இளைஞர்களின் போராட்டம் வெற்றியடைய
உடனடியாக ஒரு பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசுப் பிரதிநிதிகளுன் இவர்களே பேச வேண்டும்.
தமிழகம் முழுதும் உள்ள போராட்டக்காரர்களை ஒருங்கிணைக்க ஒரு குழுவும், அவர்கள் தொடர்ந்து அனைத்து மாவட்டக் குழுக்களுடன் நேரடித்தொடர்பில் நகர்வுகளை திட்டமிடவேண்டும். இது போராட்டம் திசை திருப்பப்படுவதிலிருந்தும், தவறான வழிகாட்டுதலில் இருந்தும் காக்கும்.
நோக்கம் : ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கம்.
அதை அடையும் முறையை கண்டுபிடியுங்கள். சட்டத்தை பாராளுமன்றமும், பிரதமருமே கொண்டுவர முடியும். அதைச் செய்ய அவர்களுக்கு அழுத்தம் தரக்கூடிய அற வழியைத் கண்டுபிடியுங்கள். உதவிக்கு அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், முடிவுகளை நீங்களே எடுங்கள்.
வெறும் அடையாளப் போராட்டமாக ஒரு நாள் கூடி மறு நாள் கலைவதில் சிக்கலுக்கு தீர்வு கிடைக்காது. தீர்வை நோக்கி நகரவேண்டிய கட்டம் இதுதான்.
No comments:
Post a Comment