று தேடினால் அது மோசமான நிர்வாகத்தால் வந்த ஊழல் தான். உங்களுக்கு பழகிய சின்னம் தெரிந்த வேட்பாளர் என்பதெல்லாம் தாண்டி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு மாற்றத்தை வரவேற்க தயாராகுங்கள்.
நேர்மையில்லாத வளர்ச்சி, மனிதாபிமானமில்லா அரசை நமது தேர்வாக வைத்தால் மாற்றம் வருவதற்கான காலம் சற்று தள்ளிபோகுமே தவிற, அதை யாராலும் தடுத்து விட முடியாது..நமது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆசை நமது பெற பிள்ளைகளுக்கு கிடைக்கும்.. ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது..நீங்கள் விரும்பாவிட்டாலும்..
No comments:
Post a Comment