நேற்று கான்சஸின் ஓலெத் நகரத்தின் பார் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிரீனிவாசு மற்றும் அலோக் என்ற இரு இந்தியர் உட்பட மூன்று பேரை ஆடம் என்ற அமெரிக்கர் பார் ஒன்றில் சுட்டுவிட்டு ஓடித் தப்பியுள்ளார். பின் 6 மணி நேரத்திற்குப் பிறகு சம்பவம் நடந்த இடத்திலிருந்து 70 மைல் தொலைவில் வேறொரு பாரில் ஆடம் பிடிபட்டுள்ளார். அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது. விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பும் களமிறங்கியுள்ளது.
சமீபத்தில் சிரீனிவாசு உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது. அலோக் மற்றும் இன்னொரு அமெரிக்கர் காயங்களுடன் உயிர் தப்பியதாகத் தெரிகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுசுமா சுவராசு தனது இரங்கலைத் தெரிவித்தது தான் சிரீனிவாசுவின் குடும்பத்தினருடன் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளதாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தியர் இருவரும் கார்மின் என்ற ஜிபிஎஸ் தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று பாரில் விளையாட்டு போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த போது சலசலப்பேற்பட்டு வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதில் ஆடம் தம்மைவிட நீங்கள் எந்தவகையில் உயர்ந்தவர் என்று கேட்டும் தமது நாட்டைவிட்டு வெளியேறுமாறு சிரீனிவாசிடம் கத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஆடம் மெரைனில் பணியாற்றியவர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. அதிபர் டிரம்ப் பதவியேற்றபின் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதுடன் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் இங்குள்ள அமெரிக்கர்களைவிட உயர்ந்த வாழ்க்கை வாழ்வதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். அதற்கு அவர்களின் வேலை வாய்ப்பு, ஊதியம், வெளியே தெரியுமாறு பயன்படுத்தும் வாகனம், வீடு, நகைகள் போன்றவை காரணமாக இருக்கிறது. அலுவலகங்களில் கூட இந்தியர்களின் முன்னேற்றம், பதவி, ஊதியம் குறித்து அமெரிக்கர்களுக்கு பொறாமையுண்டு. பதவி உயர்வு போன்ற தருணங்களில் அமெரிக்கர்களுக்கு இந்தியர் மேல் பொறாமை ஏற்படுவதைப் பார்ப்பது சாதாரணம்.
இந்த இக்கட்டான காலத்தில் இந்தியர்களோ வேறு வெளி நாட்டவரோ தமது உயிரையும் உடமையையும் பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.
1. தற்போதைய காலகட்டம், அமெரிக்காவில் வெளிநாட்டவருக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்பதை உணர்க.
2. மக்கள் அதிகம் கூடுமிடங்கள், பார், பப் போன்ற கேளிக்கை விடுதிகளில் மது அருந்திய பின் மனிதர்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பது இயல்பு. அந்த இடங்களில் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். முடிந்தால் சிலகாலம் அந்த இடங்களைத் தவிர்க்கவும்.
3. பொது இடங்களில் அரசியல் பேசுவதைத் தவிர்க்கவும்.
4. வம்புச் சண்டைக்கு யாரேனும் வந்தால், சண்டையில் பின்வாங்கிச் செல்லுங்கள். ஒருபோதும் சண்டையில் ஈடுபடாதீர்கள்.
5. பையிலோ சட்டையிலோ நிறைய பணம், கடனட்டைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றிரண்டு போதுமானது.
6. சுத்தமாகப் பணமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து டாலர்கள் வைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் துப்பாக்கியைக் காட்டி காசு கேட்பவர்களுக்கு கையிலிருப்பதைக் கொடுத்துவிட்டு தப்பித்துக் கொள்ள வசதியாக இருக்கும். கையில் காசே இல்லையென்னும் போது உங்களிடம் காசு கேட்டு மிரட்டுபவர் ஏமாற்றத்திற்குள்ளாகி எதுவும் செய்யலாம். இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
7. ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதிக நகைகளுடன் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
8. ஆடம்பரக் கார்களை பொருளாதார வித்தியாசம் அதிகம் உள்ள பகுதிகளில் பயன்படுத்துவதைத் தவிற்கவும்.
