அரை நூற்றாண்டு காலம் தமிழர்களை ஆண்டு அவர்களின் போராட்ட குணத்தை மழுங்கடித்து வைத்ததை முடித்து வைத்து, தமிழர்களை உணர்வு ரீதியாக எழுச்சி பெறச்செய்து ஒருங்கிணைத்தது ஏதோ ஒரு சக்தி. ஆனால் போராட வந்தவர்களுக்கு அரசியல் தெளிவும், நோக்கத்தை அடையும் வழிகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது.
தேசியகீதம் பாடினால் காவலர் தடியடியில் தப்பித்துக்கொள்ளலாம்,
பஞ்சாயத்து தீர்மானம் உச்ச நீதிமன்ற தீர்மானத்தைவிட சக்தி வாய்ந்தது,
ரேசன் கார்டை கிழித்துவிட்டால் இந்திய குடியுரிமை போய்விடும், அதனால் இந்திய சட்டங்கள் கட்டுப்படுத்தாது,
போன்ற பைத்தியகார பிதற்றல்கள் அவர்களின் அரசியல் அறிவுப்பற்றாக்குறையையே காட்டுகிறது. வாட்சப்பிலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியாது, நூலகங்களும், செய்தித்தாள்களும் இன்னும் நமக்காக உயிரோடு இருக்கிறது. அடிப்படை அரசியல் சித்தாந்த அறிவு, அரசியல் கட்டமைப்பு பற்றிய குறைந்தபட்ச அறிவு இல்லாமல், வாட்சப்பில் வந்ததை மட்டுமே எடுத்துக்கொண்டு உளருவது உதவாது. ஏனென்றால் இன்றை அரசியல்வாதிகளை வெல்ல, அவர்களைவிட அரசியல் அறிவு அதிகம் பெற்றிருக்க வேண்டும்.
வேகமும், விவேகமுமே வெற்றியைக் கொடுக்கும்.
No comments:
Post a Comment