9. முடிந்த அளவு சமூகத்துடன் இணக்கமான உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்திய சமூகத்துடன் உறவை வழுப்படுத்துங்கள். மாநில சங்கத்தில் பங்கேற்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள்.
10. குழந்தைகளுக்கும் பள்ளியில் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க பழக்குங்கள்.
11. அமெரிக்கர்களிடம் போட்டியோ, சண்டையோ ஏற்படும் சூழலில், குறிப்பாக சூழல் நமக்கு சாதகமில்லாதபோது, தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாக வெளியேறிவிடுங்கள்.
12. சமூக ஊடகங்கள், பொது வெளிகளில் இனவெறுப்பு தொடர்பான உரையாடல்களத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
13. சேமிப்புகளியும், கைக் காசைப் போட்டுச் செய்யும் பெரும் முதலீடுகளையும் சிலகாலம் தவிர்க்கவும்.
இது நாம் வாழ வந்த நாடு. இங்கு நம்மைவிட இங்கேயே வாழ்பவர்களுக்கு அதிக முன்னுரிமை உண்டு. அவர்களின் வாழ்க்கை நம்மால் பாதிக்கப்படும் என்று அவர்கள் நினைக்கும்போது இயல்பாக வெறுப்பு எழுவது சாதாரணம். மனிதனும் ஒரு சமூக விலங்குதான். தனக்கு பாதுகாப்பில்லாமல் அச்ச உணர்வை அடையும்போது பாதுகாப்பையும், தன்னிருப்பையும் உறுதி செய்துகொள்ள Wildஆக நடந்து கொள்வது எதிர்பார்க்கக் கூடியதுதான்.
இப்போதைய நிலமையில் பாதுகாப்பிற்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து இணக்கமாக வாழ வேண்டிய அவசியம் வெளிநாட்டிலிருந்து வந்து வசிப்பவர்களுக்கு எப்போதையும் விட இப்போது தேவை அதிகமாக உள்ளது.
இனவெறியர்களை எதிர்கொள்ள சிக ஆலோசனைகள்
the same things apply to the people who is living in TN from other states
ReplyDeleteஇது உலகத் தமிழர்களுக்கும் அனைத்து மாந்தருக்கும் பொருந்தும். பதிேவற்றத்துக்கு நன்றி!
ReplyDeleteமிக சிறப்பான பதிவு."இது நாம் வாழ வந்த நாடு. இங்கு நம்மைவிட இங்கேயே வாழ்பவர்களுக்கு அதிக முன்னுரிமை உண்டு. அவர்களின் வாழ்க்கை நம்மால் பாதிக்கப்படும் என்று அவர்கள் நினைக்கும்போது இயல்பாக வெறுப்பு எழுவது சாதாரணம். மனிதனும் ஒரு சமூக விலங்குதான்".மிக பெரிய சித்தான்தத்தை ரொம்ப எளிமையா புரிய வைத்துள்ளீர்கள்.இந்த உலகத்துக்கு முதலாளிதுவத்தையும் உலகமயத்யையும் குடுத்த இங்கிலாந்து அமெரிக்கா எல்லாம் இப்ப தேசிய பாதைக்கு திரும்பும் தருணம்.இத ஒபாமா புரிஞ்சு செய்யாம விட்ட விளைவு தா இப்ப வெள்ளை அமெரிக்கர்களிடம் கோபமா வெறியா வெளிப்படுது..இத இப்ப சரியா புரிஞ்சு செய்யுர நாடு சவுதி அரேபியா.இன்னும் ஜெர்மனி போன்ற நாட்டு மக்களும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்கும்போது இது இன்னும் வேகம் பெறும்
ReplyDelete**நேற்று கான்சாஸ் நகரத்தின்**
ReplyDeleteKansas (KS) is a state, Olathe is the city at which this "hate crime" had happened. It is a terrible death. One American has tried to help them out and got hurt too. :( Let us not overlook that part.